-
வரவிருக்கும் ஆயிரம் வருடங்களுக்காக இப்பொழுது ஒழுங்கமைத்தல்காவற்கோபுரம்—1990 | மே 1
-
-
5. கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் போது சாத்தான் மற்றும் பேய்களின் நிலைமை என்னவாக இருக்கும்?
5 வெளிப்படுத்துதல் 20:4-லுள்ள “ஆயிரம் வருஷம்” அடையாள அர்த்தமுள்ளதாயிராமல் ஆயிரம் சூரிய ஆண்டுகளைக் குறிப்பிடுகிறது. அந்த ஆயிரம் வருடங்களின் போது, பிசாசாகிய சாத்தானும் அவனுடைய பேய் கூட்டமும், அபிஸில் இருப்பார்கள். ஏனென்றால் கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியைப் பற்றி சொல்வதற்கு முன்பாக அப்போஸ்தலனாகிய யோவான் சொன்னதாவது: “ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைந்து, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.”—வெளிப்படுத்துதல் 20:1–3.
-
-
வரவிருக்கும் ஆயிரம் வருடங்களுக்காக இப்பொழுது ஒழுங்கமைத்தல்காவற்கோபுரம்—1990 | மே 1
-
-
7. இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் காலத்தையும் இயல்பையும் குறித்து பைபிள் தெரிவிப்பது என்ன?
7 ஆனால் வேதவசனங்களின் பிரகாரம், இயேசு கிறிஸ்துவின் மெய்யான ஆயிர வருட ஆட்சி இன்னும் எதிர்காலத்துக்குரியதாக இருக்கிறது. பைபிள் தீர்க்கதரிசனத்தின் நவீன நாளைய நிறைவேற்றம், அது மிக அருகாமையில், சமீபத்திலிருப்பதாக காண்பிக்கிறது. மெய்யான ஆயிர வருட ஆட்சியின் போது, சாத்தானும் அவனுடைய பேய்களும் உண்மையில் அபிஸிற்குள் தள்ளப்படுவர், இயேசு கிறிஸ்துவும் அவருடைய உடன் சுதந்திரவாளிகளான 1,44,000 பேரும் பிசாசின் அமைப்பிலிருந்து எந்தவித குறுக்கீடுமின்றி எல்லா மனிதவர்க்கத்தின் மீதும் ஆட்சி செலுத்துவர். யெகோவா அவருடைய “சிநேகிதனாகிய” ஆபிரகாமோடு செய்து கொண்ட உடன்படிக்கையின் நிறைவேற்றமாக, மீட்டுக்கொள்ளப்பட்ட எல்லா மனிதவர்க்கத்தின் நித்திய ஆசீர்வாதம், “திரள் கூட்டத்தாரோடு” ஆரம்பமாகும். இவர்கள் இந்தப் பொல்லாத ஒழுங்கு முறையை முடிவுக்குக் கொண்டுவரும் ஈடிணையற்ற “உபத்திரவத்தை” தப்பிப்பிழைத்தவர்களாக இருப்பர். இது “ஆட்டுக்குட்டியானவருடைய (இயேசு கிறிஸ்து) இரத்தத்திலே” மீட்டுக் கொள்ளப்பட்ட இலட்சக்கணக்கான மரித்த ஆட்களுக்கு விரிவாக்கப்படும். (யாக்கோபு 2:21–23; வெளிப்படுத்துதல் 7:1–17; ஆதியாகமம் 12:3; 22:15–18; மத்தேயு 24:21, 22) இந்த நோக்கத்துக்காக, இவர்கள் ஞாபகார்த்தக் கல்லறைகளில் அவர்களுடைய மரண நித்திரையிலிருந்து பூமியின் மீது ஜீவனுக்கு உயிர்த்தெழுப்பப்படுவர்.—யோவான் 5:28, 29.
-