-
நீங்கள் “காணமுடியாதவரை” காண்கிறீர்களா?காவற்கோபுரம்—2014 | ஏப்ரல் 15
-
-
10. (அ) கி.மு. 1513, நிசான் மாதத்தில் இஸ்ரவேலர்களுக்கு யெகோவா என்ன அறிவுரைகளைக் கொடுத்தார்? (ஆ) மோசே ஏன் கடவுளுடைய அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்தார்?
10 கி.மு. 1513, நிசான் மாதத்தில், மோசே மற்றும் ஆரோன் மூலமாக இஸ்ரவேலர்களுக்கு யெகோவா அறிவுரைகளைக் கொடுத்தார். பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவை அல்லது செம்மறியாட்டுக்கடாவை அடித்து அதன் இரத்தத்தை வீட்டுவாசல் நிலையின் மேற்சட்டத்தில் தெளிக்கும்படி சொன்னார். (யாத். 12:3-7) மோசே என்ன செய்தார் என்பதை பவுல் இப்படி எழுதினார்: “விசுவாசத்தினால்தான் அவர், இஸ்ரவேலரின் தலைப்பிள்ளைகளைக் கடவுளுடைய தூதன் கொல்லாதபடிக்குப் பஸ்காவைக் கொண்டாடி, கதவு நிலைகளில் இரத்தத்தைத் தெளித்தார்.” (எபி. 11:28) யெகோவாவின் வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேறும் என்பதை மோசே அறிந்திருந்தார். எகிப்தியரின் தலைமகன்கள் எல்லோரும் அழிக்கப்படுவார்கள் என்று யெகோவா சொன்னதை அவர் உறுதியாக நம்பினார்.
11. மோசே ஏன் இஸ்ரவேலர்களை எச்சரித்தார்?
11 எகிப்தின் தலைமகன்களை அழிப்பதற்கு யெகோவா தம்முடைய ‘தூதனை’ அனுப்பிய சமயத்தில், மோசேயின் மகன்கள் மீதியானில் பாதுகாப்பாக இருந்தார்கள். (யாத். 18:1-6) ஆனால், இஸ்ரவேலர்களுடைய தலைமகன்களின் உயிர் ஆபத்திலிருந்ததால் அவர் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து இஸ்ரவேலர்களை எச்சரித்தார். மோசே தன்னுடைய மக்களை நேசித்தார்; அவர்களை ஆபத்திலிருந்து பாதுகாக்க வேண்டுமென நினைத்ததால், உடனடியாக ‘இஸ்ரவேல் மூப்பர் யாவரையும் அழைப்பித்து: . . . பஸ்காவை [ஆட்டுக்குட்டியை] அடிக்கும்படி’ சொன்னார்.—யாத். 12:21.
12. என்ன முக்கியமான செய்தியை அறிவிக்கும்படி யெகோவா நமக்குச் சொல்லியிருக்கிறார்?
12 “கடவுளுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்பு அளிக்கும் வேளை வந்துவிட்டது; அதனால், வானத்தையும் பூமியையும் கடலையும் நீரூற்றுகளையும் படைத்தவரை வணங்குங்கள்” என்ற முக்கியமான செய்தியை யெகோவாவின் மக்கள் தூதர்களின் உதவியோடு அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள். (வெளி. 14:7) இதை அறிவிப்பதற்கான சமயம் இதுவே. மகா பாபிலோனுக்கு ‘வரப்போகும் கேடுகளிலிருந்து’ தப்பித்துக்கொள்வதற்காக அதைவிட்டு வெளியே வரும்படி நாம் மற்றவர்களை எச்சரிப்பது அவசியம். (வெளி. 18:4) ‘வேறே ஆடுகள்’ பரலோக நம்பிக்கையுள்ளவர்களோடு சேர்ந்து ‘கடவுளோடு சமரசமாகுங்கள்’ என்று மற்றவர்களைக் கெஞ்சிக் கேட்கிறார்கள்.—யோவா. 10:16; 2 கொ. 5:20.
13. நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்க்க எது உங்களுக்கு உதவும்?
13 “நியாயத்தீர்ப்பு . . . வேளை” வந்துவிட்டது என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம். அதோடு, பிரசங்கித்து சீடராக்கும் வேலையை அவசர உணர்வோடு செய்வதன் அவசியத்தை யெகோவா மிகைப்படுத்தி சொல்லவில்லை என்பதையும் நாம் புரிந்திருக்கிறோம். இதை எப்படிச் சொல்கிறோம்? அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில், “பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தேவதூதர்கள் நின்றுகொண்டு . . . பூமியின் நான்கு காற்றுகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருப்பதை” பார்த்தார். (வெளி. 7:1) மிகுந்த உபத்திரவத்தின்போது அழிவுண்டாக்கும் காற்றுகளை விடுவிப்பதற்கு அந்தத் தேவதூதர்கள் தயாராயிருப்பதை உங்கள் விசுவாசக் கண்களால் பார்க்கிறீர்களா? அப்படிப் பார்க்கும்போதுதான், நற்செய்தியை முழு நம்பிக்கையோடு உங்களால் பிரசங்கிக்க முடியும்.
-
-
நீங்கள் “காணமுடியாதவரை” காண்கிறீர்களா?காவற்கோபுரம்—2014 | ஏப்ரல் 15
-
-
1, 2. (அ) மோசே ஏன் ஆபத்தான சூழ்நிலையில் இருந்ததுபோல் தெரிந்தது? (இப்பக்கத்திலுள்ள படத்தைப் பாருங்கள்.) (ஆ) மோசே ஏன் ராஜாவின் கோபத்திற்குப் பயப்படவில்லை?
-