உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யெகோவா உங்களுக்கு பலம் கொடுப்பார்
    காவற்கோபுரம்—2015 | டிசம்பர் 15
    • 13. மருத்துவ ஆலோசனை கொடுக்கும்போதும் அதை ஏற்றுக்கொள்ளும்போதும் நாம் என்ன செய்ய வேண்டும்?

      13 இன்று அற்புதமாகக் குணப்படுத்தும் சக்தி நம் சகோதரர்கள் யாருக்குமே இல்லை. ஆனால், நமக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆசையில் நாம் கேட்காமலேயே ஆலோசனைகளைக் கொடுக்கலாம். சில ஆலோசனைகள் நமக்கு நல்லதாக இருக்கலாம். உதாரணத்துக்கு, தீமோத்தேயுவிடம் திராட்சமதுவை குடிக்கும்படி பவுல் சொன்னார். தீமோத்தேயு மாசுபடிந்த தண்ணீரைக் குடித்ததால் வயிற்று வலியால் அவதிப்பட்டிருக்கலாம்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (1 தீமோத்தேயு 5:23-ஐ வாசியுங்கள்.) நமக்கு யாராவது ஆலோசனை கொடுத்தால் நாம் கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, நாம் ஏதாவது உடல்நல பிரச்சினையால் கஷ்டப்படலாம். அப்போது ஒரு சகோதரர் நம்மிடம் சில உணவு வகைகளை, மூலிகைகளை சாப்பிட சொல்லலாம்; சிலவற்றைத் தவிர்க்க சொல்லலாம். ‘என் சொந்தக்காரர் ஒருத்தருக்கு இதே பிரச்சினைதான் இருந்தது. அவரும் இததான் சாப்பிட்டார். இப்போ நல்லா இருக்கார்’ என்று அவர் சொல்லலாம். ஆனால், அந்த நபருக்குக் குணமானது போல் நமக்கும் குணமாகும் என்று சொல்ல முடியாது. அதுமட்டுமல்ல, நிறையப் பேர் குறிப்பிட்ட ஒரு மருந்தையோ சிகிச்சையையோ எடுத்துக்கொள்வதால் அது சிறந்தது என்றும் சொல்ல முடியாது. நிறைய பின்விளைவுகளும் அதனால் வரலாம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.—நீதிமொழிகள் 27:12-ஐ வாசியுங்கள்.

  • யெகோவா உங்களுக்கு பலம் கொடுப்பார்
    காவற்கோபுரம்—2015 | டிசம்பர் 15
    • a டைஃபாய்ட் மற்றும் வேறு சில மோசமான நோய்கள் வருவதற்கு காரணமாக இருக்கும் கிருமிகளோடு திராட்சமது கலக்கும்போது அந்த கிருமிகள் செத்துவிடும் என்று தி ஆர்ஜின்ஸ் அண்ட் ஏன்சியன்ட் ஹிஸ்ட்ரி ஆஃப் வைன் என்ற புத்தகம் சொல்கிறது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்