-
‘சகித்திருந்தவரைப் பற்றிக் கவனமாக யோசித்துப் பாருங்கள்’என்னைப் பின்பற்றி வா
-
-
‘அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றுங்கள்’
20, 21. சகிப்புத்தன்மை காட்டும் விஷயத்தில் யெகோவா நம்மிடம் எந்தளவு எதிர்பார்க்கிறார், நம்முடைய தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?
20 தம்முடைய சீஷராய் இருப்பது சவாலான விஷயம், அதற்கு சகிப்புத்தன்மை தேவை என்பதை இயேசு அறிந்திருந்தார். (யோவான் 15:20) அவருடைய முன்மாதிரி நமக்கு உந்துகோலாக இருக்கும் என்பதை உணர்ந்து, நமக்கு வழிகாட்டியாக இருக்க இயேசு முன்வந்தார். (யோவான் 16:33) சகிப்புத்தன்மைக்கு இயேசு பரிபூரண முன்மாதிரியாகத் திகழ்ந்தார் என்பது உண்மைதான், ஆனால் நாம் பரிபூரணத்தைவிட்டு வெகு தூரம் வழுவிச் சென்றிருக்கிறோமே. அப்படியிருக்க, யெகோவா நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்? அதை பேதுரு சொல்கிறார்: “கிறிஸ்து உங்களுக்காகப் பாடுகள் பட்டு, நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி வருவதற்காக உங்களுக்கு ஒரு முன்மாதிரியை வைத்துவிட்டுப்போனார்.” (1 பேதுரு 2:21) சோதனைகளை சமாளிக்கும் விஷயத்தில், இயேசு நமக்கு ஒரு “முன்மாதிரியை” விட்டுச் சென்றார்.a சகிப்புத்தன்மை காட்டுவதில் அவர் வைத்த முன்மாதிரியை ‘அடிச்சுவடுகளுக்கு’ ஒப்பிடலாம். அவருடைய அடிச்சுவடுகளை நாம் அச்சுப்பிசகாமல் அப்படியே பின்பற்ற முடியாது என்றாலும், அவற்றை “நெருக்கமாக” பின்பற்ற முடியும்.
-
-
‘சகித்திருந்தவரைப் பற்றிக் கவனமாக யோசித்துப் பாருங்கள்’என்னைப் பின்பற்றி வா
-
-
a “முன்மாதிரி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையின் நேர்பொருள், “பார்த்து எழுதுவதற்காக முதல் வரியில் உள்ள மாதிரி எழுத்துக்கள்.” கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்திய ஒரே எழுத்தாளர் அப்போஸ்தலன் பேதுருதான். இது, “பிள்ளைகள் எழுதப் பழகும் கையெழுத்து-மாதிரி (ஹான்ட்-ரைட்டிங்) புத்தகத்தில் உள்ள முதல் வரியை (காப்பி-ஹெட்)” குறிக்கிறது; “இந்த வரியிலுள்ள முத்து முத்தான எழுத்துக்களைப் பார்த்து தங்களால் முடிந்தளவு பிள்ளைகள் அப்படியே கீழே எழுதுவார்கள்.”
-