-
உங்களுடைய மீட்பு நெருங்கிவிட்டது!காவற்கோபுரம்—2015 | ஜூலை 15
-
-
16, 17. ஆட்டுக்குட்டியானவரின் திருமணத்துக்கு முன்பு என்ன சம்பவம் நடக்க வேண்டும்?
16 பரலோக நம்பிக்கையுள்ள 1,44,000 பேரும் பரலோகத்துக்குப் போன பிறகுதான் ஆட்டுக்குட்டியானவருடைய திருமணத்துக்கான கடைசி ஏற்பாடுகள் நடக்கும். (வெளி. 19:9) ஆனால், அதற்கு முன்பு இன்னொரு சம்பவம் நடக்கும். அது என்னவென்று இப்போது பார்க்கலாம். மீந்திருக்கும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் பூமியில் இருக்கும்போதே, கோகு கடவுளுடைய மக்களை தாக்குவான் என்பது நமக்குத் தெரியும். (எசே. 38:16) அப்போது கடவுளுடைய மக்கள் என்ன செய்வார்கள்? “யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல . . . நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்” என்ற கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படிவார்கள். (2 நா. 20:17) கோகுவின் தாக்குதல் ஆரம்பித்த பிறகு, பூமியில் இருக்கும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் ஏதோ ஒரு சமயத்தில் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள். கடவுளுடைய மக்களைக் கோகு தாக்கும்போது பரலோகத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி வெளிப்படுத்துதல் 17:14 சொல்கிறது. கடவுளுடைய மக்களின் எதிரிகள், “ஆட்டுக்குட்டியானவரோடு போர் செய்வார்கள்; ஆனால், அவர் எஜமான்களுக்கெல்லாம் எஜமானாகவும் ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாகவும் இருப்பதால் அவர்களை ஜெயித்துவிடுவார். அவரோடு இருக்கிறவர்களும் ஜெயிப்பார்கள்; அவர்கள் அழைக்கப்பட்டவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், உண்மையுள்ளவர்கள்.” பரலோகத்தில் தம்மோடு ராஜாக்களாக இருக்கும் 1,44,000 பேரோடு சேர்ந்து, இயேசு பூமியில் இருக்கும் கடவுளுடைய மக்களைக் காப்பாற்றுவார்.
17 அவர்களைக் காப்பாற்றும் அந்த சம்பவம் அர்மகெதோன் போரில் முடிவடையும். இந்தப் போர் யெகோவாவுடைய பெயருக்குப் புகழ் சேர்க்கும். (வெளி. 16:16) வெள்ளாடுகளாக, அதாவது உண்மை இல்லாதவர்களாக, நியாயந்தீர்க்கப்பட்ட எல்லாரும் அழிக்கப்படுவார்கள். அதற்குப் பிறகு, பூமியில் எந்தக் கெட்ட விஷயங்களும் நடக்காது. “திரள் கூட்டமான மக்கள்” அர்மகெதோன் போரிலிருந்து உயிர் தப்புவார்கள். கடைசியாக, வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சொல்லப்பட்டு இருப்பதுபோல் ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் நடக்கும்! (வெளி. 21:1-4)d (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) உயிர் தப்புகிறவர்கள் எல்லாரும் யெகோவாவுடைய அன்பையும் ஆசீர்வாதத்தையும் அனுபவிப்பார்கள். அந்தத் திருமண விருந்து எவ்வளவு அருமையாக இருக்கும்! அந்த நாளுக்காக நாம் ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கிறோம் இல்லையா?—2 பேதுரு 3:13-ஐ வாசியுங்கள்.
-
-
உங்களுடைய மீட்பு நெருங்கிவிட்டது!காவற்கோபுரம்—2015 | ஜூலை 15
-
-
d அடுத்தடுத்து நடக்க இருக்கும் சம்பவங்களைப் பற்றிய சில விஷயங்களை சங்கீதம் 45 சொல்கிறது. முதலில் ராஜா போர் செய்வார், பிறகு திருமணம் நடக்கும்.
-