-
பைபிள்—கடவுள் சொல்லும் செய்திஇன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
1. கடவுள்தான் பைபிளின் ஆசிரியர் என்று எப்படிச் சொல்லலாம்?
கிட்டத்தட்ட 40 பேர் பைபிளை எழுதினார்கள். அதை எழுதி முடிக்க சுமார் 1600 வருஷங்கள் எடுத்தன (கி.மு. 1513 - சுமார் கி.பி. 98). வேறுவேறு ஆட்கள் பைபிளை எழுதியிருந்தாலும், அதில் இருக்கும் எல்லாமே ஒன்றுக்கொன்று ஒத்துப்போகின்றன. ஏனென்றால், கடவுள்தான் பைபிளின் ஆசிரியர். (1 தெசலோனிக்கேயர் 2:13-ஐ வாசியுங்கள்.) பைபிளை எழுதியவர்கள் சொந்தமாக எதையும் எழுதவில்லை. “கடவுளுடைய வார்த்தைகளை அவருடைய சக்தியால் தூண்டப்பட்டுதான் சொன்னார்கள்.” (2 பேதுரு 1:21) அதாவது, கடவுள் தன்னுடைய சக்தியை அவர்களுக்குக் கொடுத்து, தன் மனதில் இருப்பதை எழுத வைத்தார்.—2 தீமோத்தேயு 3:16.
-
-
யெகோவா எப்படிப்பட்டவர்?இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
4. கடவுளுடைய சக்தி
வேலைகள் செய்வதற்கு நாம் நம் கையைப் பயன்படுத்துவதுபோல், எல்லாவற்றையும் செய்வதற்கு யெகோவா தன்னுடைய சக்தியைப் பயன்படுத்துகிறார். கடவுளுடைய சக்தி பொதுவாக “பரிசுத்த ஆவி” என்று சொல்லப்படுகிறது. அது ஒரு கடவுள் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், லூக்கா 11:13-ஐயும் அப்போஸ்தலர் 2:17-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
கடவுளுடைய சக்திக்காக வேண்டும்போது கடவுள் அதை ‘பொழிவார்.’ அப்படியென்றால், அது ஒரு நபராக அல்லது கடவுளாக இருக்க முடியுமா? ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?
யெகோவா தன்னுடைய சக்தியை வைத்து ஆச்சரியமான விஷயங்களைச் செய்திருக்கிறார். சங்கீதம் 104:30-யும் 2 பேதுரு 1:20, 21-யும் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
யெகோவா தன் சக்தியை வைத்து என்னவெல்லாம் செய்திருக்கிறார்?
-