உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அண்மையில் வெளியான காவற்கோபுரம் பிரதிகளைக் கவனமாக ஆராய்ந்து நீங்கள் படித்திருக்கிறீர்களா? அப்படியானால், பின்வருபவற்றை ஒருவேளை உங்களால் நினைவுகூரமுடியும்
◻ யெகோவாவின் சாட்சிகள் கற்பிக்கும் முறைக்கும் கிறிஸ்தவமண்டல குருமார் கற்பிக்கும் முறைக்குமிடையே என்ன மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது?
யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய வார்த்தையின் அதிகாரத்தோடு கற்பிக்கையில், கிறிஸ்தவமண்டல குருமார் பாபிலோன் மற்றும் எகிப்து விட்டுசென்றுள்ள புறமத பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்டு கற்பிக்கிறார்கள்.—11/91, பக்கம் 25.
◻ கலாத்தியர் 5:22, 23-ல் குறிப்பிடப்பட்டுள்ள கடவுளுடைய ஆவியின் ஒன்பது கனிகளில் ஏன் அன்பு மிகப்பெரியதாக உள்ளது?
கடவுளுடைய ஆவியின் மற்ற எட்டு கனிகள், முதலில் குறிப்பிடப்பட்டுள்ள அன்பின் வெளிக்காட்டல்களாக அல்லது பல்வேறு அம்சங்களாக இருக்கின்றன. ஆவியின் இந்த மற்ற கனிகள் அவசியமான குணாதிசயங்களாகும். ஆனால் நமக்கு அன்பில்லாவிடில் இவை நமக்குப் பிரயோஜனமாயிருக்க மாட்டாது. (1 கொரிந்தியர் 13:3)—12/91, பக்கம் 14.
◻ “எங்களை சோதனைக்குட்படப் பண்ணாதீர்” என்று ஜெபிக்கும்படியாக இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொன்னபோது அவர் அர்த்தப்படுத்தியது என்ன? (மத்தேயு 6:13)
பாவம் செய்யும்படி யெகோவா நம்மைச் சோதிக்கிறார் என்று இந்த வார்த்தைகள் அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, யெகோவாவுக்குக் கீழ்ப்படிய தவறும்படி சோதிக்கப்படுகையில் அல்லது வற்புறுத்தப்படுகையில் நாம் அதற்கு இடங்கொடுத்துவிட நம்மை அனுமதிக்கக்கூடாது என்று உண்மையில் யெகோவாவைக் கேட்கலாம். நமக்கு மிக அதிகக் கடுமையாக இருக்கக்கூடிய சோதனைகள் நம் வழியில் வராதபடிக்கு நம் பாதைகளை வழிநடத்த வேண்டும் என்று நம்முடைய பிதாவை வருந்தி கேட்டுக்கொள்ளலாம். (1 கொரிந்தியர் 10:13)—9/91, பக்கம் 20.
◻ ஒருவர் எப்பொழுது முழுக்காட்டப்பட வேண்டும்?
முழுக்காட்டுதல் என்பது கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்காக ஒருவர் யெகோவாவுக்கு ஒரு முழுமையான, நிபந்தனையற்ற ஒப்புக்கொடுத்தலை இயேசு கிறிஸ்துவின் மூலம் செய்யும் போது எடுக்க வேண்டிய ஒரு படியாகும்.—9/91, பக்கம் 31.
◻ நோவாவின் விசுவாசம் எவ்விதமாக உலகத்தை ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்தது? (எபிரெயர் 11:7)
நோவாவையும் அவன் குடும்பத்தையும் தவிர, மற்றவர்கள் தங்கள் வாழ்க்கைப் பாணியை மாற்றிக் கொள்ள மனமுள்ளவர்களாக இருந்திருப்பார்களேயானால், ஜலப்பிரளயத்தைத் தப்பிப் பிழைத்திருக்கக்கூடும் என்பதை அவனுடைய கீழ்ப்படிதலும் நீதியுள்ள நடத்தையும் காண்பித்தன. அவனுடைய சொந்த அபூரணமான மாம்சம், அவனைச் சுற்றியிருந்த உலகின் அழுத்தம் மற்றும் பிசாசு ஆகியவற்றின் அழுத்தங்கள் மத்தியிலும் கடவுளுக்குப் பிரியமான ஒரு வாழ்க்கையை நடத்துவது கூடிய காரியம் என்பதை நோவா நிரூபித்தான்.—10/91, பக்கம் 19.
◻ ஒரு கிறிஸ்தவன் உடல் நோய், மனச்சோர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளித்துக் கொண்டிருக்கையில், தன்னுடைய சந்தோஷத்தை எவ்வாறு காத்துக் கொள்ள முடியும்?
கடவுளுடைய வார்த்தை தேவையான ஆறுதலையும் வழிநடத்துதலையும் அளிக்கிறது. சங்கீதங்களை வாசிப்பது அல்லது அவை வாசிக்கப்படுவதை கேட்பது மூலம் தேவையான புத்துணர்ச்சியைப் பெற்றுக்கொள்ள முடியும். தாவீது நமக்கு ஆலோசனை கொடுத்தான்: “யெகோவாவின் மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாட வொட்டார்.” யெகோவா நிச்சயமாகவே “ஜெபத்தைக் கேட்கிறவர்” என்பதாகவும்கூட அவன் நமக்கு உறுதியளித்திருக்கிறான். (சங்கீதம் 55:22, தி.மொ.; 65:2) நம்முடைய பிரச்னைகளோடு போராடி வெல்ல, யெகோவாவின் அமைப்பு, அதன் பிரசுரங்கள் மற்றும் அதன் சபை மூப்பர்கள் மூலமாக உதவி செய்ய எப்பொழுதும் ஆயத்தமாய் இருக்கிறது.—4/91, பக்கங்கள் 14–15.