-
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்காவற்கோபுரம்—2003 | டிசம்பர் 15
-
-
அதற்கு முன்பே, அதாவது பொல்லாத தேவதூதர்கள் பரலோகத்திற்குள் செல்லக்கூடிய அனுமதி இருந்தபோதே, கடவுளுடைய குடும்பத்திலிருந்து அவர்கள் விலக்கப்பட்டு குறிப்பிட்ட கட்டுப்பாடுகளின் கீழ் இருந்தார்கள் என்பதை வலியுறுத்திக் கூற வேண்டும். உதாரணமாக, பொ.ச. முதல் நூற்றாண்டிலேயே அவர்கள் ‘மகா நாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, [ஆவிக்குரிய] அந்தகாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள்’ என யூதா 6 வெளிப்படுத்துகிறது. அதைப் போலவே, 2 பேதுரு 2:4 இவ்வாறு கூறுகிறது: “பாவஞ் செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், [ஆவிக்குரிய] அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி, நரகத்திலே [டார்டரஸ் அல்லது மிகவும் தாழ்வான நிலையிலே] தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்க ஒப்புக்கொடுத்தார்.’b
-
-
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்காவற்கோபுரம்—2003 | டிசம்பர் 15
-
-
b ஆவிக்குரிய விதத்தில் விலக்கப்பட்ட இந்த நிலையை ‘காவலில்’ வைக்கப்பட்டிருப்பதற்கு அப்போஸ்தலன் பேதுரு ஒப்பிட்டு பேசினார். என்றாலும், எதிர்காலத்தில் பிசாசுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு அடைத்து வைக்கப்படும் ‘பாதாளத்தை’ (அபிஸை) அவர் அர்த்தப்படுத்தவில்லை.—1 பேதுரு 3:19, 20; லூக்கா 8:30, 31; வெளிப்படுத்துதல் 20:1-3.
-