மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள்!
“மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க . . . நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடக்கடவோம்.”—எபிரெயர் 12:1, தி.மொ.
ஓட்டப் பந்தயவெளியில் ஓடுகிறவராக உங்களைக் காட்சிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் கண்கள் இலக்கை நோக்கி ஊன்றியிருக்க முன்னோக்கி விரைந்து ஓடுகிறீர்கள். உங்களைக் கவனித்துப் பார்த்துக்கொண்டிருப்பவர்களைப் பற்றியதென்ன? அவர்களெல்லாரும் வெற்றிபெற்ற ஓட்டக்காரர்களே! அவர்கள் வெறும் பொதுக் காட்சியாளர் அல்ல, வார்த்தையிலும் செயலிலும் திறமையாய் உழைத்தச் சாட்சிகள்.
2 பவுல் அப்போஸ்தலன் (பொ.ச. 61-ல்) எபிரெய கிறிஸ்தவர்களுக்கு எழுதினபோது இத்தகைய உருவகமான காட்சியமைவை மனதில் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு உறுதியான விசுவாசம் தேவைப்பட்டது. (எபிரெயர் 10:32-39) ரோமரின் கைகளில் (பொ.ச. 70-ல்) எருசலேமின் அழிவுக்கு ஒருசில ஆண்டுகளுக்கு முன்னால், (பொ.ச. 66-ல்) அது சேனைகளால் சூழப்பட்டிருக்கையில் அதைவிட்டு ஓடிப்போகும்படி இயேசு கொடுத்த எச்சரிக்கைக்கு விசுவாசத்தால் மாத்திரமே அவர்கள் செவிகொடுக்க முடியும். “நீதியினிமித்தம் துன்புறுத்தப்படுகையிலும்” விசுவாசமே அவர்களைத் தளராமல் தொடரச் செய்யும்.—மத்தேயு 5:10; லூக்கா 21:20-24.
3 கிறிஸ்தவத்துக்கு முந்தின விசுவாசச் செயல்களை (எபிரெயர் 11-ம் அதிகாரத்தில்) புணராலோசனை செய்தபிறகு, அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு ஊக்குவித்தான்: “மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும் [ஆவிக்குரிய விதத்தில் நமக்கு இடையூராக இருப்பவற்றையும்] நம்மை எளிதில் அகப்படுத்துகிற பாவத்தையும் [விசுவாச குறைவையும்] விலக்கி . . . நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடக்கடவோம்.” (எபிரெயர் 12:1) செயலில் காட்டப்பட்ட விசுவாசத்தை பவுல் புணராலோசனை செய்ததானது அதன் பல்வேறு அம்சங்களை மேலெழும்பி நிற்கச் செய்கிறது, மேலும் நாம் பரலோகத்தில் அழியாமையை அடையத்தக்க ஓட்டத்தை ஓடும் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களானாலுஞ்சரி அல்லது பரதீஸிய பூமியில் முடிவில்லா வாழ்க்கையின் இலக்கை கொண்டு ஓடும் “திரள் கூட்டத்தாரின்” ஒரு பாகமாக இருந்தாலுஞ்சரி, அது நமக்கு உதவும். (வெளிப்படுத்துதல் 7:4-10; லூக்கா 23:43; ரோமர் 8:16, 17) ஆனால் விசுவாசம் என்றால்தான் என்ன? இந்த ஆவிக்குரிய வைரக்கல்லின் சில அம்சங்கள் facets of this gem?என்ன? மேலும் நமக்கு விசுவாசம் இருந்தால் நாம் எவ்வாறு நடந்துகொள்வோம்? இத்தகைய கேள்விகளுக்கு நீங்கள் விடைகளைத் தேடுகையில் எபிரெயர் 11, 12-ம் அதிகாரங்களிலிருந்து குறிப்பிடப்பட்ட வசனங்களை உங்களுடைய தனிப்பட்ட படிப்பின்போதும் சபையாக படிக்கும்போதும் வாசியுங்கள்.
விசுவாசம் என்றால் என்ன
4 பவுல் முதலாவதாக விசுவாசத்தை விளக்குகிறான். (எபிரெயர் 11:1-3 வாசிக்கவும்.) விசுவாசம் என்ற வார்த்தையின் அர்த்தத்தின் ஒரு பகுதி, “எதிர்நோக்கி ஆசிக்கிறவைகளைப்பற்றிய நிச்சயம்” என்பதாகும். விசுவாசத்தை உடைய ஒருவருக்கு கடவுள் வாக்கு கொடுக்கும் ஒவ்வொரு காரியமும் ஏற்கெனவே நிறைவேற்றமடைந்ததுபோல் அவ்வளவு உறுதியாக இருக்கிறது. விசுவாசம் என்பது “காணப்படாதவைகளைப் பற்றிய உறுதி” “அவை காணப்படாதவைகளாக இருந்தபோதிலும் உண்மைகளை உறுதிப்படுத்தும் காணக்கூடிய செயல்,” (NW) என்றும் அர்த்தங்கொள்கிறது. காணப்படாத உண்மைகளின் நம்பவைக்கும் ஆதாரங்கள் அவ்வளவு பலத்தவையாக இருப்பதனால், விசுவாசமானது அந்த ஆதாரங்களுக்குச் சமமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
5 விசுவாசத்தின் மூலமாக தாங்கள் கடவுளுக்குப் பிரியமுள்ளவர்களாக இருந்தார்கள் என்று “முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள். மேலுமாக, “காணப்படுகிறவைகள் கண்ணுக்குத் தோன்றுகிறவைகளால் உண்டாகவில்லையென்று விளங்க உலகங்கள்” (காரியங்களின் ஒழுங்குமுறை, NW)—பூமி, சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள்—ஆகியவை “கடவுளின் வார்த்தையினால் அமைக்கப்பட்டனவென்று நாம் விசுவாசத்தினால் உணர்ந்துகொள்ளுகிறோம்.” அவர் காணக்கூடாத ஆவியாக இருப்பதனால் நாம் அவரைக் காணக்கூடாதவர்களாக இருந்தபோதிலும், இவை யாவற்றின் சிருஷ்டிகர் யெகோவா என்று நாம் உறுதியோடு நம்புகிறோம்.
விசுவாசமும் “பூர்வீக உலகமும்”
6 விசுவாசத்தின் பல அம்சங்களில் ஒன்று, பாவங்களுக்கு ஒரு பலியின் அவசியத்தை மதித்துணருவதாகும். (எபிரெயர் 11:4 வாசிக்கவும்.) “பூர்வீக உலகத்தில்” இரத்த பலியில் தனக்கு விசுவாசம் இருந்ததை முதற் ஜோடியாகிய ஆதாம் ஏவாளின் இரண்டாவது குமாரனாகிய ஆபேல் காட்டினான். (2 பேதுரு 2:5) பாவத்தின் மரணத்தை விளைவிக்கும் பாதிப்புகளை ஆபேல் சந்தேகமில்லாமல் தன்னில் உணர்ந்தான். (ஆதியாகமம் 2:16, 17; 3:6, 7; ரோமர் 5:12) ஆதாமின் மீது கடுமையான உழைப்பையும், ஏவாள் பிரசவிக்கையில் அவள் மீது தாங்கமுடியாத வலியையும் கொண்டுவந்த கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் நிறைவேற்றத்தையும் அவன் கவனித்திருப்பான். (ஆதியாகமம் 3:16-19) ஆகையால் யெகோவா தேவன் கூறிய மற்ற காரியங்கள் யாவும் உண்மையாக நிறைவேற்றமடையும் என்ற “நிச்சயம்” அவனுக்கு இருந்தது. சர்ப்பத்தினிடம் கடவுள் பின்வருமாறு சொல்லுகையில் முக்கிய ஏமாற்றுபவனாகிய சாத்தானிடமாக திருப்பப்பட்ட வார்த்தைகளையும் இது உட்படுத்துகிறது: “உனக்கும் ஸ்திரீக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.”—ஆதியாகமம் 3:15.
7 ஆபேல் தனது சொந்த உயிருக்கு ஈடுசெய்யக்கூடிய ஒரு படமாக இருந்த மிருக பலியை கடவுளுக்கு அளிப்பதன் மூலம் வாக்குப்பண்ணப்பட்ட வித்தில் விசுவாசத்தை வெளிக்காட்டினான். ஆனால் விசுவாசம் இல்லாத அவனுடைய மூத்த சகோதரனாகிய காயீன் இரத்தமில்லாத காய்கறிகளை அளித்தான். பின்னால், கொலைபாதகனாக, காயீன் ஆபேலின் இரத்தத்தை சிந்தினான். (ஆதியாகமம் 4:1-8) ஆகிலும் யெகோவா தன்னை நீதியுள்ளவனாக கருதினார் என்பதை அறிந்தவனாய் ஆபேல் மரித்தான். “அவனுடைய காணிக்கைகளைப் பற்றிக் கடவுளே சாட்சிகொடுத்தார்.” எப்படி? விசுவாசத்தினால் ஆபேல் செலுத்தின பலியை ஏற்றுக்கொள்வதன் மூலம். அவனுடைய விசுவாசத்தின் காரணமாகவும் தெய்வீக அங்கீகாரத்தின் காரணமாகவும், ‘அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்’ என்று ஏவப்பட்டு எழுதப்பட்ட பதிவு தொடர்ந்து சாட்சிகொடுக்கிறது. பாவங்களுக்கு ஒரு பலி செலுத்தப்படுவதன் அவசியத்தை அவன் கண்டான். இதைவிட மிக அதிக முக்கியத்துவமுடைய இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலியில் உங்களுக்கு விசுவாசம் உண்டா?
8 விசுவாசமானது நாம் கடவுளுடைய செய்தியை தைரியத்தோடு பேச நம்மை அசைவிக்கும். (எபிரெயர் 11:5, 6 வாசிக்கவும்) யெகோவாவின் பூர்வீக சாட்சியாகிய ஏனோக்கு தெய்வபயமற்றவர்களின் மீது தெய்வீக நியாயத்தீர்ப்பு வருவதைப் பற்றி தைரியமாக முன்னறிவித்தான். (யூதா 14, 15) ஏனோக்கின் விரோதிகள் அவனைக் கொல்ல வகை தேடினர், ஆனால் அவன் மரண வேதனையை அனுபவிக்காதபடிக்கு “தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.” (ஆதியாகமம் 5:24) ஆகிலும், முதலாவது “அவன் கடவுளுக்கு பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சி பெற்றான்.” எப்படி? “விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடி எடுத்துக்கொள்ளப்பட்டான்.” அதே விதமாக, பவுல், கிறிஸ்தவ சபையின் பிற்கால ஆவிக்குரிய பரதீசைப் பற்றிய காட்சியைக் கண்ட பிறகு “பரதீசுக்குள் எடுக்கப்பட்டான்.” (2 கொரிந்தியர் 12:1-4) ஆகையால் யெகோவா விரோதிகளின் கைகளிலிருந்து பாதுகாப்பதற்காக, ஏனோக்கை மரணத்தின் மூலம் ஆழ்ந்த நித்திரைக்குள்ளாக்கினபோது அவன் வரப்போகும் பூமிக்குரிய பரதீசின் ஒரு காட்சியை அனுபவித்துக்கொண்டிருந்தான். கடவுளுக்குப் பிரியமுள்ளவர்களாக இருக்க, நாமுங்கூட ஏனோக்கைப் போல கடவுளுடைய செய்தியை தைரியமாக பிரசங்கிக்க வேண்டும். (அப்போஸ்தலர் 4:29-31) கடவுள் இருக்கிறார் என்றும் “அவர் தம்மை ஆவலாய் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறாரென்றும் நம்பவேண்டும்.”
9 விசுவாசத்தின் மற்றொரு அம்சமானது கடவுளுடைய கட்டளைகளை உன்னிப்பாக அல்லது நெருங்க பின்பற்றுவதாகும். (எபிரெயர் 11:17 வாசிக்கவும்) விசுவாசத்துடன் செயற்படுபவனாக, நோவா ‘கடவுள் கட்டளையிட்டபடியே செய்தான்.’ (ஆதியாகமம் 6:22; 7:16) “நோவா, இன்னும் காணப்படாதிருந்தவைகளைப் பற்றித் தெய்வ எச்சரிப்புப் பெற்று,” ஒரு பூகோள ஜலப்பிரளயம் ஏற்படும் என்ற யெகோவாவின் வார்த்தையை நம்பினான். விசுவாசத்தினாலே மேலும் கடவுளைப் பற்றிய மரியாதைக்குரிய பயபக்தியுள்ளவனாய் நோவா, “தன் குடும்பத்தை இரட்சிப்பதற்கு, பேழையை உண்டுபண்ணினான்.” கீழ்ப்படிதலின் மூலமும் நீதியுள்ள செயல்களின் மூலமும், அவன் விசுவாசமற்ற அந்த உலகத்தை துன்மார்க்க கிரியைகளுள்ளது என்று தீர்த்து அது அழிக்கப்பட தகுதியுள்ளது என்பதை எடுத்துக் காட்டினான்.—ஆதியாகமம் 6:13-22.
10 நோவா யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாகவும் இருந்தான், ஏனெனில் அவன் “நீதியை பிரசங்கித்தவனாக” இருந்தான். (2 பேதுரு 2:5) அவன் பேழையைக் கட்டுவதில் அதிக வேலையாக இருந்த போதிலும், இன்று யெகோவாவின் சாட்சிகள் செய்வதுபோலவே, அவன் பிரசங்கிக்க நேரத்தை எடுத்துக்கொண்டான். ஜலப்பிரளயத்தில் நம்பிக்கை வைக்காத அந்த ஜனங்களுக்குக் கடவுளுடைய எச்சரிப்பை அறிவிப்பவனாக தைரியமாக நோவா எடுத்து பேசினான், ஆனால் “ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்.”—மத்தேயு 24:36-39.
ஜலப்பிரளயத்துக்கு பின் வாழ்ந்த முற்பிதாக்களின் மத்தியில் விசுவாசம்
11 விசுவாசமானது யெகோவாவின் வாக்குகளில் பூரண நம்பிக்கை வைப்பதை உட்படுத்துகிறது. (எபிரெயர் 11:8-12 வாசிக்கவும்) விசுவாசத்தினால் ஆபிரகாம் (ஆபிராம்) யெகோவாவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, பொருள் சம்பந்தமாக அதிகத்தை அளிக்கக்கூடியதாக இருந்த கல்தேயரின் ஊர் என்னும் பட்டணத்தை விட்டு புறப்பட்டு போனான். “பூமியிலுள்ள வம்சங்களெல்லாம்” அவன் மூலமாக ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்றும் அவனுடைய சந்ததிக்கு ஒரு தேசம் கொடுக்கப்படும் என்றும் யெகோவா சொன்ன வாக்கை அவன் நம்பினான். (ஆதியாகமம் 12:1-9; 15:18-21) ஆபிரகாமின் மகனாகிய ஈசாக்கும் அவனுடைய பேரனாகிய யாக்கோபும் அவனோடுகூட “அதே வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரரானார்கள்.” ஆபிரகாம், “விசுவாசத்தினாலே வாக்குத்தத்த தேசத்திலே அந்நிய நாட்டில் சஞ்சரிப்பவன்போல் பரதேசியாகச் சஞ்சரித்தான்.” “அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான்; அதன் சிற்பாசாரியும் அதைக் கட்டுகிறவரும் கடவுளே.” ஆம், ஆபிரகாம் கடவுளுடைய பரலோக ராஜ்யத்துக்காக எதிர்நோக்கியிருந்தான், அதன்கீழ் அவன் பூமிக்குரிய வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவான். ராஜ்யம் உங்களுடைய வாழ்க்கையில் அப்பேர்ப்பட்ட முக்கியமான ஸ்தானத்தை வகிக்கிறதா?—மத்தேயு 6:33.
12 தெய்வ-பயமுள்ள முற்பிதாக்களின் மனைவிகளுங்கூட யெகோவாவின் வாக்குத்தத்தங்களில் விசுவாசம் உள்ளவர்களாய் இருந்தனர். உதாரணமாக, ஆபிரகாமின் மனைவியாகிய சாராள், சுமார் 90 வயது வரை பிள்ளையற்றவளாக இருந்து, மேலும், “வயது சென்றவளாயிருந்தும், . . . கர்ப்பந்தரிக்கப் பலமடைந்தாள்.” ஏனெனில், அவள் “வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணினாள்.” நாளடைவில், சாராள் ஈசாக்கைப் பெற்றாள். இப்படியாக, 100 வயதுள்ளவனாகிய ஆபிரகாமிடமிருந்து, இனவிருத்தி செய்வதைக் குறித்ததில் “சரீரம் செத்தவனென்று எண்ணப்படத்தக்க ஒருவனாலேயே, வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போல் திரளானவர்களும், கடற்கரையின் மணலைப்போல் எண்ணிறந்தவர்களும் பிறந்தார்கள்.”—ஆதியாகமம் 17:15-17; 18:11; 21:1-7.
13 அவருடைய வாக்குத்தத்தங்களின் நிறைவேற்றத்தை நாம் உடனடியாக காணவில்லையென்றாலும், விசுவாசமானது, நாம் யெகோவாவுக்கு உண்மைத்தவறாதவர்களாக இருக்கும்படி செய்யும். (எபிரெயர் 11:13-16 வாசிக்கவும்) கடவுள் தங்களுக்குச் செய்த வாக்குத்தத்தங்களின் பூரண நிறைவேற்றத்தைக் காணாமலேயே உண்மையுள்ள முற்பிதாக்கள் யாவரும் மரித்தார்கள். ஆகிலும் “தூரத்திலே அவைகளைக் [வாக்குப்பண்ணப்பட்டவைகளைக்] கண்டு வாழ்த்தி, பூமியில் தங்களை அந்நியரும் பரதேசிகளுமென்று அறிக்கையிட்”டார்கள். ஆம், அவர்கள் விசுவாசமுள்ளவர்களாய் தங்கள் வாழ்க்கையை நடத்தி முடித்தார்கள், ஏனெனில் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை ஆபிரகாமின் சந்ததியார் சுதந்தரிப்பதற்கு முன் பல சந்ததிகள் கடந்தன.
14 தங்களுடைய வாழ்க்கையின்போது தெய்வீக வாக்குத்தத்தங்களின் நிறைவேற்றத்தை அடையவில்லை என்ற உண்மையானது ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரை கசப்படையச் செய்யவில்லை, அல்லது அவர்கள் விசுவாசத் துரோகிகளாகிவிடும்படி செய்யவில்லை. அவர்கள் யெகோவாவை விட்டுவிட்டு, ஊர் தேசத்துக்கு மீண்டும் சென்று, உலகப்பிரகாரமான நடவடிக்கைகளில் ஆழ்ந்துவிடவில்லை. (யோவான் 17:16; 2 தீமோத்தேயு 4:10; யாக்கோபு 1:27; 1 யோவான் 2:15-17.) இல்லை, இந்த முற்பிதாக்கள், ஊர் தேசத்தைப் பார்க்கிலும் அதிக மேன்மையான ஒரு இடத்தை, அதாவது “பரம தேசத்தை” நாடித்தேடினார்கள். ஆதலால், யெகோவா “அவர்களுடைய கடவுளென்னப்பட வெட்கப்படுகிறதில்லை.” தங்கள் மரணம் வரைக்கும் அவர்கள் உன்னதமானவரில் தங்கள் விசுவாசத்தை காத்துக்கொள்கிறார்கள். சீக்கிரத்தில், அந்த “நகரத்தின்” அதாவது, அவர்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்ட மேசியானிய ராஜ்யத்தின் பூமிக்குரிய பகுதியில் வாழ்வதற்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள். ஆனால் உங்களைப் பற்றி என்ன? அநேக ஆண்டுகளாக நீங்கள் சத்தியத்தில் நடத்திருந்தாலும், யெகோவாவின் சேவையில் வயதாகிவிட்டிருந்தாலும், அவருடைய வாக்குப்பண்ணப்பட்ட புதிய ஒழுங்குமுறையில் நீங்கள் கட்டாயமாக உங்கள் உறுதியான நம்பிக்கையை காத்துக்கொள்ள வேண்டும். (3 யோவான் 4; 2 பேதுரு 3:11-13) அப்பேர்ப்பட்ட விசுவாசத்துக்காக நீங்களும் முற்பிதாக்களும் எத்தகைய வெகுமதியைப் பெறுவீர்கள்!
15 கேள்வி கேட்காமல் கடவுளுக்குக் கீழ்ப்படிதல் விசுவாசத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக இருக்கிறது. (எபி. 11:17-19 வாசிக்கவும்.) ஆபிரகாம் கேள்வி கேட்காமல் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்ததனால், “ஈசாக்கை” “தனக்கு ஒரே பேறானவனையே”—சாராள் மூலமாக அவனுக்கு இருந்த ஒரே மகனையே “பலியாக ஒப்புக்கொடுக்கப் பார்த்தான்.” ஆபிரகாம் இதை எப்படிச் செய்ய முடிந்தது? எப்படியெனில், “ஈசாக்கின் மூலமாக தன் சந்ததியை விளங்கப் பண்ணுவேன்” என்ற வாக்கை நிறைவேற்ற, அவசியமானால் ஈசாக்கை “மரித்தோரிலிருந்து எழுப்பவும் கடவுள் வல்லவரென்று எண்ணி”னான். ஒரு வினாடிக்குள் ஆபிரகாமின் கையிலிருந்த கத்தி ஈசாக்கின் உயிருக்கு முடிவு கொண்டுவந்திருக்கக்கூடும், ஆனால் ஒரு தேவதூதனின் குரல் இதைத் தவிர்த்தது. ஆகையால், ஆபிரகாம் ஈசாக்கை மரணத்திலிருந்து “அடையாளமாக அவனை மீண்டும் பெற்றுக்கொண்டான்.” நாமுங்கூட, நம்முடைய சொந்த உயிர் அல்லது நம்முடைய பிள்ளைகளின் உயிர் ஆபத்திலிருந்தாலும் விசுவாசத்துடன் கடவுளுக்குக் கீழ்ப்படிய தூண்டப்பட வேண்டும். (1 யோவான் 5:3) ஆபிரகாமும் ஈசாக்கும் அச்சமயத்தில் யெகோவா தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை, இயேசு கிறிஸ்துவை, அவரில் விசுவாசம் வைப்பவர்கள் நித்திய ஜீவனைப் பெறும்படியாக அவரை மீட்கும் பலியாக கொடுப்பார் என்பதைத் தீர்க்கதரிசன படமாக எடுத்துக்காட்டினார்கள் என்பதைக் கவனிப்பதும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.—ஆதியாகமம் 22:1-19; யோவான் 3:16.
16 நமக்கு விசுவாசம் இருக்குமானால், கடவுள் எதிர்காலத்துக்காக வாக்களித்திருக்கும் காரியங்களின் பேரில் நம்பிக்கை வைப்பதற்கு நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு உதவி செய்வோம். (எபிரெயர் 11:20-22 வாசிக்கவும்.) முற்பிதாக்களின் விசுவாசம் அவ்வளவு பலமுள்ளதாக இருந்ததனால், அவர்களுடைய ஜீவிய காலத்தின்போது யெகோவாவின் வாக்குத்தத்தங்கள் முழுவதுமாக நிறைவேற்றமடையாத போதிலும், அவர்கள் இவற்றை அதிக அருமையான சுதந்திரமாக தங்கள் பிள்ளைகளுக்கு கடத்தினர். இப்படியாக, “ஈசாக்கு வருங்காரியங்களைக் குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான்,” மேலும் யாக்கோபு மரணகாலத்திலே யோசேப்பின் குமாரர் எப்பிராயீம்,?check spellings மனாசே இருவரையும் ஆசீர்வதித்தான். இஸ்ரவேலர் எகிப்தைவிட்டு புறப்பட்டு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்கு போவார்கள் என்பதை யோசேப்பு தானே உறுதியாக நம்பினதனால், அவர்கள் புறப்பட்டு போகையில் தன் எலும்புகளைத் தங்களோடு எடுத்துச் செல்வார்கள் என்று தன் சகோதரர் தனக்கு வாக்கு கொடுக்கும்படி செய்தான். (ஆதியாகமம் 27:27-29, 38-40; 48:8-22; 50:24-26) யெகோவா வாக்கு கொடுத்திருக்கும் காரியங்களில் இதற்கு ஒப்பான விசுவாசத்தை வளர்க்க நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு உதவுகிறீர்களா?
கடவுளை முதலிடத்தில் வைக்க விசுவாசம் நம்மை அசைவிக்கிறது
17 விசுவாசம் நாம் யெகோவாவையும் அவருடைய ஜனங்களையும் இந்த உலகம் அளிக்கக்கூடிய வேறு எவற்றிற்கும் முன்னால் வைக்கும்படி நம்மைத் தூண்டுவிக்கிறது. (எபிரெயர் 11:23-26 வாசிக்கவும்.) மோசேயின் பெற்றோர் விசுவாசத்துடன் செயற்பட்டபோது இஸ்ரவேலர் எகிப்தியரின் கீழ் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டிய அடிமைகளாக இருந்தனர். ஆண் குழந்தைகள் பிறப்பின்போது கொல்லப்பட வேண்டுமென்ற “ராஜாவின் கட்டளைக்குப் பயப்படவில்லை. எதிர்மாறாக, அவனை மூன்று மாதம் ஒளித்துவைத்தார்கள். கடைசியாக ஒரு நாணற்பெட்டியில் அவனை வைத்து நதியோரமாய் நாணலுக்குள்ளே அப்பெட்டியை வைத்தார்கள். பார்வோனுடைய குமாரத்தி இந்தப் பெட்டியைக் கண்டு, அவனை ‘தன்னுடைய சொந்த பிள்ளையாக’ வளர்த்தாள். ஆகிலும், முதலில் மோசே தன் தகப்பன் தாய் அம்ராம் ஜோக்கபேத் வீட்டில் வளர்க்கப்பட்டு, ஆவிக்குரிய விதத்தில் பயிற்றுவிக்கப்பட்டான். பின்பு, பார்வோனின் குடும்பத்தானாக, “மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான்.” மனது சம்பந்தமாகவும் சரீர பலத்தைக் குறித்ததிலும் அதிக வல்லமைவாய்ந்தவனாய் இருந்தான்.—அப்போஸ்தலர் 7:20-22.
18 ஆகிலும், எகிப்தியரின் கல்வியும் அரச வீட்டின் பொருள் சம்பந்தமான மேன்மையும் மோசே யெகோவாவின் வணக்கத்தை நிராகரித்து விசுவாச துரோகியாகிவிடும்படி செய்யவில்லை. மறுபட்சத்தில், “விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்தான்.” தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை பாதுகாக்க அவன் செயற்பட்டபோது அவன் அப்பேர்ப்பட்ட போக்கைத் தெரிந்துகொண்டான் என்பது விளங்கியது. (யாத்திராகமம் 2:11, 12) மோசே “அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே [இஸ்ரவேலராகிய யெகோவாவின் உடன் வணக்கத்தாரோடே] துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டான்.” சரியான ஆவிக்குரிய பயிற்றுவிப்பை பெற்றிருக்கும் ஒரு உறுதியான பின்னணியுள்ள, முழுக்காட்டுதல் பெற்ற யெகோவாவின் ஊழியனாக நீங்கள் இருப்பீர்களானால், மோசேயின் முன்மாதிரியைப் பின்பற்றி மெய் வணக்கத்தின் சார்பாக உறுதியாக நிலைநிற்பீர்களா?
19 எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் “கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணி” மோசே யெகோவாவின் ஜனங்களோடு தன் பங்கை சகித்தான். கிறிஸ்துவின் பூர்வீக மாதிரியாக இருப்பதில் அல்லது கடவுளுடைய அபிஷேகம் பண்ணப்பட்டவனாக இருப்பதில் ஏற்பட்ட நிந்தையை எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் அதிக பாக்கியமென்று, மோசே அநேகமாக எண்ணியிருப்பான். அரச குடும்பத்தின் ஒரு அங்கத்தினனாக, எகிப்தில் அவன் செல்வத்தையும் அந்தஸ்தையும் அனுபவித்திருக்கக்கூடும். ஆனால், அவன் விசுவாசத்துடன் “இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்தான்.”—உயிர்த்தெழுதலின் மூலம் கடவுளுடைய வாக்குப்பண்ணப்பட்ட புதிய ஒழுங்குமுறையில் பூமியில் நித்திய ஜீவன் அடைவதன் பேரில் கண்நோட்டமாயிருந்தான்.
20 இரட்சகராக யெகோவாவின் பேரில் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பதனால் விசுவாசம் நம்மை பயமற்றவர்களாக ஆக்குகிறது. (எபிரெயர் 11:27-29.) மோசே எகிப்தியன் ஒருவனை கொன்றான் என்பதை கேள்விப்பட்டபோது, பார்வோன் அவனை கொலைசெய்ய வகைதேடினான். “ஆனால் மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி மீதியான் தேசத்தில் போய்த் தங்கி”னான். (யாத்திராகமம் 2:11-15) ஆகையால், பவுல் பின்வருமாறு சொல்லுகையில், எகிப்திலிருந்து எபிரேயர் பின்னால் வெளியேறினதைக் குறித்து மறைமுகமாக சுட்டிக்காட்டக்கூடியவனாயிருந்தான்: “விசுவாசத்தினாலே, அவன் [மோசே] காணமுடியாதவரைக் காண்கிறவன்போல் உறுதியுள்ளவனாயிருந்து, [இஸ்ரவேலின் சார்பாக கடவுளை பிரதிநிதித்துவம் செய்ததற்காக அவனைக் கொல்லுவதாக பயமுறுத்தின] ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.” (யாத்திராகமம் 10:28, 29) மோசே யெகோவாவை ஒருபோதும் காணவில்லையென்றாலும், யெகோவா அவனுடன் கொண்ட நடவடிக்கைகள் அவ்வளவு உண்மையானவையாக இருந்ததனால், அவன், ‘அதரிசனமானவரைத்’ தரிசிப்பதுபோல் நடந்துகொண்டான். (யாத்திராகமம் 33:20) யெகோவாவுடன் உங்களுக்கு இருக்கும் உறவு இவ்வளவு உறுதியாக இருக்கிறதா?—சங்கீதம் 37:5; நீதிமொழிகள் 16:3.
21 இஸ்ரவேல் எகிப்தை விட்டு புறப்படுவதற்கு சற்று முன்பு “முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடி, விசுவாசத்தினாலே, அவன் [மோசே] பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்.” ஆம், இஸ்ரவேலரின் முதற்பேறானவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்ற உறுதியான நம்பிக்கையுடன் பஸ்காவை ஆசரிப்பதற்கு விசுவாசம் தேவையாக இருந்தது, இந்த விசுவாசம் பலனளிக்கப்பட்டது. (யாத்திராகமம் 12:1-39) மேலுமாக, “விசுவாசத்தினாலே அவர்கள் வெட்டாந்தரையைக் கடந்துபோவதுபோலச் சிவந்த சமுத்திரத்தைக் கடந்துபோனார்கள். எகிப்தியரோ அப்படிச் செய்யப்பார்த்தபோது அமிழ்ந்துபோனார்கள்.” எப்பேர்ப்பட்ட அதிசயமான இரட்சகராக யெகோவா நிரூபித்தார்! இந்த இரட்சிப்பின் காரணமாக, இஸ்ரவேலர் “கர்த்தருக்கு [யெகோவாவுக்கு, NW] பயந்து, கர்த்தரிடத்திலும் [யெகோவாவினிடத்திலும், NW] அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்.”—யாத்திராகமம் 14:21-31.
22 மோசேயின் விசுவாசமும் மற்றும் முற்பிதாக்களின் விசுவாமும் இன்று யெகோவாவின் சாட்சிகளுக்கு நிச்சயமாகவே ஒரு மாதிரியாக இருக்கிறது. ஆனால் தேவாட்சிக்கடுத்த முறையில் அமைக்கப்பட்ட ஒரு ஜனமாக ஆபிரகாமின் சந்ததியாருடன் தொடர்ந்து கடவுள் கொண்டிருந்த நடவடிக்கைகளின்போது என்ன ஏற்பட்டது? பூர்வ காலத்திலுள்ள விசுவாச செயல்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளக்கூடும்? (w87 1/15)
நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்?
◻ விசுவாசம் என்றால் என்ன?
◻ ஏனோக்கின் முன்மாதிரி நமக்கு விசுவாசத்தைப் பற்றி என்ன கற்பிக்கிறது?
◻ விசுவாசமானது யெகோவாவின் வாக்குகளில் பூரண நம்பிக்கை வைப்பதை உட்படுத்துகிறது என்பதை கடவுள் பயமுள்ள முற்பிதாக்கள் எவ்வாறு காண்பித்தார்கள்?
◻ கேள்வி கேட்காமல் கடவுளுக்குக் கீழ்ப்படிவதானது விசுவாசத்தின் மற்றொரு முக்கியமான அம்சம் என்பதை ஆபிரகாமின் எந்தச் செயல் சுட்டிக்காட்டுகிறது?
◻ விசுவாசம் என்றால் யெகோவாவையும் அவருடைய ஜனங்களையும் தன்னுடைய வாழ்க்கையில் முதலிடத்தில் வைப்பதைக் குறித்தது என்பதை மோசேயின் எந்தச் செயல்கள் காட்டுகின்றன?
[கேள்விகள்]
1, 2. (எ) எபிரெய கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில் என்ன அடையாள அர்த்தமுடைய சூழ்நிலையை பவுல் மனதில் கொண்டிருந்திருக்கக்கூடும்? (பி) எபிரெயரான உடன் விசுவாசிகளுக்கு ஏன் உறுதியான விசுவாசம் தேவைப்பட்டது?
3. எபிரெயர் 12:1-ல் பேசப்படும் “நம்மை எளிதில் அகப்படுத்துகிற பாவம்” என்ன? கிறிஸ்தவர்கள் என்ன ஓட்டத்தை பொறுமையோடு ஓடும்படி உற்சாகப்படுத்தப்படுகிறார்கள்?
4. விசுவாசம் என்றால் என்ன?
5. விசுவாசத்தின் மூலம் நாம் எதை காண்கிறோம்?
6. ‘ஸ்திரீயின் வித்தைப்’ பற்றிய தீர்க்கதரிசன வார்த்தைகள் உண்மையாகும் என்பதற்கு ஆபேலுக்கு ஏன் “நிச்சயம்” இருந்தது?
7. பாவங்களுக்கு ஒரு பலி தேவை என்ற போற்றுதலை ஆபேல் எப்படிக் காட்டினான்? (பி) ‘ஆபேலின் காணிக்கைகளைக் குறித்து கடவுள் எப்படிச் சாட்சி கொடுத்தார்’?
8. ஏனோக்கு தைரியமாக சாட்சிகொடுத்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளுகிறோம்? (பி) “ஏனோக்கு மரணத்தைக் காணாதபடி எடுத்துக்கொள்ளப்பட்டது” எப்படி?
9. விசுவாசத்தின் மற்றொரு அம்சமானது கடவுளுடைய கட்டளைகளை உன்னிப்பாக பின்பற்றுவதாகும் என்பதை நோவாவின் போக்கு எப்படிக் காட்டுகிறது?
10. நோவா பேழையைக் கட்டிக்கொண்டிருந்தபோதிலும், வேறு என்ன நடவடிக்கைக்கு அவன் நேரத்தை எடுத்துக்கொண்டான்?
11. (எ) விசுவாசமானது யெகோவாவின் வாக்குகளில் பூரண நம்பிக்கை வைப்பதை உட்படுத்துகிறது என்பதை ஆபிரகாம் எவ்வாறு காண்பித்தான்? (பி) விசுவாசத்தினால் ஆபிரகாம் எந்த “நகரத்துக்காக” காத்திருந்தான்?
12. சாராள் யெகோவாவின் வாக்குத்தத்தங்களில் விசுவாசம் வைத்ததனால் என்ன நேரிட்டது?
13, 14. (எ) ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோர் “வாக்குப்பண்ணப்பட்டவைகளை அடையாதபோதிலும்,” எப்படி பிரதிபலித்தார்கள்? (பி) யெகோவாவின் வாக்குகளின் நிறைவேற்றத்தை நாம் உடனடியாக காணாவிட்டாலும் யெகோவாவினிடமாக முற்பிதாக்கள் கொண்டிருந்த உண்மைத்தவறாமையைப் பற்றி சிந்திப்பதனால் நாம் எப்படி நன்மையடையக்கூடும்?
15. (எ) ஆபிரகாம் ஈசாக்கை ஏறக்குறைய பலிகொடுக்க எது உதவிற்று? (பி) ஆபிரகாமையும் ஈசாக்கையும் உட்படுத்தின சம்பவத்தால் நம்முடைய விசுவாசம் எவ்வாறு பாதிக்கப்படவேண்டும்? (சி) அந்தச் சம்பவம் எதற்குத் தீர்க்கதரிசன மாதிரியாக இருந்தது?
16. நம்முடைய பிள்ளைகளையும் கடவுளுடைய வாக்குகளில் விசுவாசத்தையும் குறித்ததில், முற்பிதாக்கள் எப்பேர்ப்பட்ட முன்மாதிரியை நமக்கு வைத்தார்கள்?
17. மோசேயின் பெற்றோர் எப்படி விசுவாசத்துடன் செயல்பட்டார்கள்?
18. தனது விசுவாசத்தின் காரணமாக, யெகோவாவின் வணக்கத்தைக் குறித்ததில் மோசே என்ன நிலைநிற்கையை எடுத்துக்கொண்டான்?
19. மோசே யெகோவாவையும் அவருடைய ஜனங்களையும் தன்னுடைய வாழ்க்கையில் முதலிடத்தில் வைத்தான் என்பதற்கு என்ன அத்தாட்சியைக் கொடுத்தான்? (பி) மோசே “இனி வரும்” என்ன “பலனை நோக்கினவனாய்” இருந்தான்?
20. யெகோவாவின் ஊழியர்களாக விசுவாசம் நம்மை பயமற்றவர்களாக்குகிறது என்பதை மோசேயின் அனுபவத்தில் எது காட்டுகிறது?
21. எகிப்தைவிட்டு இஸ்ரவேலர் பேகையில் “விசுவாசத்தினால்” என்ன நேரிட்டது?