-
மோசேயின் விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்காவற்கோபுரம்—2014 | ஏப்ரல் 15
-
-
1, 2. (அ) மோசே தன்னுடைய 40 வயதில் என்ன தீர்மானம் எடுத்தார்? (இப்பக்கத்திலுள்ள படத்தைப் பாருங்கள்.) (ஆ) மோசே ஏன் அடிமையாக வாழத் தீர்மானித்தார்?
எகிப்திலேயே இருந்தால் ராஜபோக வாழ்க்கை வாழலாம் என்பதை மோசே அறிந்திருந்தார். செல்வச்சீமான்கள் மாட மாளிகைகளில் வாழ்வதைப் பார்த்திருந்தார். ராஜாவின் வீட்டில் வளர்ந்த அவர் கலை, வானியல், கணிதம், அறிவியல் என ‘எகிப்தியருடைய எல்லாத் துறைகளிலும் பயிற்சி பெற்றிருந்தார்.’ (அப். 7:22) எகிப்திலிருந்த சாதாரண குடிமகனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வசதிவாய்ப்புகள், அதிகாரம், செல்வாக்கு என எல்லாவற்றையும் அனுபவிக்கும் வாய்ப்பு மோசேக்கு இருந்தது.
2 இத்தனை வசதிகள் இருந்தபோதிலும், 40 வயதில் மோசே எடுத்த ஒரு தீர்மானம் அவரை வளர்த்து ஆளாக்கிய ராஜ குடும்பத்தை குழப்பத்தில் ஆழ்த்தியது. சாதாரண எகிப்தியனாக வாழ்வதைக்கூட உதறித்தள்ளிவிட்டு, அடிமைகளோடு அடிமையாக வாழ அவர் தீர்மானித்தது ஏன் என்று யோசிக்கிறீர்களா? விசுவாசம்தான் அதற்குக் காரணம். (எபிரெயர் 11:24-26-ஐ வாசியுங்கள்.) அந்த விசுவாசத்தால், தன்னைச் சுற்றியிருந்தவற்றைவிட மேலான ஒன்றைப் பார்த்தார். ‘காணமுடியாத’ கடவுளாகிய யெகோவாமீதும் அவருடைய வாக்குறுதிகள்மீதும் விசுவாசம் வைத்தார்.—எபி. 11:27.
-
-
மோசேயின் விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்காவற்கோபுரம்—2014 | ஏப்ரல் 15
-
-
6. (அ) மோசே ஏன் “பார்வோனுடைய மகளின் மகன் என அழைக்கப்படுவதை விரும்பாதிருந்தார்”? (ஆ) மோசே சரியான தீர்மானம் எடுத்தார் என்று நாம் எப்படிச் சொல்லலாம்?
6 எதிர்காலத்தைப் பற்றிய சரியான தீர்மானம் எடுக்க விசுவாசமே மோசேக்கு உதவியது. “விசுவாசத்தினால்தான் மோசே, வளர்ந்து ஆளானபோது பார்வோனுடைய மகளின் மகன் என அழைக்கப்படுவதை விரும்பாதிருந்தார்” என்று பைபிள் சொல்கிறது. (எபி. 11:24) எகிப்தின் அரசவையில் இருந்துகொண்டே கடவுளுக்குச் சேவை செய்யலாம் என்றோ தன்னுடைய செல்வத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி தன் சகோதரர்களான இஸ்ரவேலருக்கு உதவலாம் என்றோ மோசே நினைக்கவில்லை. மாறாக, யெகோவாவை முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் முழுப் பலத்தோடும் நேசிக்க வேண்டும் என்பதில் அவர் திடத் தீர்மானமாய் இருந்தார். (உபா. 6:5) இதனால், பல பிரச்சினைகளை அவரால் தவிர்க்க முடிந்தது. எப்படியென்றால், எகிப்தியரிடமிருந்த பெரும்பாலான செல்வங்கள் இஸ்ரவேலர்களால் பிற்பாடு கொள்ளையடிக்கப்பட்டன. (யாத். 12:35, 36) பார்வோன் அவமானப்பட்டு அழிந்துபோனான். (சங். 136:15) ஆனால், மோசேக்கு என்ன நடந்தது? கடவுள் அவரைக் காப்பாற்றினார். இஸ்ரவேலர்கள் எல்லோரையும் பத்திரமாக வழிநடத்துவதற்கு தலைவராகவும் நியமித்தார். ஆம், அவருடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருந்தது.
-