-
நல்ல முடிவுகள் எடுப்பது எப்படி?இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
3. பைபிள் நியமங்களின்படி முடிவெடுங்கள்
நல்ல முடிவுகளை எடுக்க பைபிள் நியமங்கள் எப்படி உதவும்? வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
யெகோவா நமக்கு என்ன சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்?
ஏன் அந்த சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்?
அந்த சுதந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்த எதைக் கொடுத்து உதவியிருக்கிறார்?
உதாரணமாக, ஒரு பைபிள் நியமத்தை எபேசியர் 5:15, 16-ல் படித்துப் பாருங்கள். பிறகு, இதையெல்லாம் செய்வதற்கு எப்படி ‘நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்தலாம்’ என்று கலந்துபேசுங்கள்:
தவறாமல் பைபிள் படிப்பதற்கு.
நல்ல கணவனாக, மனைவியாக, பெற்றோராக, மகனாக, அல்லது மகளாக ஆவதற்கு.
சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு.
-
-
பொழுதுபோக்கு—கடவுளுக்குப் பிரியமானதைத் தேர்ந்தெடுங்கள்இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
2. பொழுதுபோக்கிலேயே மூழ்கிவிடாமல் இருப்பது ஏன் முக்கியம்?
நல்ல பொழுதுபோக்காக இருந்தாலும்கூட, அதில் ரொம்ப நேரம் செலவிடாமல் இருப்பது அவசியம். இல்லையென்றால், முக்கியமான வேலைகளைச் செய்ய நேரமே இல்லாமல் போய்விடும். ‘[நம்] நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்த’ வேண்டுமென்று பைபிள் சொல்கிறது.—எபேசியர் 5:15, 16-ஐ வாசியுங்கள்.
-
-
பொழுதுபோக்கு—கடவுளுக்குப் பிரியமானதைத் தேர்ந்தெடுங்கள்இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
4. நேரத்தை ஞானமாகப் பயன்படுத்துங்கள்
வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
வீடியோவில் வந்த சகோதரர் கெட்ட விஷயங்கள் எதையும் பார்க்கவில்லைதான். ஆனாலும், அவருக்கு எது பிரச்சினையாக இருந்தது?
பிலிப்பியர் 1:10-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
பொழுதுபோக்குக்காக எவ்வளவு நேரம் செலவிடுவது என்பதை முடிவு செய்ய இந்த வசனம் எப்படி உதவும்?
-