வாசிப்பார்வமின்மைக்கு எதிராகக் காத்துக்கொள்ளுங்கள்
ஒரு புதுவிதமான வாசிப்புப் பிரச்சினை நம் உலகில் வேகமாகப் பரவிவருகிறது. அது வாசிப்பார்வமின்மை என்று அழைக்கப்படுகிறது. அது, “வாசிக்க முடிந்தும் அவ்விதம் செய்வதில் அக்கறையற்ற[வராய் இருக்கும்] ஒரு தன்மை அல்லது நிலை” என்று வரையறுக்கப்படுகிறது.a (மெரியம்-வெப்ஸ்டர்ஸ் கல்லிஜியட் டிக்ஷ்னரி, பத்தாம் பதிப்பு) ஆம், வாசித்தல்—முன்பு ஓர் இன்பமாக அனுபவிக்கப்பட்டது—இப்போது ஒரு வேலையாக அடிக்கடி வெறுத்துத் தள்ளப்படுகிறது. “வாசிப்பதற்கு நீங்கள் கஷ்டப்பட வேண்டும்,” என்பதாக ஒரு 12-வயதுள்ள பெண் குறைகூறினாள், “மேலும் அது வேடிக்கையல்ல.”
வயதுவந்தோர் பலரும் வாசிப்பார்வமின்மை உள்ளோராய் இருக்கின்றனர். உதாரணமாக, ஐக்கிய மாகாணங்கள், எழுத்தறிவுள்ளவர்களின் வீதம் 97-சதவிகிதம் என்பதாக உரிமைபாராட்டுகிறது; இருந்தபோதிலும், அமெரிக்க வயதுவந்தோரில் ஏறக்குறைய பாதிப்பேர் புத்தகங்களையோ பத்திரிகைகளையோ அபூர்வமாகவே வாசிக்கின்றனர்! தெளிவாகவே, வாசிப்பு ஆற்றல் இருப்பதால் எப்பொழுதும் வாசிப்பு ஆர்வம் இருக்க வேண்டுமென்பதில்லை. நன்கு-கற்றிருக்கும் ஆட்களிலும் இது உண்மையாயுள்ளது. ஹார்வார்டு யுனிவர்ஸிட்டி பட்டதாரி ஒருவர் கூறுகிறார், “ஒரு நீண்ட நாளுக்குப் பிறகு நான் களைப்பாக வீடு திரும்புகையில், ஒரு புத்தகத்தைக் கையிலெடுப்பதற்குப் பதிலாக டிவியைப் போடுகிறேன். அது எளிதாயுள்ளது.”
வாசிப்பிற்கு என்ன ஆகிவிட்டது? சமீப பத்தாண்டுகளில் பொதுமக்கள் விரும்பும் அதன் நிலையானது, கவனம்-கவரும் மூலங்களுக்கு அடிபணிந்துவிட்டது. “இப்போது நாம் நம்முடைய எம்-டிவியைக் (MTV) கொண்டிருப்பதானது—வி.சி.ஆர்.-ஐயும் நின்டென்டோவையும் மற்றும் வாக்மேனையும் கொண்டிருப்பதானது—சிரமப்பட்டு புத்தகத்தை வாசிக்கும் எதிர்பார்ப்பு, இலகுவான காலங்களில் இருந்ததைப்போல எளிதாகத் தோன்றுகிறதில்லை,” என்பதாக ஸ்ட்ராட்ஃபர்டு பி. ஷெர்மன் ஃபார்ச்சூன் பத்திரிகையில் எழுதுகிறார். ஒருவேளை வாசிப்புக்குப் போட்டியாக மிக அதிக நேரத்தையெடுப்பது தொலைக்காட்சியாகும். உண்மையாகவே, 65 வயதாகும்போது சராசரி அமெரிக்கன் தன் வாழ்நாளில் ஒன்பது வருடங்களை டிவி பார்ப்பதில் செலவழித்திருப்பார்!
வாசிப்பதன் பலன்கள் அவ்வளவு அடிக்கடி தொலைக்காட்சியின் காரணமாக இழக்கப்படுவதால், பின்வருவனவற்றைக் கருத்தில்கொள்வது நலமாயிருக்கும்.
வாசிப்பின் பலன்கள்
வாசிப்பு கற்பனாசக்தியைத் தூண்டுகிறது. தொலைக்காட்சி உங்களுக்காக உங்கள் சிந்தனையைச் செய்கிறது. எல்லாமே தெளிவாக்கப்படுகிறது: முக பாவனைகள், குரல் தொனி மாற்றங்கள், மற்றும் காட்சிகள்.
என்றபோதிலும், வாசிப்பால் நீங்கள் கதாபாத்திரங்களைத் தெரிவு செய்கிறீர்கள், மேடையை அமைக்கிறீர்கள், மற்றும் செயலை இயக்குகிறீர்கள். “உங்களுக்கு ஏராளமான சுதந்திரம் இருக்கிறது,” என்பதாக ஒரு 10 வயது பையன் கூறுகிறான். “ஒவ்வொரு கதாபாத்திரமும் எவ்வாறு இருக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களோ, சரியாக அவ்வாறே நீங்கள் தோன்றச் செய்யலாம். நீங்கள் டிவியில் ஏதோவொன்றைப் பார்க்கும்போது உள்ளதைவிட ஒரு புத்தகத்தை வாசிக்கையில் அதிக கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருக்கிறீர்கள்.” டாக்டர் ப்ரூனோ பெட்டல்ஹைம் கவனித்தறிந்தபடி, “தொலைக்காட்சி கற்பனையைக் கைப்பற்றுகிறது, ஆனால் அதை விடுவிக்கிறதில்லை. ஒரு நல்ல புத்தகம் அப்பொழுதே மனதைத் தூண்டி விடுவிக்கிறது.”
வாசிப்பு சொல்வளத்தை வளர்க்கிறது. மஸாசூஸட்ஸ் யுனிவர்ஸிட்டியைச் சேர்ந்த ரெஜனல்டு டாமரால் குறிப்பிடுகிறார், “தொலைக்காட்சி நிகழ்ச்சியை அதிகம் பார்ப்பதனால் எந்தவொரு பிள்ளையோ வயதுவந்தவரோ அதில் திறம்பட்டவராகிறதில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்ப்பதற்குத் தேவைப்படும் திறமைகள் அடிப்படைக் கொள்கையாகவே இருப்பதால் தொலைக்காட்சி பார்க்க இயலாமை என்பதைப்பற்றி நாம் இதுவரை கேள்விப்படவில்லை.”
அதற்கு நேர்மாறாக, வாசிப்பு சொல்வளத்தைத் தேவைப்படுத்தவும் வளர்க்கவும் செய்கிறது; அது பேசுவதோடும் எழுதுவதோடும் பிரிக்கமுடியாதபடி பின்னிப்பிணைந்துள்ளது. ஒரு மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் கூறுகிறார்: “ஒரு மாணவராக உங்கள் வெற்றியானது, உங்கள் சொற்றொகுதியின்மீது—நீங்கள் வாசிக்கையில் எதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்பதிலும் நீங்கள் எழுதுகையில் எப்படி பகுத்தாராய்கிறீர்கள் என்பதிலும் அளவிடமுடியாமல் சார்ந்திருக்கிறது என்பதில் சந்தேகமேயில்லை. ஆகவே, ஒரு நல்ல சொற்றொகுதியை வளர்க்க வாசிப்பைத் தவிர வேறு வழியே இல்லை—ஒன்றுகூட இல்லை.”
வாசிப்பு பொறுமையை வளர்க்கிறது. பார்ப்பவர் தான் பார்த்துக் கொண்டிருக்கும் காரியங்களின்மீது சிந்தனைசெய்வதற்கு சமயத்தை அனுமதிக்காத வகையில், ஓராயிரத்துக்கும் மேலான உருவங்கள் வெறும் ஒரு மணிநேரத்தில் டிவி திரையில் மின்னல் வேகத்தில் கடந்துசெல்லலாம். “ஒரு குறுகியளவு கவனிக்கும் திறனை இந்த உத்தி வெளிப்படையாகவே திட்டமிடுகிறது,” என்பதாக டாக்டர் மாத்யூ டூமான்ட் கூறுகிறார். ஆச்சரியப்படுத்தாத வகையில், பிள்ளைகள் மற்றும் வயதுவந்தோர் ஆகிய இரு சாராரிலுமே—உணர்ச்சிவசப்பட்டுத் தீர்மானம் செய்தல் மற்றும் அமைதியின்மை ஆகியவற்றுக்கும் அதிகப்படியான டிவி பார்த்தலுக்கும் சம்பந்தம் இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
வாசிப்புக்குப் பொறுமை தேவை. “வாக்கியங்கள், பத்திகள் மற்றும் பக்கங்கள் மெதுவாக, தொடர் வரிசையாக, மேலும் வாதமுறையின்படி எண்ணங்களை வெளியிடுவதானது, நிச்சயமாகவே உள்ளுணர்வு சார்ந்ததாயில்லை,” என்று தகவல் தொடர்பு நிபுணரான நீல் போஸ்ட்மன் எழுதுகிறார். தன் சொந்த முன்னேற்ற வேகத்தில், வாசகர் அந்தப் பக்கத்திலுள்ள விஷயத்தை அர்த்தப்படுத்தி, கணித்து, மேலும் திரும்பவும் நினைத்துப்பார்க்க வேண்டும். வாசிப்பு என்பது, பொறுமையை வற்புறுத்தும்—மற்றும் வளர்க்கும்—இரகசிய பாஷையிலுள்ளதைக் கண்டுபிடிக்கும் ஓர் உட்சிக்கலான செய்முறையாகும்.
ஒரு சமநிலை நோக்கு
வாசிப்புக்கு பயன்கள் இருந்தபோதிலும், தொலைக்காட்சிக்கும் சிறப்புத்தன்மைகள் உள்ளதை ஒத்துக்கொள்ளவேண்டும். சில குறிப்பிட்ட வகைகளான தகவல்களைத் தெரிவிப்பதில் அது வாசிப்பை மிஞ்சக்கூடும்.b வசீகரிக்கிற ஒரு டிவி காட்சியானது, வாசிப்பிலும் அக்கறையைத் தூண்டக்கூடும். “பிள்ளைகளின் புத்தகத்தையும் அறிவியலையும் நாடகமாக்கும் டிவி காட்சிகள், அவர்கள் அவற்றையும் அவற்றோடு தொடர்புடைய சங்கதிகளையும் பற்றிய புத்தகங்களைத் தேடிச்செல்லும்படி செல்வாக்கு செலுத்துகின்றன என்பதாக அறிவிக்கப்படுகிறது,” என்று தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா கூறுகிறது.
ஒரு சமநிலை நோக்கு அத்தியாவசியமானது. அச்சடிக்கப்பட்ட பக்கமும் தொலைக்காட்சியும் இரு வித்தியாசமான மூலங்களாக உள்ளன. ஒவ்வொன்றும் இயல்பான பலத்தையும் குறைபாடுகளையும் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் பிரயோகிக்கப்படலாம்—அல்லது துர்ப்பிரயோகிக்கப்படலாம். ஆம், ஒருவர் தன்னையே பிரித்துக்கொண்டு செல்லுமளவுக்கு மட்டுமீறி வாசிப்பது, மட்டுமீறி டிவி பார்ப்பதைப்போன்றே தீங்கு செய்வதாய் இருக்கக்கூடும்.—நீதிமொழிகள் 18:1; பிரசங்கி 12:12.
இருந்தபோதிலும், பார்க்கக்கூடிய பொழுதுபோக்கை ஆதரிக்கும் வகையில் வாசிப்பு அடிக்கடி மட்டமாகக் கருதப்படுகிறது. ஒரு ஜப்பானிய செய்தியாளர் புலம்புகிறார்: “நாம் வாசகர்களின் பண்பாட்டிலிருந்து பார்ப்பவர்களின் பண்பாட்டிற்கு மாறிக்கொண்டிருக்கிறோம்.” இது விசேஷமாக இளைஞரிடையே கவனிக்கப்படுகிறது. அதன் விளைவாக, அவர்களில் பலர் வாசிப்பார்வமின்மையுடையோராய் வளர்ந்து, பிறகு அதன் விளைவை அனுபவிக்கின்றனர். அப்படியானால், வாசிக்க ஓர் ஆவலை வளர்ப்பதற்குப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு எப்படி உதவலாம்?
பெற்றோர் எப்படி உதவலாம்
முன்மாதிரி வையுங்கள். “நல்ல வாசகர்களை எப்படி வளர்ப்பது” என்று தலைப்பிடப்பட்ட ஒரு நியூஸ்வீக் கட்டுரை இந்தக் கூரிய அறிவுரையைக் கொடுக்கிறது: “நீங்கள் அதிக நேரத்தை டிவிக்கு முன்பு செலவிடுபவர்களாயிருந்தால், உங்கள் பிள்ளையும் அதேவிதமான ஒன்றாய் ஆகும். மறுபட்சத்தில், நீங்கள் சுருண்டு படுத்துக்கொண்டு ஒரு புத்தகத்தை சுவாரஸ்யமாக வாசித்துக் கொண்டிருப்பதை உங்கள் பிள்ளைகள் காண்கையில், நீங்கள் வாசிப்பைப் பற்றி வாயளவில் மட்டும் கூறுகிறதில்லை, ஆனால் நடைமுறையிலும் அவ்விதமே செய்கிறீர்கள் என்ற கருத்தைப் பெறுவர்.” அதைவிட மேலாக, சில பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சப்தமாக வாசித்துக் காட்டுகின்றனர். அவ்விதம் செய்கையில், ஓர் இதமான பந்தத்தை—இன்று விசனகரமாக பல குடும்பங்களில் இல்லாத ஒன்றை அவர்கள் உருவாக்குகின்றனர்.
ஒரு நூலகத்தைத் தொடங்குங்கள். “சுற்றிலும் புத்தகங்களை—ஏராளமான புத்தகங்களைக் கொண்டிருங்கள்,” என்று டாக்டர் தியடோர் ஐஸிக் ரூபன் பரிந்துரைக்கிறார். “அவை அங்கிருந்ததாலும் மற்றெல்லாரும்கூட அவற்றை வாசித்துக் கொண்டிருந்ததாலும் நான் அவற்றை வாசித்ததாக எனக்கு நினைவிருக்கிறது.” புத்தகங்கள் தயார்நிலையில் கிடைப்பதாயிருந்தால் பிள்ளைகள் வாசிப்பர். தங்கள் சொந்த நூலகத்தின் பாகமாக புத்தகங்கள் இருந்தால், அவற்றை வாசிக்கும்படியான ஏவுதல் இன்னும் அதிகமாகும்.
வாசிப்பை இன்பகரமானதாக்குங்கள். ஒரு பிள்ளை வாசிக்க விரும்பினால், கற்றுக்கொள்ளும் போராட்டத்தில் பாதியளவு வெற்றியடைந்ததாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே உங்கள் பிள்ளைக்கு வாசிப்பை ஓர் இன்பகரமான அனுபவமாக்குங்கள். எப்படி? முதலாவதாக, தொலைக்காட்சி பார்க்கும் நேரத்திற்கு மட்டளவு வையுங்கள்; அது பெரும்பாலும் எப்போதும் வாசிப்பை முந்திக்கொள்கிறது. இரண்டாவதாக, வாசிப்பை முன்னேற்றுவிக்கும் ஒரு சூழ்நிலையை உருவாக்குங்கள்; நல்ல விளக்கொளியுடைய ஒரு தனிப்பட்ட நூலகத்தைப்போன்ற அமைதியான இடங்களும் நேரங்களும் வாசிப்பை வரவேற்கின்றன. மூன்றாவதாக, வாசிப்பைக் கட்டாயப்படுத்தாதீர்கள். வாசிப்பதற்கான பொருட்களையும் சந்தர்ப்பங்களையும் சுலபமாய்ப் பெறக்கூடியதாக்குங்கள், ஆனால் பிள்ளைதானே ஆவலை வளர்க்க அனுமதியுங்கள்.
மிகவும் இளவயதாயிருக்கையிலேயே தங்கள் பிள்ளைகளுக்கு சில பெற்றோர் வாசித்துக்காட்ட ஆரம்பிக்கின்றனர். அது பிரயோஜனமுள்ளதாயிருக்கக்கூடும். மூன்று வயதாகையில், ஒரு பிள்ளை சாதாரணமான வயதுவந்தோர் உரையாடலில் தான் பிரயோகிக்கும் மொழியின் பெரும்பாகத்தை—இன்னும் தான் சரளமாக இந்த வார்த்தைகளை வெளிப்படுத்த முடியாதபோதிலும் புரிந்துகொள்கிறது என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர். “பிள்ளைகள், தாங்கள் வாய்மொழியாகப் பிரயோகிப்பதற்குக் கற்றுக்கொள்ளும் வேகத்தைவிட அதிவேகத்தில் சீக்கிரமாகவே மொழியைப் புரிந்துகொள்வதற்குக் கற்றுக்கொள்ள ஆரம்பிக்கின்றனர்,” என்பதாக தி ஃபஸ்ட் த்ரீ இயர்ஸ் ஆஃப் லைஃப் என்ற புத்தகம் கூறுகிறது. தீமோத்தேயுவைக் குறித்து பைபிள் கூறுகிறது: “பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயது முதல் அறிந்தவ[ன்].” (2 தீமோத்தேயு 3:15) சிறுவயது (infant) என்ற வார்த்தை லத்தீன் வார்த்தையான இன்ஃபன்ஸ் (infans) என்ற வார்த்தைக்குச் செல்கிறது, அது “பேசாதவர்” என்ற நேர்பொருளையுடையது. ஆம், தீமோத்தேயு வேத வார்த்தைகளைத் தான் பேச முடிந்ததற்கும் வெகு முன்னதாகவே கேட்டார்.
பைபிள்—ஒரு மிகச்சிறந்த உதவி
“பைபிள் வியப்புக்கேதுவான ஓர் இலக்கியத் தொகுப்பு,” என்று தி பைபிள் இன் இட்ஸ் லிட்டரெரி மில்யெ என்ற புத்தகம் கூறுகிறது. உண்மையாகவே, அதன் 66 புத்தகங்கள் இளையவரும் முதியவரும் ஒரேவிதமாகக் கற்றுக்கொள்ளக்கூடிய செய்யுள்நடைகள், பாட்டுகள், மற்றும் வரலாற்றுப் பதிவுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. (ரோமர் 15:4) மேலுமாக, பைபிள் “தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”—2 தீமோத்தேயு 3:16, 17.
ஆம், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளே கிடைக்கக்கூடிய மிகவும் இன்றியமையாத வாசிப்புப் பொருளாகும். நல்ல காரணத்துடனேயே இஸ்ரவேலை ஆண்ட அரசர் ஒவ்வொருவரும் வேதவாக்கியங்களின் ஒரு தனிப்பட்ட நகலைக் கொண்டிருக்க வேண்டியவராயும், “தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்க” வேண்டியவராயும் இருந்தார். (உபாகமம் 17:18-20) மேலும் யோசுவா வேதவாக்கியங்களை “தாழ்வான குரலில்”—அதாவது, அவருக்குள்ளேயே, ஒரு மெதுவான குரலில்—“இரவும் பகலும்” வாசிக்கும்படி கட்டளையிடப்பட்டார்.—யோசுவா 1:8, NW.
மறுப்புக்கிடமின்றி, பைபிளின் சில பகுதிகள் எளிதான வாசிப்புப் பகுதிகளாக இல்லை. அவை ஒருமித்த கவனத்தை வற்புறுத்தலாம். நினைவிருக்கட்டும், பேதுரு எழுதினார்: “புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் ஓர் ஆவலை உண்டாக்குங்கள்.” (1 பேதுரு 2:2, NW) பழகப்பழக, கடவுளுடைய வார்த்தையாகிய “பால்”-ன்மீது மனச்சாய்வு கொண்டிருப்பது, குழந்தை அதன் தாயின் பாலுக்காக இயல்பான பேராவல் கொண்டுள்ளதைப் போன்றே சகஜமானதாகக்கூடும். பைபிள் வாசிப்புக்கான போற்றுதல் பேணி வளர்க்கப்படலாம்.c அந்த முயற்சி பலனுள்ளதே. “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது” என்று சங்கீதக்காரன் எழுதினார். (சங்கீதம் 119:105) தொல்லைமிகுந்த நமது காலங்களில் அத்தகைய வழிநடத்துதல் நம் அனைவருக்கும் தேவையில்லையா?
[அடிக்குறிப்புகள்]
a பிள்ளைகள் பைபிள் அறிவுக்காக ஓர் ஆவலை உண்டாக்கிக் கொள்வதற்கு உதவிசெய்ய, உவாட்ச் டவர் சொஸைட்டி என்னுடைய பைபிள் கதை புத்தகம், பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல் போன்ற எளிதாக்கப்பட்ட பைபிள் படிப்பு உதவிப்புத்தகங்களைத் தயாரித்திருக்கிறது. அவ்விரண்டு புத்தகங்களும் ஆடியோகேஸட்டுகளிலும் கிடைக்கின்றன.
b வாசிப்பார்வமின்மை என்பது, “வாசிக்கவோ எழுதவோ முடியாத தன்மை” என்ற பொருளுடைய “எழுத்தறிவின்மை”யோடு குழப்பிக் கொள்ளப்படக் கூடாது.
c இதை உணர்ந்தவர்களாக, சமீப வருடங்களில் உவாட்ச் டவர் சொஸைட்டியினர் தங்களுடைய அச்சடிக்கும் பொருட்களோடு பைபிள்-தொடர்பான வெவ்வேறு விஷயங்களின்மீது வீடியோ கேஸட்டுகளையும் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்.