நாம் கடைசி நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோமா?
“கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்கள்,” என்ற சொற்றொடர் கேய்ராய் கேலிப்பாய் என்ற கிரேக்கிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (2 தீமோத்தேயு 3:1, NW) கேலிப்பாய் என்ற வார்த்தை “கொடுமை” என்று சொல்லர்த்தமாக பொருள்படும் வார்த்தையின் பன்மையாக இருக்கிறது, பயமுறுத்தல் மற்றும் அபாயம் என்ற கருத்தைத் தெரிவிக்கிறது. ஒரு பைபிள் உரையாளர், இந்த வார்த்தை “தீமையின் பயங்கரமான தாக்குதலை” குறிப்பிடுகிறது என்று சொல்கிறார். ஆகவே, முந்தைய சகாப்தங்கள் குழப்பங்களை அனுபவித்திருந்தபோதிலும், ‘கடைசிநாட்கள்’ அசாதாரணமான விதத்தில் காட்டுமிராண்டித்தனமாக இருக்கும். 2 தீமோத்தேயு 3:13 குறிப்பிடுகிறபடி, “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் . . . மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.”
இது நம்முடைய நாளை வர்ணிக்கிறதா? நாம் கடைசி நாட்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை இவை சுட்டிக்காண்பிக்கின்றனவா என்பதைக் காண 2 தீமோத்தேயு 3:2-5-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள ஒருசில திட்டவட்டமான அத்தாட்சிகளை நாம் ஆராய்வோமாக.
“மனுஷர்கள் . . . பணப்பிரியராயும்.”—2 தீமோத்தேயு 3:2.
மோசடியானது, ஐ.மா.செய்திகள் மற்றும் உலக அறிக்கை (ஆங்கிலம்) அதை அழைக்கும்விதமாக, “பொருளாதார குற்றச்செயலின் களியாட்டமாக” ஆகிவிட்டிருக்கிறது. ஐக்கிய மாகாணங்களில், உடல்நல பராமரிப்பு மோசடியின் சேதம் ஆண்டுதோறும் $5,000 கோடிக்கும் $8,000 கோடிக்கும் இடைப்பட்டதாக இருக்கிறது. இப்படிப்பட்ட அயோக்கியத்தனம் சாதாரணமாகவே இருப்பது வருத்தத்துக்குரியதாகும். நீதிநெறி வள ஆதார மையத்தின் தலைவர் கேரி எட்வர்ட்ஸ் குறிப்பிடும் வண்ணமாக, “சிலசமயங்களில் அயோக்கியத்தனத்தைக் கொண்டாடும் சமுதாயத்தை” நாம் கொண்டிருக்கிறோம். அவர் விளக்குகிறார்: “வில்லன்களையும், அரசியல்வாதிகளாக இருக்கும் ஆட்களையும், அரசாங்கத்தை ஏமாற்றிவிட்டு தண்டனையிலிருந்து தப்பித்துவிடும் வியாபாரிகளையும் நாம் கதாநாயகர்களாக கருதுகிறோம்.”
“அகந்தையுள்ளவர்களாயும்.”—2 தீமோத்தேயு 3:2.
அகந்தையுள்ள ஒரு நபர் மற்றவர்களை வெறுப்போடு பார்க்கிறார். இன மற்றும் தேசிய வெறுப்பு இன்று எத்தனை தெளிவாக இருக்கிறது! “சிறுபான்மையினர் எல்லாரும் குறியிலக்காக இருக்கின்றனர்,” என்பதாக கனடா, டோரன்டோவின் தி க்ளோப் அண்ட் மெயில் சொல்கிறது. “இனஞ்சார்ந்த வன்முறை ஜெர்மனியில் அதிகரித்துக்கொண்டே போகிறது, இரகசியமாக இயங்கும் நீக்ரோ எதிர்ப்பு சங்கம் ஐக்கிய மாகாணங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது, யூதர்களை எதிர்க்கும் நாசிக்கள் டோரன்டோவின் நடைபாதைகள் மற்றும் தேவாலயங்களின் அழகைக் கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.” கனடாவின் யூத காங்கிரஸ் தலைவர் இர்விங் எபெல்லா இவ்விதமாகச் சொல்கிறார்: “இனஞ்சார்ந்த வன்முறையை எல்லா இடங்களிலும் நாம் பார்க்கிறோம்: ஸ்வீடன், இத்தாலி, ஹாலந்து, பெல்ஜியம் மற்றும் ஜெர்மனி.”
“தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும்.”—2 தீமோத்தேயு 3:2.
“இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து பிறப்பு வீதத்தில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் வாயாடிகளும், போட்டி மனப்பான்மையுள்ளவர்களும், மரியாதை தெரியாதவர்களுமான ஒரு சந்ததியை வளர்த்திருப்பதாக அநேகரால் நம்பப்படுகிறது,” என்பதாக தி டோரன்டோ ஸ்டார் குறிப்பிடுகிறது. வீட்டில் துவங்கும் கலகத்தனம், பள்ளியில் பிள்ளைகளின் நடத்தையில் அடிக்கடி வெளிப்படுகிறது. நான்கே வயதுள்ள பிள்ளைகளும்கூட எதிர்த்துப் பேசுவதாக ஒரு ஆசிரியை குறிப்பிடுகிறார். “ஆசிரியர்கள் போதிப்பதற்குச் செலவிடும் நேரத்தைவிட நடத்தையைச் சமாளிப்பதற்கே அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்,” என்று அவர் சொல்கிறார். நிச்சயமாகவே எல்லா இளைஞரும் கலகம் செய்பவர்களாக இல்லை. என்றபோதிலும், “எந்த ஒரு காரியத்தையும் அவர்கள் மதிக்காமல் இருப்பது ஒரு பொதுப்போக்காக தோன்றுகிறது,” என்பதாக நீண்டகால அனுபவமுடைய உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ப்ரூஸ் மெக்கிரகர் குறிப்பிடுகிறார்.
“சுபாவ அன்பில்லாதவர்களாயும்.”—2 தீமோத்தேயு 3:3.
வேறு எந்த இடத்தையும்விட சுபாவ அன்பு மேலோங்கியிருக்க வேண்டிய குடும்பத்தில் நன்கு புலப்படத்தக்க ஒரு சீரழிவைக் கடைசி நாட்கள் காணும். “குடும்ப வன்முறையே அமெரிக்க பெண்களுக்குக் காயமுறுவதற்கும் மரணத்துக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது, வாகன விபத்துக்கள், கற்பழிப்புகள் மற்றும் கொள்ளையிட தாக்கப்படுதல் ஆகியவை சேர்ந்து ஏற்படுத்தும் சேதத்தைவிட அதிகமான சேதத்தை இது உண்டுபண்ணுகிறது,” என்பதாக தி நியூ யார்க் டைம்ஸ் அறிவிக்கிறது. சிறு பிள்ளைகளுக்குப் பால் சம்பந்தமான தொல்லை நம்பகமான குடும்ப அங்கத்தினர்களாலேயே செய்யப்படுகிறது. மணவிலக்கின் உயர் விகிதம், வயதானவர்களை துர்ப்பிரயோகித்தல், மற்றும் கருச்சிதைவு ஆகியவையும்கூட அநேகர் ‘இயல்பான மனித அன்பில் முற்றிலும் குறைவுபடுவதற்கு’ அத்தாட்சியை அளிக்கின்றன.—ஃபிலிப்ஸ்.
“கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்.”—2 தீமோத்தேயு 3:3.
“எவராவது ஒருவரைக் கொலைசெய்வதற்கு இளம் கொலையாளிகளுக்கு எந்த உள்நோக்கமும் அவசியமில்லை,” என்பதாக செய்தித்தாள் பத்தி எழுத்தாளர் பாப் ஹர்பர்ட் எழுதுகிறார். “சிறு பையன்களில் அநேகர், ‘எந்தக் காரணமுமில்லாமல்’ மற்றொரு மனிதரை சுட்டுக்கொல்லுகிற கொள்கையை ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.” சில பெற்றோர்கள்கூட ஒழுக்கநெறியுணர்வு இல்லாதவர்களாய் இருப்பதாக தெரிகிறது. எத்தனை பெண்களுடன் முடியுமோ அத்தனை பெண்களுடன் பாலுறவு கொள்வதில் யார் அதிக புள்ளிகள் பெறுகிறார்கள் என்று போட்டி போட்டதற்காக பருவ வயது பையன்களின் தொகுதி ஒன்று குற்றஞ்சாட்டப்பட்டபோது, தகப்பனார் ஒருவர் சொன்னார்: “துருதுருவென்ற எந்தவொரு அமெரிக்க பையனும் அவனுடைய வயதில் செய்யாத ஒன்றையும் என்னுடைய பையன் செய்யவில்லை.”
“தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்.”—2 தீமோத்தேயு 3:4.
ஒரு மதிப்பீட்டின் பிரகாரம், பருவ வயதினர் மத சம்பந்தமான ஒரு தொகுதியோடு செலவழிக்கும் ஒவ்வொரு மணிநேரத்துக்கும் 15 மணிநேரத்தை எலக்ட்ரானிக் கருவிகள் வாயிலாக வரும் பொழுதுபோக்குக்காக செலவிடுகின்றனர். “இன்று, விற்பனைக் கூடங்களிலும் பள்ளி நடைக்கூடங்களிலும் வளரும் பொதுமக்களைச் சென்றெட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட பொழுதுபோக்கு சாதனங்களால் வெகுவாக செல்வாக்கு செலுத்தப்பட்ட கலாச்சாரமே பருவ வயதினரின் வாழ்க்கையில் மேலோங்கியிருக்கிறது. அடுத்து குடும்பத்தின் செல்வாக்கு வருகிறது. பட்டியலில் கடைசி இடத்தை சர்ச் பெறுகிறது,” என்பதாக அல்டூடான மிரர் அறிவிக்கிறது. “பெற்றோர் இல்லாதிருந்து, சர்ச்சுகள் மெளனமாக இருந்தால், அப்போது பொழுதுபோக்கு சாதனமே இளைஞரின் வாழ்க்கையில் அதிகமாக செல்வாக்கு செலுத்துவதாக இருக்கும்,” என்பதாக மிரர் மேலுமாக குறிப்பிடுகிறது.
“தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும்.”—2 தீமோத்தேயு 3:5.
பைபிள் சத்தியம் வாழ்க்கையை மாற்றும் வல்லமையுடையது. (எபேசியர் 4:22-24) ஆனால் மிகவும் தேவபக்தியில்லாத செயல்கள் மதம் என்ற போர்வையின்கீழ் நடக்கின்றன. பாதிரிமார் பிள்ளைகளை பால் சம்பந்தமாக துர்ப்பிரயோகம் செய்வது ஒரு வருந்தத்தக்க உதாரணமாகும். தி நியூ யார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறபடி, ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஒரு வழக்கறிஞர், “பாதிரிமாரால் பால் சம்பந்தமாக தொந்தரவு செய்யப்பட்டதாக சொல்லும் கட்சிக்காரர்களின் சார்பாக 27 மாநிலங்களில் 200 வழக்குகள் தீர்ப்புக்காக காத்திருக்கின்றன என்பதாக சொல்கிறார்.” உண்மையிலேயே, இந்தப் பாதிரிமார் வெளிப்படுத்தும் எந்தத் தேவபக்தியின் வேஷமும் அவர்களுடைய பொல்லாத செயல்களினால் வெறும் மாய்மாலமாக அம்பலப்படுத்தப்படுகிறது.
கடைசி நாட்களுக்குக் கூடுதலான அத்தாட்சிகள்
2 தீமோத்தேயு 3:2-4 மேலும் குறிப்பிடுகிறது, மனுஷர்கள் . . .
□ வீம்புக்காரராயும்
□ தூஷிக்கிறவர்களாயும்
□ நன்றியறியாதவர்களாயும்
□ பரிசுத்தமில்லாதவர்களாயும்
□ இணங்காதவர்களாயும்
□ அவதூறு செய்கிறவர்களாயும்
□ இச்சையடக்கமில்லாதவர்களாயும்
□ துரோகிகளாயும்
□ துணிகரமுள்ளவர்களாயும்
□ இறுமாப்புள்ளவர்களாயும் இருப்பார்கள்
‘உம்முடைய வந்திருத்தலின் அடையாளம்’ இயேசுவின் மரணத்துக்குச் சற்று முன்பாக அவரிடம் பின்வருமாறு கேட்கப்பட்டது: ‘உம்முடைய வந்திருத்தலுக்கும் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளம் என்ன?’ (மத்தேயு 24:3, NW) இயேசு கடைசி நாட்களை தனிப்படுத்திக் காட்டும் நிலைமைகளையும் சம்பவங்களையும் குறிப்பிட்டார். அவற்றில் சிலவற்றை நாம் ஆராயலாம்.
“ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.”—மத்தேயு 24:7.
“இருபதாம் நூற்றாண்டு—பொதுவாக சமுதாய முன்னேற்றமும் ஏழைகளின் வாழ்க்கையைக் குறித்த அதிகமான அக்கறையை அரசாங்கம் காட்டும் ஒரு காலமாக இருந்தபோதிலும்—இயந்திர துப்பாக்கி, பீரங்கி வண்டி, குண்டு வீச்சு விமானம் B-52, அணு குண்டு மற்றும் கடைசியாக ஏவுகணையினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டிருக்கிறது. வேறு எந்தச் சகாப்தத்தையும்விட அதிக குரூரமான மற்றும் நாசமுண்டாக்கிய போர்களால் இது குறிக்கப்பட்டிருக்கிறது.”—வரலாற்றின் மைல்கற்கள்.
‘ஓரிடத்தை அடுத்து மற்றொன்றில் நிலநடுக்கங்கள்.’—மத்தேயு 24:7, NW.
இந்த நூற்றாண்டில், ரிக்டர் அளவில் 7.5 முதல் 8.3 திறன் கொண்ட நிலநடுக்கங்கள் சிலி, சீனா, இந்தியா, ஈரான், இத்தாலி, ஜப்பான், பெரு மற்றும் துருக்கியில் ஏற்பட்டிருக்கின்றன.
“பயங்கரமான தோற்றங்களும்.”—லூக்கா 21:11, NW.
சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட பயங்கரமான சம்பவங்களின் காரணமாக, பயம் என்பது ஒருவேளை மக்களின் வாழ்க்கையில் மிகப் பெரிய தனியொரு உணர்ச்சியாக இருக்கிறது. மக்கள் தங்கள் பாதுகாப்பையும் தங்களுடைய ஜீவனைத்தானேயும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் போர், குற்றச்செயல், தூய்மைக்கேடு, நோய், பணவீக்கம் இன்னும் மற்ற அநேக காரியங்களைக் குறித்து பயப்படுகின்றனர்.
“பஞ்சங்களும்.”—மத்தேயு 24:7.
“உதவிக் குழுக்கள் அற்பமாக வாய்ச்சண்டையிட்டுக் கொண்டிருக்கையில் வறுமை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது,” என்பதாக நியூ சையன்டிஸ்ட் பத்திரிகையின் ஒரு தலையங்கம் அறிவிக்கிறது. ஒரு முன்னாள் ஐ.மா. ஜனாதிபதியின்படி, பஞ்சம் கிரகத்தை இரண்டே பத்தாண்டுகளுக்குள் சூறையாடிவிடும் அச்சுறுத்தல் இருந்துவருகிறது. “இப்படிப்பட்ட பீதியுண்டாக்கும் முன்னறிவிப்புகளின் மத்தியிலும், வளர்ந்துவரும் நாடுகளுக்கு வேளாண்மை வளர்ச்சிக்காக பணக்கார நாடுகள் கொடுத்துவரும் உதவித் தொகை குறிப்பிடத்தக்கவிதமாக குறைந்துவருகிறது,” என்பதாக கட்டுரை குறிப்பிடுகிறது.
“ஓரிடத்தை அடுத்து மற்றொன்றில் கொள்ளைநோய்களும்.”—லூக்கா 21:11, NW.
நிபுணர்களின் ஒரு குழுவின்படி, ஆண்டுதோறும் 50 கோடி டாலர் பணச்செலவை உட்படுத்தும், எய்ட்ஸ் நோய்க்கு எதிரான ஐ.மா. அரசாங்கத்தின் யுத்தம் சோகமான ஒரு தோல்வி என்றழைக்கப்பட்டுள்ளது. “எய்ட்ஸின் காரணமாக நாம் ஆக்கத் திறனுள்ள ஒரு முழு சந்ததியை இழந்துகொண்டிருக்கிறோம்,” என்பதாக சுமார் 200 முதல் 300 நோயாளிகளோடு வேலைசெய்யும் டாக்டர் டானா ஸ்வீட் எச்சரிக்கிறார். ஐக்கிய மாகாணங்களில், 25 முதல் 44 வயதுகளிலுள்ள ஆண்களின் மரணத்துக்கு எய்ட்ஸ் இப்பொழுது முதன்மையான காரணமாக இருந்துவருகிறது.
‘அக்கிரமம் மிகுதியாதல்.’—மத்தேயு 24:12.
ஐ.மா.-வில் 2,500 இளைஞரை வைத்து நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வு, 15 சதவீதத்தினர் கடந்த 30 நாட்களில் ஏதாவது ஒரு சமயத்தில் கைத்துப்பாக்கியை கொண்டுசென்றதையும் 11 சதவீதத்தினர் கடந்த ஆண்டில் சுடப்பட்டிருப்பதையும் 9 சதவீதத்தினர் ஏதோவொரு சமயத்தில் மற்றொரு நபரை துப்பாக்கியால் சுட்டதையும் வெளிப்படுத்தியது.
முன்னால் என்ன இருக்கிறது?
நாம் பார்த்த வண்ணமாகவே, மனிதவர்க்கம் சரியான பாதையிலிருந்து, சமாதானமான ஓர் உலகிலிருந்து வெகுதூரம் விலகிச்சென்றுவிட்டிருக்கிறது. அளவுகளில் மட்டுமே மேல்கூறப்பட்ட நிலைமைகள் ஈடு இணையற்றவையாகும். ஆம், மனித குடும்பம் தன்னைப் பழக்கப்பட்டில்லாத ஒரு பிராந்தியத்தில் காண்கிறது. கடைசி நாட்கள் என்றழைக்கப்படும் ஒரு சகாப்தத்தினூடாக அது கடந்துசெல்கிறது.
இந்தக் காலப்பகுதிக்குப் பின் என்ன வரும்?
[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]
Michael Lewis/Sipa Press