உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • விசுவாசத்தைக் காட்டுவதன்மூலம் கடவுளுடைய வாக்குறுதிகளுக்குப் பிரதிபலியுங்கள்
    காவற்கோபுரம்—1993 | ஜூலை 15
    • 4. நம் விசுவாசத்தோடுகூட என்னென்ன பண்புகளைக் கூட்டி வழங்கவேண்டும்?

      4 யெகோவாவினுடைய வாக்குறுதிகளின்மீதான விசுவாசமும், கடவுள்கொடுத்த சுயாதீனத்திற்குப் போற்றுதல் மனப்பான்மையும் நாம் ஒரு முன்மாதிரியான கிறிஸ்தவர்களாக இருப்பதற்கு மிக அதிகமானதைச் செய்ய நம்மை உந்துவிக்கவேண்டும். பேதுரு இவ்வாறு சொன்னார்: “உள்ளப்பூர்வமான எல்லா முயற்சியினால், உங்கள் விசுவாசத்தோடே நற்பண்பையும், நற்பண்போடு அறிவையும், அறிவோடே தன்னடக்கத்தையும், தன்னடக்கத்தோடே சகிப்புத்தன்மையையும், சகிப்புத்தன்மையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.” (2 பேதுரு 1:5-7, NW) ஆகவே, பேதுரு நாம் நன்றாகவே ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டிய ஒரு பட்டியலை நமக்குத் தருகிறார். இந்தப் பண்புகளை அதிக ஆழமாக ஆராய்ந்துபார்க்கலாம்.

  • விசுவாசத்தைக் காட்டுவதன்மூலம் கடவுளுடைய வாக்குறுதிகளுக்குப் பிரதிபலியுங்கள்
    காவற்கோபுரம்—1993 | ஜூலை 15
    • 9. (அ) தேவபக்தி என்றால் என்ன? (ஆ) நாம் ஏன் நம்முடைய தேவபக்தியோடு சகோதர சிநேகத்தைக் கூட்டி வழங்கவேண்டும்? (இ) நாம் எவ்வாறு அன்பை நம்முடைய சகோதரசிநேகத்தோடு கூட்டி வழங்கமுடியும்?

      9 நம்முடைய சகிப்புத்தன்மையோடுகூட, நாம் தேவபக்தியை—பயபக்தி, வணக்கம், யெகோவாவுக்கு ஊழியம்—கூட்டி வழங்கவேண்டும். தேவபக்தியை நாம் செயலில் காட்டி, யெகோவா எப்படித் தம்முடைய மக்களோடு நடந்துகொள்கிறார் என்பதைக் காணும்போது, நம் விசுவாசம் வளர்கிறது. எனினும், தெய்வபக்தியைக் காட்டுவதற்கு, நமக்கு சகோதரசிநேகம் அவசியம். என்னத்தான் இருந்தாலும், ‘தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் அன்புகூருகிறவனாக இருக்கமுடியாதே.’ (1 யோவான் 4:20) யெகோவாவின் மற்ற ஊழியர்களுக்கு உண்மையான சிநேகத்தைக் காண்பிப்பதற்கும், எப்போதுமே அவர்களுடைய நலனையே நாடுவதற்கும் நம் இருதயம் நம்மைத் தூண்டவேண்டும். (யாக்கோபு 2:14-17) ஆனால் நம்முடைய சகோதரசிநேகத்தோடுகூட அன்பையும் கூட்டி வழங்கும்படி ஏன் சொல்லப்படுகிறோம்? சான்றுகள் காண்பிக்கிறபிரகாரம், நாம் நம்முடைய சகோதரர்களுக்கு மட்டுமல்ல, முழு மனிதகுலத்திற்கும் அன்பைக் காட்டவேண்டும் என்று பேதுரு அர்த்தப்படுத்தினார். இந்த அன்பு முக்கியமாக நற்செய்தியைப் பிரசங்கிப்பதன்மூலமும் மக்களுக்கு ஆவிக்குரிய வகையில் உதவிசெய்வதன்மூலமும் காட்டப்படுகிறது.—மத்தேயு 24:14; 28:19, 20.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்