-
எப்பாப்பிரா—‘கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரன்’காவற்கோபுரம்—1997 | மே 15
-
-
எப்பாப்பிரா—‘கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரன்’
கொரிந்துவிலும், எபேசுவிலும், பிலிப்பியிலும் கிறிஸ்தவ சபைகளை ஸ்தாபித்தவர் யார்? ‘புறஜாதிகளுக்கு அப்போஸ்தலராயிருந்த பவுல்’ என்று பதில் சொல்வதில் நீங்கள் ஒருவேளை தயங்கியிருக்க மாட்டீர்கள். (ரோமர் 11:13) நீங்கள் சொன்னது சரியாக இருக்கலாம்.
எனினும், கொலோசெயிலும், எராப்போலியிலும், லவோதிக்கேயாவிலும் சபைகளை ஸ்தாபித்தவர் யார்? நாம் நிச்சயமாக சொல்ல முடியாதென்றாலும், எப்பாப்பிரா என்ற பெயர்கொண்ட ஒருவர் அதைச் செய்திருக்கலாம். எவ்வாறாயினும், ‘கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரன்’ என்று இந்த சுவிசேஷகர் அழைக்கப்பட்டிருப்பதால், இவரைப்பற்றி இன்னும் அதிகம் அறிந்துகொள்ள நீங்கள் ஒருவேளை விரும்புவீர்கள்.—கொலோசெயர் 1:7.
லியூக்கஸ் நதிப்படுகையின் சுவிசேஷகர்
எப்பாப்பிரா என்ற பெயர், எப்பாப்பிரோதீத் என்பதன் சுருக்கமாக உள்ளது. ஆனால், பிலிப்பியிலிருந்த எப்பாப்பிரோதீத்துடன் இந்த எப்பாப்பிராவைக் குழப்பிவிடக்கூடாது. ஆசியா முனையின், லியூக்கஸ் நதிப்படுகையில் கிறிஸ்தவ சபைகள் இருந்த மூன்று இடங்களில் ஒன்றாகிய கொலோசெயிலிருந்து இந்த எப்பாப்பிரா வந்தவர். பூர்வ பிரிகியா பிரதேசத்தில், லவோதிக்கேயாவிலிருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும், எராப்போலியிலிருந்து 19 கிலோமீட்டர் தூரத்திலும் கொலோசெ பட்டணம் அமைந்திருந்தது.
கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி, பிரிகியாவுக்கு எப்படி எட்டிற்று என்பதை பைபிள் விளக்கமாகச் சொல்கிறதில்லை. எனினும், பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே நாளின்போது, பிரிகியர்கள் எருசலேமில் இருந்தனர். இவர்களில் சிலர் கொலோசெயிலிருந்து வந்திருக்கலாம். (அப்போஸ்தலர் 2:1, 5, 10) பவுல் எபேசுவில் (ஏறக்குறைய பொ.ச. 52-55-ன்போது) ஊழியம் செய்த சமயத்தில், அந்த இடப்பகுதியில் கொடுக்கப்பட்ட சாட்சி அவ்வளவு அதிக வலிமையுடையதாகவும் பலன்தருவதாகவும் இருந்ததால், எபேசியர் மட்டுமல்ல, “ஆசியாவில் குடியிருந்த யாவரும், யூதரும் கிரேக்கரும், ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டார்கள்.” (அப்போஸ்தலர் 19:10, தி.மொ.) லியூக்கஸ் நதிப்படுகையின் பிரதேசம் முழுவதிலும் பவுல் நற்செய்தியைப் பிரசங்கிக்கவில்லை என்பதுபோல் தோன்றலாம். ஏனெனில் அந்தப் பகுதியில் கிறிஸ்தவர்களாகியிருந்த பலர் அவரை ஒருபோதும் பார்த்திருக்கவில்லை.—கொலோசெயர் 2:1.
பவுல் சொல்வதன் பிரகாரம், எப்பாப்பிராவே, ‘கடவுளுடைய தகுதியற்ற தயவை உண்மையில்’ கொலோசெயருக்குக் கற்பித்தவர். ‘உங்களுக்கென்று கிறிஸ்துவின் உண்மையுள்ள ஊழியக்காரன்’ என்று இந்த உடன் ஊழியரை பவுல் அழைக்கும் இந்த உண்மை, அந்தப் பிரதேசத்தில் எப்பாப்பிரா, சுறுசுறுப்பாய்ச் செயல்பட்ட சுவிசேஷகராக இருந்தார் என்று காட்டுகிறது.—கொலோசெயர் 1:6, 7.
லியூக்கஸ் நதிப்படுகை பிரதேசத்தில், தங்கள் உடன் விசுவாசிகளின் ஆவிக்குரிய நலத்திற்காக, அப்போஸ்தலர் பவுல், சுவிசேஷகராகிய எப்பாப்பிரா ஆகிய இருவருமே மிகுந்த அக்கறையுடையவர்களாக இருந்தார்கள். ‘புறஜாதிகளுக்கு அப்போஸ்தலராயிருந்த’ பவுல், அவர்களுடைய முன்னேற்றத்தைப் பற்றிய செய்தியைப் பெற்றதில் கட்டாயமாகக் களிகூர்ந்திருப்பார். வேறு எவரிடமிருந்துமல்ல, எப்பாப்பிராவிடமிருந்தே கொலோசெயரின் ஆவிக்குரிய நிலைமையைப் பற்றி பவுல் கேள்விப்பட்டார்.—கொலோசெயர் 1:4, 8.
எப்பாப்பிராவின் அறிக்கை
கொலோசெயர் எதிர்ப்பட்ட பிரச்சினைகளை பவுலுடன் கலந்துபேசுவதற்காக, ரோமுக்கு நீண்ட பயணம் செய்யும்படி எப்பாப்பிராவை செய்வித்த, அந்தப் பிரச்சினைகள் அந்தளவு வினைமையானவையாக இருந்தன. எப்பாப்பிரா கொடுத்த நுட்பவிவரமான அறிக்கையே, தனக்கு அறிமுகமாயிராத அந்தச் சகோதரர்களுக்கு இரண்டு நிருபங்களை எழுதும்படி பவுலைத் தூண்டுவித்ததாகத் தெரிகிறது. ஒன்று கொலோசெயருக்கு எழுதின நிருபம். மற்றொரு நிருபம் லவோதிக்கேயருக்கு அனுப்பப்பட்டது; அது பாதுகாத்து வைக்கப்படவில்லையெனத் தெரிகிறது. (கொலோசெயர் 4:16) அந்தக் கிறிஸ்தவர்களுக்குத் தேவைப்பட்டதாக எப்பாப்பிரா கருதியவையே அந்த நிருபங்களில் எழுதப்பட்டிருக்கலாம் என்று எண்ணுவது நியாயமானதாக இருக்கிறது. என்ன தேவைகள் இருந்ததாக அவர் கண்டார்? அவருடைய பண்பியல்பைப் பற்றி இது நமக்கு என்ன வெளிப்படுத்துகிறது?
துறவி வாழ்வு, ஆவிக்கொள்கை, உருவ வழிபாட்டு மூடநம்பிக்கை ஆகியவை உட்பட்ட புறமத தத்துவ சாஸ்திரங்களால், கொலோசெயிலிருந்த கிறிஸ்தவர்கள் ஆபத்திலிருந்தனரென்று எப்பாப்பிரா மனக்கவலையடைந்தாரென, கொலோசெயருக்கு எழுதின நிருபம் காட்டுவதாகத் தெரிகிறது. மேலும், சில உணவுகளைத் தவிர்ப்பதும், குறிப்பிட்ட நாட்களை அனுசரிப்பதுமான யூத போதகம், சபையின் உறுப்பினர் சிலரின்மீது செல்வாக்கு செலுத்தியிருக்கலாம்.—கொலோசெயர் 2:4, 8, 16, 20-23.
இந்த விஷயங்களைப் பற்றி பவுல் எழுதுவதானது, தன் உடன் கிறிஸ்தவர்களின் தேவைகளைப் பற்றி எவ்வளவு விழிப்புள்ளவராயும் உணர்வுள்ளவராயும் எப்பாப்பிரா இருந்தார் என்பதை நமக்குக் காட்டுகிறது. அவர்கள் வாழ்ந்த சூழ்நிலையின் ஆபத்துகளைப் பற்றி உணர்ந்தவராக, அவர்களுடைய ஆவிக்குரிய சுகநலனுக்கு அன்புள்ள அக்கறையை அவர் காட்டினார். பவுலின் அறிவுரையை எப்பாப்பிரா நாடினார்; அவர் மனத்தாழ்மையுடையவராக இருந்தாரென்று இது காட்டுகிறது. அதிக அனுபவமுள்ள ஒருவரிடமிருந்து அறிவுரை பெறுவதற்கானத் தேவையை அவர் உணர்ந்திருக்கலாம். எவ்வாறாயினும், எப்பாப்பிரா ஞானத்துடன் செயல்பட்டார்.—நீதிமொழிகள் 15:22.
-
-
எப்பாப்பிரா—‘கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரன்’காவற்கோபுரம்—1997 | மே 15
-
-
‘பிரியமான உடன்வேலையாளன்’ என்று எப்பாப்பிரா அழைக்கப்பட்டதால், உடன்கிறிஸ்தவர் விரும்புமளவாக அவர் நடந்துகொண்டார் என்பதில் சந்தேகமில்லை. (கொலோசெயர் 1:7) சந்தர்ப்பங்கள் ஏற்படுகையில், சபையிலுள்ள உறுப்பினர் எல்லாரும் உள்ளார்வத்துடனும் அன்புடனும் மற்றவர்களுக்கு உதவியாயிருக்க வேண்டும். உதாரணமாக, நோயுற்றவர்களுக்கு, முதிர்வயதானவர்களுக்கு, அல்லது தனிப்பட்ட உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்குக் கவனம் செலுத்தலாம். சபையில் கவனிப்பதற்கு பல்வேறு பொறுப்புகள் இருக்கலாம், அல்லது தேவராஜ்ய கட்டிட ஏற்பாடுகளுக்கு உதவி தேவைப்படலாம்.
-