-
கடவுளோடு நடக்கையில் ‘நியாயத்தைக் கடைப்பிடியுங்கள்’யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
-
-
4. யெகோவா தமது நீதியான தராதரங்களின்படி நாம் வாழ வேண்டுமென எதிர்பார்ப்பது நமக்கு எப்படி தெரியும்?
4 சரி எது தவறு எது என்பதன் பேரிலான தமது தராதரங்களின்படி நாம் வாழ வேண்டுமென யெகோவா எதிர்பார்க்கிறார். அவரது தராதரங்கள் நீதியும் நியாயமுமானவை என்பதால் அவற்றின்படி நாம் நடக்கும்போது நீதியையும் நியாயத்தையும் நாடுகிறோம். “நல்லது செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நியாயத்தைத் தேடுங்கள்” என ஏசாயா 1:17 சொல்கிறது. கடவுளுடைய வார்த்தை ‘நீதிநெறிகளைத் தேடும்படி’ நம்மை அறிவுறுத்துகிறது. (செப்பனியா 2:3) ‘கடவுளுடைய விருப்பத்தின்படி, உண்மையான நீதிக்கு ஏற்றபடி உருவாக்கப்பட்ட புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளும்படி’ அது நம்மை உற்சாகப்படுத்துகிறது. (எபேசியர் 4:24) உண்மையான நீதி—மெய் நியாயம்—வன்முறைக்கும் அசுத்தத்திற்கும் ஒழுக்கக்கேட்டிற்கும் இடமளிப்பதில்லை; ஏனெனில் இவை பரிசுத்தமானதைக் கெடுக்கின்றன.—சங்கீதம் 11:5; எபேசியர் 5:3-5.
-
-
கடவுளோடு நடக்கையில் ‘நியாயத்தைக் கடைப்பிடியுங்கள்’யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
-
-
6 நியாயத்தைத் தேடுவது பாவமுள்ள மனிதர்களுக்கு சுலபமல்ல. நாம் பழைய சுபாவத்தையும் அதற்குரிய பழக்கவழக்கங்களையும் களைந்துபோட்டு புதிய சுபாவத்தை அணிந்துகொள்ள வேண்டும். புதிய சுபாவம் திருத்தமான அறிவினால் ‘புதிதாகிக்கொண்டே’ வருகிறது என பைபிள் சொல்கிறது. (கொலோசெயர் 3:9, 10) ‘புதிதாகிக்கொண்டே’ என்ற வார்த்தை, புதிய சுபாவத்தை அணிந்துகொள்வது தொடர்ச்சியான ஒன்று என்பதையும் அதற்கு ஊக்கமான முயற்சி தேவை என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. நாம் சரியானதை செய்ய எவ்வளவுதான் கஷ்டப்பட்டு முயன்றாலும், நம் பாவத்தன்மை சிலசமயங்களில் எண்ணத்தில், வார்த்தையில், அல்லது செயலில் நம்மை இடறச்செய்கிறது.—ரோமர் 7:14-20; யாக்கோபு 3:2.
-