-
மூப்பர்களே, பெரிய மேய்ப்பர்களைப் பின்பற்றுங்கள்!காவற்கோபுரம்—2013 | நவம்பர் 15
-
-
4. இந்தக் கட்டுரையில் எந்தக் கேள்விக்கு பதிலைக் காண்போம்?
4 கிறிஸ்தவ மூப்பர்கள் ஆடுகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? ‘தலைமைதாங்கி நடத்துகிறவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி’ சபையாருக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. அதே சமயத்தில், ‘மந்தையின் மீது ஆதிக்கம் செலுத்தாமல், மந்தைக்கு முன்மாதிரிகளாக இருக்கும்படி’ மூப்பர்களுக்கு ஆலோசனை கொடுக்கப்படுகிறது. (எபி. 13:17; 1 பேதுரு 5:2, 3-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், மூப்பர்கள் மந்தையின் மீது ஆதிக்கம் செலுத்தாமல் எப்படி அவர்களை வழிநடத்தலாம்? அதாவது, தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மீறாமல் எப்படி மந்தையைக் கவனித்துக்கொள்ளலாம்?
-
-
மூப்பர்களே, பெரிய மேய்ப்பர்களைப் பின்பற்றுங்கள்!காவற்கோபுரம்—2013 | நவம்பர் 15
-
-
9. எப்படிப்பட்ட மனப்பான்மை இருக்க வேண்டுமென தம் சீடர்களிடம் இயேசு சொன்னார்?
9 ஒரு கண்காணியின் பொறுப்பைப் பற்றி யாக்கோபும் யோவானும் கருதிய விதத்திற்கும் இயேசு கருதிய விதத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த இரண்டு அப்போஸ்தலர்களும் கடவுளுடைய அரசாங்கத்தில் பெரிய ஸ்தானத்தில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார்கள். ஆனால், அவர்களுடைய மனப்பான்மையைச் சரிசெய்ய இயேசு இப்படிச் சொன்னார். “யூதரல்லாத மக்களின் ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். அவர்களின் முக்கியமான தலைவர்கள் மக்களின்மீது முழு அதிகாரத்தை செலுத்த விரும்புகிறார்கள். ஆனால், நீங்கள் அப்படி இருக்கக்கூடாது. உங்களில் ஒருவன் பெரியவனாக ஆக விரும்பினால், அவன் உங்களுக்கு ஒரு வேலைக்காரனைப் போல ஊழியம் செய்ய வேண்டும்.” (மத். 20:25, 26, ஈஸி டு ரீட் வர்ஷன்) ஆம், சக கிறிஸ்தவர்கள்மீது ‘ஆதிக்கம் செலுத்த’ அல்லது ‘அதிகாரம் செலுத்த’ விரும்பும் மனப்பான்மையை அப்போஸ்தலர்கள் தவிர்க்க வேண்டியிருந்தது.
10. மந்தையிடம் மூப்பர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென இயேசு விரும்புகிறார், இந்த விஷயத்தில் பவுல் என்ன முன்மாதிரி வைத்திருக்கிறார்?
10 மந்தையிடம் தாம் நடந்துகொண்டதைப் போலவே கிறிஸ்தவ மூப்பர்களும் நடந்துகொள்ள வேண்டுமென இயேசு எதிர்பார்க்கிறார். ஆகவே, அவர்கள் சக கிறிஸ்தவர்கள்மீது அதிகாரம் செலுத்தாமல் வேலைக்காரர்களைப் போல அவர்களுக்கு உதவ மனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். அப்போஸ்தலன் பவுலுக்கு அப்படிப்பட்ட தாழ்மையான குணம் இருந்தது; அதனால்தான், எபேசு சபையிலிருந்த மூப்பர்களிடம் இப்படிச் சொன்னார்: “நான் ஆசிய மாகாணத்திற்கு வந்து உங்களோடிருந்த நாள்முதல் எப்படி நடந்துகொண்டேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். . . . மிகுந்த மனத்தாழ்மையோடு . . . எஜமானருக்கு ஊழியம் செய்தேன்.” அந்த மூப்பர்கள் மிகுந்த ஆர்வத்தோடும் மனத்தாழ்மையோடும் மற்றவர்களுக்கு உதவ வேண்டுமென அப்போஸ்தலன் பவுல் ஆசைப்பட்டார். “கடினமாக உழைத்துப் பலவீனருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை நான் உங்களுக்கு எல்லாவற்றிலும் காண்பித்திருக்கிறேன்” என்றும் அவர்களிடம் கூறினார். (அப். 20:18, 19, 35) கொரிந்து கிறிஸ்தவர்களிடம் பேசுகையில், தான் அவர்களுடைய விசுவாசத்திற்கு அதிகாரி அல்ல, மாறாக அவர்களுடைய சந்தோஷத்திற்காக தாழ்மையோடு உழைக்கும் சக வேலையாள் என்றார். (2 கொ. 1:24) மனத்தாழ்மை காட்டுவதிலும் கடினமாக உழைப்பதிலும் இன்றுள்ள மூப்பர்களுக்கு பவுல் ஒரு சிறந்த முன்மாதிரி.
-
-
மூப்பர்களே, பெரிய மேய்ப்பர்களைப் பின்பற்றுங்கள்!காவற்கோபுரம்—2013 | நவம்பர் 15
-
-
“மந்தைக்கு முன்மாதிரிகளாக இருங்கள்”
13, 14. எந்தெந்த விஷயங்களில் மூப்பர்கள் மந்தைக்கு முன்மாதிரிகளாக இருக்க வேண்டும்?
13 “மந்தையின் மீது ஆதிக்கம் செலுத்தாமல்” இருங்கள் என்று சபையிலுள்ள மூப்பர்களுக்கு ஆலோசனை கொடுத்ததோடு, “மந்தைக்கு முன்மாதிரிகளாக இருங்கள்” என்றும் அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். (1 பே. 5:2, 3) ஒரு மூப்பர், எப்படி மந்தைக்கு முன்மாதிரியாக இருக்க முடியும்? “கண்காணியாவதற்குத் தகுதிபெற முயலுகிற” ஒருவருக்கு இருக்க வேண்டிய தகுதிகளில் இரண்டை கவனியுங்கள். அவர் “தெளிந்த புத்தியுள்ளவராக,” “குடும்பத்தைச் சிறந்த விதத்தில் நடத்துகிறவராக” இருக்க வேண்டும். ஒரு மூப்பர் குடும்பஸ்தனாக இருந்தால், அவர் தன் குடும்பத்தை நன்றாக கவனிக்க வேண்டும். ‘தன்னுடைய குடும்பத்தையே நடத்தத் தெரியாதிருந்தால் கடவுளுடைய சபையை அவரால் எப்படிக் கவனித்துக்கொள்ள முடியும்?’ (1 தீ. 3:1, 2, 4, 5) அப்படியானால், அவர் தெளிந்த புத்தியுள்ளவராக, அதாவது பைபிள் நியமங்களை நன்கு அறிந்தவராகவும் அவற்றை வாழ்க்கையில் எப்படிப் பின்பற்றுவதென தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவர், கஷ்டமான சூழ்நிலையிலும் நிலைதடுமாற மாட்டார். நிதானமாக யோசித்து செயல்படுவார். இந்தக் குணங்களைப் பார்க்கும்போது சபையாருக்கு அவர்மீது நம்பிக்கை பிறக்கும்.
14 வெளி ஊழியத்தை முன்நின்று வழிநடத்துவதிலும் கண்காணிகள் சக கிறிஸ்தவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும். இந்த விஷயத்திலும் கண்காணிகளுக்கு இயேசு ஒரு முன்மாதிரி. இயேசு பூமியில் வாழ்ந்தபோது கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதே அவருக்கு முக்கியமாக இருந்தது. இந்த வேலையை எப்படிச் செய்வதென தம்முடைய சீடர்களுக்கு அவர் கற்றுக்கொடுத்தார். (மாற். 1:38; லூக். 8:1) பிரஸ்தாபிகள் மூப்பர்களோடு சேர்ந்து சந்தோஷமாக ஊழியம் செய்யும்போது, அவர்களுடைய பக்திவைராக்கியத்தைப் பார்க்கிறார்கள், அவர்கள் கற்பிக்கும் விதத்தையும் கற்றுக்கொள்கிறார்கள். பல வேலைகளின் மத்தியிலும் நற்செய்தியை அறிவிப்பதற்காக மூப்பர்கள் தங்களுடைய நேரத்தையும் சக்தியையும் செலவிடுவதைப் பார்த்து சபையார் எல்லோருமே அதே போன்ற பக்திவைராக்கியத்தைக் காட்ட தூண்டப்படுகிறார்கள். கூட்டங்களுக்குத் தயாரிப்பது, குறிப்புகள் சொல்வது, ராஜ்யமன்றத்தைச் சுத்தம் செய்வது, பராமரிப்பது போன்ற மற்ற வேலைகளிலும் மூப்பர்கள் சபையாருக்கு முன்மாதிரி வைக்கலாம்.—எபே. 5:15, 16; எபிரெயர் 13:7-ஐ வாசியுங்கள்.
-