“உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக”
“உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.”—யோவான் 14:1.
அது பொ.ச. 33-ம் ஆண்டில் நிசான் 14. ஒரு சிறு தொகுதியான ஆண்கள் எருசலேமில் ஒரு மேலறையில் சூரியன் மறைந்தபின் கூடினார்கள். அவர்களுடைய தலைவர் அவர்களுக்குப் பிரியாவிடை அறிவுரையும் ஊக்கமூட்டுதலும் அளித்துக் கொண்டிருந்தார். அவர் சொன்னதில் ஒன்று: “உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக,” என்பதாகும். (யோவான் 14:1) அவருடைய வார்த்தைகள் அச்சமயத்துக்கு மிகப் பொருத்தமாயிருந்தன, ஏனெனில் சிதறடிக்கும் நிகழ்ச்சிகள் சீக்கிரத்தில் நடக்கவிருந்தன. அந்த இரவில் அவர் கைதுசெய்யப்பட்டு, விசாரணைசெய்து, கொல்லப்படும்படி தீர்ப்பளிக்கப்பட்டார்.
2 அந்நாளை, மனிதவர்க்கத்தின் முழு எதிர்காலத்தையும் பாதிக்கும், சரித்திரத்திலேயே மிக அதிக முக்கியமான நாளாக கருத உங்களுக்கு நல்ல காரணமிருக்கிறது. தலைவராகிய இயேசுவின் பலிக்குரிய அந்த மரணம், பூர்வ தீர்க்கதரிசனங்கள் பலவற்றை நிறைவேற்றி அவரில் நம்பிக்கை வைப்போர் நித்திய ஜீவன் அடைவதற்கு ஆதாரத்தை அளித்தது. (ஏசாயா 53:5-7; யோவான் 3:16) ஆனால் அப்போஸ்தலர்கள், அதிர்ச்சியுண்டாக்கின அந்த இரவின் நிகழ்ச்சிகளால் திகைத்து மனத்தடுமாற்றமுற்றதால், சிறிது காலத்துக்குக் குழப்பமும் பயமும் அடைந்திருந்தனர். பேதுரு இயேசுவை மறுதலிக்கவுஞ் செய்தான். (மத்தேயு 26:69-75) எனினும் வாக்குபண்ணப்பட்ட உதவியாளனை, பரிசுத்த ஆவியை, உண்மையுள்ள அந்த அப்போஸ்தலர் பெற்றப்பின், அவர்கள் தைரியமும் கலக்கமற்றவர்களுமானார்கள். (யோவான் 14:16, 17, NW) இவ்வாறு, பேதுருவும் யோவானும் கடுமையான எதிர்ப்பை அனுபவித்து காவலில் வைக்கப்பட்டபோது, அவர்கள் கடவுளிடம் ஜெபித்து, அவருடைய வார்த்தையை “முழு தைரியத்தோடும்” பேசுவதற்கு உதவிசெய்யும்படி கேட்டார்கள். அவர்களுடைய ஜெபம் பதிலளிக்கப்பட்டது.—அப்போஸ்தலர் 4:1-3, 29-31.
3 இன்று மிக ஆழ்ந்தவண்ணம் கலக்கமுற்ற உலகத்தில் நாம் வாழ்கிறோம். இந்தப் பழைய காரிய ஒழுங்குமுறையின் முடிவு விரைவில் நெருங்கிக்கொண்டிருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5) குடும்ப வாழ்க்கையிலும் ஒழுக்கத் தராதரங்களிலும் வினைமையான முறிவு, முன் அறியப்படாத நோய்கள் திகிலூட்டும் முறையில் பெருகுதல், அரசியல் நிலையில்லாமை, வேலையில்லாமை, உணவுபோதாக்குறை, கொடுஞ்செயல் புரிதல், அணுசக்கி போரின் பயமுறுத்தல் ஆகியவற்றால் இலட்சக்கணக்கானோர் நேரில் பாதிக்கப்படுகின்றனர் அல்லது ஆழ்ந்த வண்ணம் மனக்கலக்கமுற்றிருக்கின்றனர். எதிர்காலத்தைப் பற்றிப் பயத்துடன் சிந்தனை செய்தால் பலருடைய இருதயங்கள் கலங்குகின்றன. இயேசு முன்னறிவித்தபடி, “ஜனங்கள் தத்தளித்து மனங்கலங்குவார்கள். . . . பூமியின் மேல் வரும் ஆபத்துகளுக்கு பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.”—லூக்கா 21:25, 26, தி.மொ.
4 இத்தகைய சோர்வடைய செய்யும் காரணங்களால் கிறிஸ்தவர்களுங்கூட வினைமையாய்ப் பாதிக்கப்படலாம். மத வெறுப்பின் காரணமாகவும் அல்லது உறவினர், அயலார், வேலைத்தோழர்கள், பள்ளித்தோழர்கள், அரசாங்க அதிகாரிகள் ஆகியோரிடமிருந்து வரும் எதிர்ப்பினாலும் அவர்கள் நெருக்கடியை எதிர்ப்படலாம். (மத்தேயு 24:9) ஆகவே இந்தக் கடினமான சமயங்களில் நாம் எப்படிக் கலங்காமல் மன அமைதியுடன் இருக்கமுடியும்? துன்பங்கள், கடுமையாகிக்கொண்டு போகையில் நாம் எப்படி மனசமாதானத்தைக் காத்துக்கொள்ள முடியும்? எதிர்காலத்தை நாம் எப்படி நம்பிக்கையுடன் எதிர்ப்படலாம்? பொதுவான காரியமாகிக் கொண்டிருக்கும் ஆழ்ந்தக் கவலையைத் தணிவிப்பதற்கு எது நமக்கு உதவிசெய்யும்? யோவான் 14:1-ல் இயேசு அறிவுரைக் கொடுத்த அத்தகைய தறுவாயில் நாம் இருக்கிறோம், ஆகவே நாம் அதைக் கூர்ந்து கவனிக்கலாம்.
கவலையை நாம் எப்படித் தணிவிக்கலாம்?
5 ‘தங்கள் இருதயம் கலங்காதிருக்கச்’ செய்யும்படி அன்புள்ள ஊக்கமூட்டுதலைக் கொடுத்தப்பின், இயேசு தம்முடைய அப்போஸ்தலரிடம்: “தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்,” என்று சொன்னார். (யோவான் 14:1) தேவாவியால் எழுதப்பட்ட வேத எழுத்துக்கள் இதைப்போன்ற ஊக்கமூட்டும் பல அறிவுரைகளை நமக்குக் கொடுக்கின்றன: “யெகோவாவின் மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்.” “உன் வழியை யெகோவாவுக்கு ஒப்புவி; அவரில் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.” (சங்கீதம் 55:22; 37:5, தி.மொ.) பவுல் இந்த முடிவான அறிவுரையைப் பிலிப்பியருக்குக் கொடுத்தான்: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடேகூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் காத்துக்கொள்ளும்.”—பிலிப்பியர் 4:6, 7.
6 பிரச்னைகளாலும் கனத்த உத்தரவாதத்தாலும் உண்டாகும் கவலை அல்லது அக்கறை சில சமயங்களில் நம்முடைய உடல் நலத்தையும் நம் மனநிலையையுங்கூட பாதிக்கலாம். எனினும், திகிலடையாதே என்ற ஆங்கில புத்தகத்தில் மருத்துவ நிபுணர் ஒருவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “மக்கள் தாங்கள் மதிக்கும் ஒருவரோடு தங்கள் பிரச்னைகளை வெளியிட்டுப் பேச முடிந்தால் . . . , நெருக்கடியின் அளவுநிலை அடிக்கடி வெகு பேரளவாய்க் குறைக்கப்படுகிறது.” மற்றொரு மனிதனிடம் பரிமாறிக்கொள்வதைக் குறித்து இவ்வாறு இருந்தால் கடவுளிடம் பேசுவது எவ்வளவு மிக அதிக உதவிசெய்யும். ஏனெனில் யெகோவாவைப் பார்க்கிலும் வேறு எவருக்கு நாம் அதிக மதிப்பைக் கொண்டிருக்க முடியும்?
7 இதனிமித்தமே அவரிடம் நெருங்கிய தனிப்பட்ட உறவு இன்று கிறிஸ்தவர்களுக்கு அவ்வளவு இன்றியமையாதது. யெகோவாவின் முதிர்ச்சியடைந்த ஊழியர் இதை நன்றாய் அறிந்திருக்கின்றனர், ஆகவே இந்த உறவைத் தளர்க்கக்கூடிய, உலகப்பிரகாரமான ஜனங்களுடன் கொள்ளும் வகையான கூட்டுறவை அல்லது பொழுதுபோக்கு முறைகளைத் தவிர்க்க அவர்கள் கவனமாயிருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 15:33) மேலும் ஜெபத்தில் யெகோவாவை அணுகி ஒரு நாளுக்கு ஒருமுறையோ, இருமுறையோ மாத்திரமல்ல, அடிக்கடி பேசுவது எவ்வளவு முக்கியமென்பதையும் அவர்கள் நன்றியோடு மதித்துணருகிறார்கள். முக்கியமாய் இளைஞர் அல்லது புதிய கிறிஸ்தவர்கள் யெகோவாவின் வார்த்தையைத் தவறாமல் படித்து அதன்பேரில் ஆழ்ந்து சிந்திப்பதாலும், கிறிஸ்தவக் கூட்டுறவாலும் சேவையாலும் யெகோவாவுடன் இந்த நெருங்கிய உறவை வளர்க்க வேண்டும். “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவர் உங்களிடம் நெருங்கிவருவார்,” என்று நாம் ஊக்கப்படுத்தப்படுகிறோம்.—யாக்கோபு 4:8, NW.
இயேசு கொடுத்த அறிவுரை
8 பல நாடுகளில், வேலையில்லாத் திண்டாட்டமும் பொருளாதார குறைபாடும் கவலைப்படுவதற்குரிய வினைமையான காரணங்களாக இருக்கின்றன. இந்த அக்கறைகளைப் பற்றி இயேசு மிக நம்பிக்கையூட்டும் அறிவுரையைக் கொடுத்தார்: “எதை உண்போம் எதைக் குடிப்போமென்று உங்கள் உயிருக்காகவும், எதை உடுப்போமென்று உங்கள் உடலுக்காகவும், கவலைப்படாதிருங்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் முக்கியமல்லவா?” (மத்தேயு 6:25, தி.மொ.) ஆம், உயிரும் உடலும், அல்லது முழு ஆளும், உணவையும் உடையையும் பார்க்கிலும் மிக மிக அதிக முக்கியமானவன். தங்கள் அடிப்படை தேவைகளை அடைவதற்குக் கடவுள் தங்களுக்கு உதவி செய்வாரென கடவுளுடைய ஊழியர்கள் நிச்சயமாயிருக்கலாம். இயேசு பின்வரும் உதாரணத்தைக் கொடுத்தார்: “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரம பிதா பிழைப்பூட்டுகிறார், அவைகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?” (மத்தேயு 6:26) இறகுகளைக் கொண்ட சிருஷ்டிகளுக்குக் கடவுள் தேவையானவற்றை அளித்து, கிறிஸ்து தம்முடைய உயிரை அவர்களுக்காகப் பலியாகக் கொடுத்த, தமக்கு மிக அருமையான தம்முடைய மனித ஊழியர்களைக் கவனியாமல் விடுவாரென்று எண்ணியும் பார்க்கமுடியாது.
9 பின்பு இயேசு, காட்டுப் பூக்களைக் குறிப்பிட்டு, அவை உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் “சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும், அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை,” என்று கூறி, இதை மேலும் உறுதிப்படுத்தினார். அரசன் சாலொமோனின் ஆட்சி அதன் ஆரவார மேன்மைக்குப் பெயர்பெற்றது. இயேசு பின்பு, ஆறுதலூட்டும் வகையில் பின்வருமாறு கேட்டார்: “தேவன் . . . உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?”—மத்தேயு 6:28-32; சாலொமோனின் உன்னதப் பாட்டு 3:9, 10.
10 எனினும், இயேசு மேலும் தொடர்ந்து, இது, “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடு”கிறவர்களுக்கு மத்திரமே என்று காட்டுகிறார். உலகமெங்கும், இத்தகைய உண்மையான கிறிஸ்தவர்கள் கடவுளுடைய ராஜ்யம் உண்மையில் என்னவென்பதை மதித்துணர்ந்து அதைத் தங்கள் வாழ்க்கையில் முதலாவது வைக்கிறார்கள். இவர்களுக்கே இயேசுவின் பின்வரும் அறிவுரை பொருந்துகிறது: “நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.” (மத்தேயு 6:33, 34) வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமானால், ஒவ்வொரு பிரச்னையையும், அது எழும்புகையில் கையாளுங்கள், எதிர்காலத்தைப் பற்றி மட்டுக்குமீறிய வண்ணம் கவலைப்படாதீர்கள்.
11 எனினும், மக்கள் பெரும்பான்மையர், எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படும் மனச்சாய்வு கொள்கிறார்கள், முக்கியமாய்க் காரியங்கள் தவறாகச் செல்கையில் அவ்வாறு இருக்கிறார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் விசுவாசத்துடன் யெகோவாவிடம் நோக்கலாம், அவ்வாறு செய்யவும் வேண்டும். எலீனோர் என்ற ஒரு கிறிஸ்தவ பெண்னின் காரியத்தைக் கவனியுங்கள். அவளுடைய கணவர் மிகவும் நோயுற்றிருந்தார், ஓர் ஆண்டுக்கு அவர் வேலை செய்ய முடியாதிருந்தார். கவனித்துக் காப்பதற்கு அவளுக்கு இரண்டு சிறு பிள்ளைகளும் வயதுசென்ற தகப்பனும் இருந்தார்கள், ஆகவே இதோடுகூட ஒரு முழுநேர வேலையை ஏற்றுச் செய்ய முடியாத நிலையில் இருந்தாள். உதவிக்காக அவர்கள் யெகோவாவிடம் கேட்டார்கள். இதற்குச் சிறிது காலத்துக்குப் பின் ஒருநாள் காலையில் கதவின் கீழ் ஒரு கடித-உறையை அவர்கள் கண்டார்கள். அதற்குள் பெருந்தொகையான பணம் இருந்தது—அந்தக் கணவர் திரும்ப வேலை செய்ய இயலும் வரையில் தங்களைக் கவனித்துக்கொள்வதற்குப் போதுமான அளவு இருந்தது. வேண்டிய சரியான நேரத்தில் கிடைத்த இந்த உதவிக்காக அவர்கள் மிக ஆழ்ந்த நன்றியுணர்ந்தார்கள். தேவையிலிருக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் இதைப்போன்ற காரியம் நடக்குமென்று எதிர்பார்ப்பதற்கு பைபிள் பூர்வ ஆதாரம் எதுவுமில்லை, ஆனால் நம்முடைய மன்றாட்டுகளை யெகோவா கேட்பார் என்றும் பல்வேறு வழிகளில் நமக்கு உதவிசெய்ய அவருக்குத் திறமை இருக்கிறதென்றும் நாம் நிச்சயமாயிருக்கலாம்.
12 தென் ஆப்பிரிக்காவில் ஒரு கிறிஸ்தவ விதவை தன் இரண்டு இளம் பிள்ளைகளைப் பராமரிப்பதற்கு வேலை தேட வேண்டியிருந்தது. ஆனால் அவர்களோடு நேரத்தைச் செலவிடும்படி அரைநாள் மாத்திரமே வேலை செய்ய மிக உறுதியாய் விரும்பினாள். அவளுக்கு ஒரு வேலை கிடைத்தப் பின்பு, அந்த மேலாளர் தனக்கு முழு-நேர செயலாளர் தேவையென தீர்மானித்தபோது அந்த வேலையை விட்டுச்செல்லும்படி அவள் வற்புறுத்தப்பட்டாள். மறுபடியும் வேலை இல்லாமல், இந்தச் சகோதரி உதவிக்காக யெகோவாவை நோக்கி ஊக்கமாய் ஜெபித்தாள். மூன்று வராங்களுக்கப்பால், அவளுடைய முந்திய மேலாளர் அரை-நாள் ஏற்பாட்டில் திரும்ப வேலைக்கு வரும்படி அவளைக் கேட்டார். அவள் எவ்வளவு மகிழ்ச்சியுற்றாள்! யெகோவா தன்னுடைய ஜெபங்களுக்குப் பதிலளித்தாரென அவள் உணர்ந்தாள்.
யெகோவாவை நோக்கி மன்றாடுங்கள்
13 “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்பட வேண்டாம்.” என்று அறிவுரை கூறிய பின் பவுல் மேலும் தொடர்ந்து, “எல்லா விஷயத்திலும் உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் [மன்றாட்டினாலும்] கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள்.” என்று சொல்வதை தயவுசெய்து கவனியுங்கள். (பிலிப்பியர் 4:6, தி.மொ.) “வேண்டுதலை” அல்லது மன்றாட்டை ஏன் குறிப்பிட வேண்டும்? இந்தச் சொல்லின் பொருள் “ஊக்கமாய்க் கெஞ்சிக் கேட்டல்” அல்லது “மன்றாடிக் கேட்கும் ஜெபம்” என்பதாகும். இது, பெரும் துன்ப நெருக்கடி அல்லது அபாய நெருக்கடி காலத்தில் செல்வதுபோல் வெகு ஊக்கமாய்க் கடவுளை நோக்கி மன்றாடி கெஞ்சுவதை உட்படுத்துகிறது? கைதியாயிருக்கையில், பவுல், “சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாக,” நற்செய்தியைத் தான் பயமில்லாமல் பிரசங்கிக்கக்கூடும்படி தனக்காக வேண்டுதல் செய்ய (மன்றாட) உடன் கிறிஸ்தவர்களைக் கேட்டான். (எபேசியர் 6:18-20) ரோம சேனாதிபதியாகிய கொர்நேலியுவும் “கடவுளை நோக்கித் தொடர்ந்து மன்றாடினான்.” (NW) தேவதூதன் ஒருவன் பின்வருமாறு சொன்னபோது அவன் எவ்வளவு மனக்கிளர்ச்சியடைந்திருக்க வேண்டும்: “உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது”! மேலும் பரிசுத்த ஆவியால் அபிஷேகஞ் செய்யப்பட்ட முதல் புறுஜாதியாருக்குள் தானிருக்க எத்தகைய சிலாக்கியம் பெற்றவனானான்!—அப்போஸ்தலர் 10:1-4, 24, 44-48.
14 யெகோவாவை நோக்கி செய்யும் இத்தகைய ஊக்கமான மன்றாட்டு பொதுவாய் ஒருமுறை மாத்திரமே செய்யப்படுகிறதில்லையென்பதைக் கவனிப்பது தகுந்தது. இயேசு, தம்முடைய பிரசித்திப் பெற்ற மலைப் பிரசங்கத்தில் பின்வருமாறு கற்பித்தார். “தொடர்ந்து கேட்டுக்கொண்டிருங்கள், அது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தொடர்ந்து தேடிக்கொண்டிருங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தொடர்ந்து தட்டிக்கொண்டிருங்கள், அது உங்களுக்குத் திறக்கப்படும்.” (மத்தேயு 7:7, NW) பைபிள் மொழிபெயர்ப்புகள் பல இதை: “கேளுங்கள் . . . தேடுங்கள் . . . தட்டுங்கள்.” என்று மொழிபெயர்த்திருக்கின்றன. ஆனால் மூல கிரேக்கு, தொடர்ந்து செயல்படுவதன் எண்ணத்தைக் கொண்டிருக்கிறது.a
15 பெர்சிய அரசன் அர்தசஷ்டாவுக்கு நெகேமியா மேலாளனாக திராட்ச மதுபானும் பரிமாறுகையில், அவன் அவ்வளவு துக்க முகமாயிருந்ததன் காரணத்தை அரசன் கேட்டான். நெகேமியா, எருசலேம் பாழான நிலையில் கிடப்பதைத் தான் அறிந்ததனால் அவ்வாறிருப்பதாகப் பதிலுரைத்தான். அப்பொழுது அரசன்: “நீ விரும்புகிற காரியம் என்ன?” என்று கேட்டான். உடனடியாக நெகேமியா உதவிக்காக யெகோவாவிடம் வேண்டிக்கொண்டான் சந்தேகமில்லாமல் சுருக்கமாயும், அமைதியாயும் கேட்டான். பின்பு, அவன், தனக்கு மிக நேசமான சொந்த நகரத்தைத் திரும்பப் புதுப்பித்துக் கட்டுவதற்கு எருசலேமுக்குத் திரும்பிசெல்ல அனுமதி கேட்டான். அவனுடைய வேண்டுகோள் அனுமதிக்கப்பட்டது. (நெகேமியா 2:1-6) எனினும், அந்த மிக முக்கியமான பேட்டிக்கு முன்னால், நெகேமியா உதவிக்காக யெகோவாவைக் கெஞ்சிக் கொண்டும் மன்றாடிக்கொண்டும் பல நாட்களைச் செலவிட்டான். (நெகேமியா 1:4-11) இதில் உங்களுக்கு இருக்கும் பாடத்தை நீங்கள் காண்கிறீர்களா?
யெகோவா பதிலளிக்கிறார்
16 ஒரு சந்தர்ப்பத்தில், ஆபிரகாம், தூதர்களின் மூலமாய் யெகோவாவுடன் பேச்சுத் தொடர்புகொள்ளும் சிலாக்கியத்தை அனுபவித்து மகிழ்ந்தான். (ஆதியாகமம் 22:11-18; 18:1-33) இன்று இது நடக்கிறதில்லையெனினும், ஆபிரகாமுக்கு இராத வல்லமை வாய்ந்த உதவிகளால் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். ஒன்று முழுமையாக்கப்பட்ட பைபிள் ஆகும்—வழிநடத்துதலுக்கும் ஆறுதலுக்குமுரிய வற்றாத ஊற்றுமூலம். (சங்கீதம் 119:105; ரோமர் 15:4) அடிக்கடி, ஏற்றவாறு அமையும் பகுதிகளை நினைவுக்குக் கொண்டுவர யெகோவா நமக்கு உதவி செய்வதால், நமக்குத் தேவைப்படும் வழிநடத்துதலை அல்லது ஊக்கமூட்டுதலை பைபிள் நமக்குக் கொடுக்கலாம். சில சமயங்களில், சொல் தொகுதி விளக்கப்பட்டியல் அல்லது தம்முடைய அமைப்பின் மூலம் கடவுள் அளித்திருக்கிற பைபிள் பிரசுரங்கள் பலவற்றில் ஒன்று நமக்கு விடை கொடுக்கலாம். இந்தப் பிரசுரங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நுட்ப விவரமான மற்றும் பயனுறுதியுடைய பொருளடக்க அட்டவணை, தேவைப்படும் தகவலைக் கண்டுபிடிப்பதில் இன்னுமொரு விலைமதியா உதவியாயிருக்கிறது.
17 ஒரு பிரச்னையால் நாம் மனக்கலக்கமுற்றிருந்தால் அல்லது துக்க உணர்ச்சியுற்றிருந்தால் அல்லது மனச்சோர்வடைந்திருந்தால், நம்முடைய ஜெபங்களுக்குப் பதில்கள் மற்ற வழிகளிலும் வரலாம். உதாரணமாக, சபையில் அல்லது யெகோவாவின் சாட்சிகளின் மாநாட்டில் கொடுக்கப்படும் பைபிள் பேச்சு ஒன்று நமக்குச் சரியாய்த் தேவைப்படும் “மருந்தைக்” கொண்டிருக்கலாம். வேறு சமயங்களில், மற்றொரு கிறிஸ்தவனிடம் சிறிது நேரம் உரையாடுவது நமக்குத் தேவையானதை அளிக்கலாம். பல தடவைகளில் சபை மூப்பர்கள் ஊக்கமூட்டுதல் அல்லது அறிவுரை அளிக்கலாம். நன்றாய்ச் செவிகொடுத்துக் கேட்கும், முதிர்ச்சியும், தயவும் பரிவிரக்கமுமுள்ள ஒரு கிறிஸ்தவனிடம் நம்முடைய இருதயத்திலுள்ளவற்றை வெறுமென வெளிப்படுத்திக் கூறுவதுங்கூட சில சமயங்களில் வெகுவாய் நல்ல முறையில் உணரும்படி நம்மைச் செய்விக்கலாம். முக்கியமாய் இந்த நண்பர் பைபிளிலுள்ள எண்ணங்களை ஆழ்ந்து சிந்திக்கும்படி நமக்கு உதவிசெய்தால் அவ்வாறிருக்கும். இத்தகைய பரிமாற்றம் நம்முடைய மனதிலிருந்தும் இருதயத்திலிருந்தும் கனத்தைப் பாரத்தை அகற்றிப் போடலாம்.—நீதிமொழிகள் 12:25; 1 தெசலோனிக்கேயர் 5:14.
18 ‘கையாளுவதற்குக் கடினமான இந்தக் கொடிய காலங்களின்போது’ பல்வேறு வகையான சோர்வு மனநிலைகள் சாதாரணமாயிருக்கின்றன. (2 தீமோ. 3:1, NW) பல்வகை காரணங்களினிமித்தம் ஆட்கள் ஊக்கங்குன்றி மனச்சோர்வடைகிறார்கள். இது கிறிஸ்தவர்களுக்குங்கூட ஏற்படலாம், மேலும் இது வெகு மனக்கசப்பான அனுபவமாயுமிருக்கலாம். எனினும், நற்செய்தியைப் பிரசங்கிப்பது தற்காலிகமான சோர்வு நிலைகளை அகற்றி மனக்கிளர்ச்சியடைய தங்களுக்கு உதவிசெய்ததாகப் பலர் கண்டிருக்கின்றனர்.b நீங்கள் இவ்வாறு செய்து பார்த்திருக்கிறீர்களா? சோர்வுற்ற உணர்ச்சியடைந்திருக்கையில், ஏதாவது ஒரு வகை ராஜ்ய சேவையில் பங்குகொள்வதை முயற்சி செய்து பாருங்கள். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது உங்கள் மனப்போக்கை நம்பிக்கையிழந்த நிலையிலிருந்து நம்பிக்கையுள்ள நிலைக்கு மாற்ற அடிக்கடி உதவிசெய்யும். யெகோவாவைப் பற்றிப் பேசுவதும் அவருடைய வார்த்தையைப் பயன்படுத்துவதும்—அவருடைய ஆவியின் ஒரு கனியாகிய—சந்தோஷத்தை உங்களுக்குக் கொடுத்து வேறுபட்ட நல்ல முறையில் உணரும்படி உங்களைச் செய்விக்கும். (கலாத்தியர் 5:22) ராஜ்ய வேலையில் சுறுசுறுப்பாய்த் தன்னை வைத்துக்கொண்டது, “மற்றவர்களுடைய பிரச்னைகளோடு ஒப்பிட [தன்னுடையவை] வெகு சிறியவையும் தற்காலிகமானவையுமென” தான் உணரும்படி செய்ததென்று ஓர் இளம் பயனியரும் கண்டாள்.
19 சில சமயங்களில், உடல்நலங் குன்றியிருப்பது, ஒருவேளை கவலைகள் அல்லது பிரச்னைகள் அதோடு சேர்ந்திருப்பது, சோர்வுற்ற மனநிலைக்கு வழிநடத்தலாம். இது இரவில் விழிப்புற்று மனங்கலங்கச் செய்யலாம், உடல் நலங் குன்றிய நடுவயதான கிறிஸ்தவர் ஒருவருக்கு இவ்வாறு நடந்தது. ஆனால் இருதயப் பூர்வமான ஜெபம் உண்மையில் உதவிசெய்ததென்று அவர் கண்டார். சோற்வுற்ற உணர்ச்சியுடன் அவர் விழித்தபோதெல்லாம் அமைதியுடன் யெகோவாவிடம் ஜெபம் செய்வார். இது சீக்கிரத்தில் நல்லுணர்ச்சியுண்டாகும்படி அவருக்குச் செய்தது. மேலும், சங்கீதம் 23-ஐப் போன்ற, ஆறுதலளிக்கும் பைபிள் பகுதிகளை மீண்டும் நினைவுபடுத்தி சொல்லிப் பார்ப்பதும் மனதைச் சாந்தப்படுத்துவதை அவர் கண்டார். மாறாமல், யெகோவாவின் ஆவி ஜெபத்துக்கு விடையாக அல்லது அவருடைய வார்த்தையின் மூலம் கிரியை செய்து, சோர்வுற்ற மனநிலையை அகற்றிச் சந்தோஷ மனநிலையுண்டாக உதவி செய்யும். பின்னால், இவர் தன் பிரச்னைகளை சமநிலையுடனும் மன அமைதியுடனும் சிந்தித்து, அவற்றை எவ்வாறு மேற்கொள்வதென்று காண முடிந்தது அல்லது அவற்றைத் தாங்க பலப்படுத்தப்பட்டிருப்பதை உணரமுடிந்தது.
20 ஜெபம் எவ்வாறு பதிலைக் கொண்டு வரமுடியுமென்பதற்கு இது ஓர் உதாரணம். ஆனால் சில சமயங்களில் பதிலைக் கண்டடைவதில் தாமதம் இருப்பதாகத் தோன்றுகிறது. ஏன்? ஒருவேளை அந்தப் பதில் கடவுளுடைய உரிய காலத்துக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கலாம். சில சந்தர்ப்பங்களில், தம்மிடம் வேண்டுதல் செய்கிறவர்கள் தங்கள் அக்கறையின் ஆழத்தை, தங்கள் ஆவலின் மனமார்ந்தத் தன்மையை, தங்கள் பக்தியின் உண்மையானத் தன்மையை மெய்ப்பித்துக் காட்டும்படி கடவுள் இடமளிப்பதாகத் தோன்றுகிறது. சங்கீதக்காரரில் ஒருவனுக்கு இந்த அனுபவம் உண்டாயிற்று.—சங்கீதம் 88:13, 14; 2 கொரிந்தியர் 12:7-10-ஐ ஒத்துப் பாருங்கள்.
21 எவ்வாறாயினும், ஜெபத்தில் சர்வ வல்லமையுள்ள கடவுளிடம் பேசுவது, நம்மை மனமுறிவிலிருந்து திட நம்பிக்கைக்குத் தூக்கிவிடும் விசுவாசத்தைப் பலப்படுத்தும் அனுபவமாகும். அவர் செவிகொடுத்துக் கேட்டு பதிலளிக்கிறாரென அறிவது எவ்வளவு ஆறுதல் தருகிறது! பிலிப்பியிலிருந்த சபைக்குப் பவுல் எழுதின பிரகாரம், நாம் நம்முடைய ஜெபங்களையும் மன்றாட்டுகளையும் “நன்றிசெலுத்துதலோடுகூட” செய்ய வேண்டும். (பிலிப்பியர் 4:6, NW) ஆம், ஒவ்வொரு நாளும் நாம் நன்றியறிதலோடு நம் இருதயத்தை யெகோவாவுக்குத் திறந்து “எல்லாவற்றின் சம்பந்தமாகவும் நன்றி செலுத்த வேண்டும்.” (1 தெசலோனிக்கேயர் 5:18, NW) இது நெருங்கிய அன்புமிக்க உறவுக்குள் வர உதவிசெய்து நமக்குச் சமாதானத்தைக் கொண்டுவரும். இது, மனக்கலக்கமுண்டாக்கும் அபாயகரமான இக்காலங்களில் யெகோவாவின் ஊழியருக்கு எவ்வளவு முக்கியமென்பதை அடுத்தக் கட்டுரை காட்டுகிறது. (w88 2/15)
[அடிக்குறிப்புகள்]
a பரிசுத்த வேத எழுத்துக்களின் புதிய உலக மொழிபெயர்ப்பின் (ஆங்கில பைபிள்) இந்தச் சரிநுட்ப மொழிபெயர்ப்புக்கு ஒத்ததாய், சார்ல்ஸ் பி. உவில்லியம்ஸ் இந்த வசனத்தை: “தொடர்ந்து கேட்டுக்கொண்டிருங்கள் . . . தொடர்ந்து தேடிக்கொண்டிருங்கள் . . . தொடர்ந்து தட்டிக்கொண்டிருங்கள், கதவு உங்களுக்குத் திறக்கும்,” என்று மொழிபெயர்த்திருக்கிறார்.—தி நியு டெஸ்டமென்ட்: மக்களின் மொழிநடையிலுள்ள மொழிபெயர்ப்பு
b தற்காலிகத் துக்க மனநிலை, கடுமையான நீடித்த மனச்சோர்விலிருந்து வேறுபட்டது—இது அதைப் பார்க்கிலும் வினைமையும் சிக்கலுமான உணர்ச்சி வச அல்லது மனநோய் நிலையாகும். (ஆங்கில) அவேக்! அக்டோபர் 22, 1987-ன் வெளியீட்டில் பக்கங்கள் 3-16-வரை பாருங்கள்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ என்ன காரணங்கள் கிறிஸ்தவர்களை மனங்கலங்கச் செய்யலாம்?
◻ கவலையைத் தணிவிக்க எது நமக்கு உதவிசெய்யும்?
◻ தங்கள் அடிப்படைத் தேவைகளை அடைய கடவுள் உதவிசெய்வாரென்று கிறிஸ்தவர்கள் ஏன் நிச்சயமாய் நம்பியிருக்கலாம்?
◻ “மன்றாட்டு” என்பதன் கருத்தென்ன, யெகோவா பதிலளிக்கும் முறையைக் கடந்தகால முன்மாதிரிகள் எவ்வாறு விளக்கிக் காட்டுகின்றன?
◻ என்ன வெவ்வேறு வழிகளில் யெகோவா நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்கலாம்?
[கேள்விகள்]
1. யோவான் 14:1-லிலுள்ள இயேசுவின் வார்த்தைகள் ஏன் அச்சமயத்துக்கு மிகப் பொருத்தமாயிருந்தன?
2. அந்த நாள் ஏன் அவ்வளவு முக்கியமானதாயிருந்தது? சீஷருக்கு எது உதவிசெய்தது?
3. இன்று மக்கள் மிகப் பலர் ஏன் ஆழ்ந்த வண்ணம் கலக்கமுற்றிருக்கின்றனர்?
4. என்ன காரணங்கள் கிறிஸ்தவர்களை நெருக்கடி அனுபவிக்கச் செய்யலாம்?
5. ஊக்கமூட்டும் என்ன அறிவுரைகளை வேத எழுத்துக்கள் நமக்குக் கொடுக்கின்றன?
6, 7. (எ) நெருக்கடியின் கடுமையைக் குறைப்பதற்கு ஒரு வழி என்ன? (பி) யெகோவாவுடன் நெருங்கிய உறவை நாம் எப்படி வளர்க்கலாம்?
8, 9. பொருளாதார பிரச்னைகளைக் குறித்ததில் என்ன நம்பிக்கையூட்டும் அறிவுரையை நாம் பொருத்திப் பிரயோகிக்கலாம்?
10. (எ) இயேசுவின் ஆறுதலான வார்த்தைகள் யாருக்குச் சொல்லப்பட்டன? (பி) எதிர்காலத்தைப் பற்றி அவர் என்ன அறிவுரை கொடுத்தார்?
11, 12. தங்கள் ஜெபங்களுக்குப் பதிலுத்தரவாக யெகோவா தங்களுக்கு உதவிசெய்தாரென சில கிறிஸ்தவர்கள் எவ்வாறு உணர்ந்தனர்?
13. (எ) “மன்றாட்டு” என்பதன் கருத்தென்ன? (பி) மன்றாட்டைப் பற்றிய என்ன வேதப்பூர்வ முன்மாதிரிகள் நமக்குண்டு?
14. யெகோவாவை நோக்கி ஊக்கமாய் மன்றாடுவதை ஒருமுறை மாத்திரமே செய்யவேண்டுமா என்பதை நாம் எப்படித் தெரிந்துகொள்ளலாம்?
15. (எ) நெகேமியா, அரசன் அர்தசஷ்டாவுக்குத் திராட்ச மதுபானம் பரிமாறுகையில் ஏன் துக்க முகமாயிருந்தான்? (பி) நெகேமியா எவ்வாறு ஒரு சுருக்கமான ஜெபம் செய்ததைப் பார்க்கிலும் அதிகத்தைச் செய்திருந்தான்?
16. (எ) ஆபிரகாம் என்ன தனி மேன்மையான சிலாக்கியத்தை அனுபவித்து மகிழ்ந்தான்? (பி) நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிப்பதில் உட்படக்கூடிய என்ன வல்லமைவாய்ந்த உதவிகள் நமக்கு இருக்கின்றன?
[பக்கம் 12-ன் படம்]