வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
டிசம்பர் 2-8
பைபிளில் இருக்கும் புதையல்கள் | வெளிப்படுத்துதல் 7-9
“எண்ண முடியாத திரள் கூட்டமான மக்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்”
it-1-E 997 ¶1
திரள் கூட்டம்
“திரள் கூட்டமான மக்கள்” மீட்பைப் பெற்று பூமியில் வாழப்போகிறவர்கள் என்றால், அவர்கள் ‘கடவுளுடைய சிம்மாசனத்துக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முன்னால் நிற்கிறார்கள்’ என்று எப்படிச் சொல்ல முடியும்? (வெளி 7:9) பைபிளில், ‘நிற்பது’ என்ற வார்த்தை பயன்படுத்தப்படும்போது சிலசமயங்களில், ஒரு நபர் அல்லது ஒரு தொகுதி யாருடைய முன்னிலையில் நிற்கிறார்களோ அவருடைய அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதையோ பிரியத்தைச் சம்பாதித்திருப்பதையோ குறிக்கிறது. (சங் 1:5; 5:5; நீதி 22:29; லூ 1:19) சொல்லப்போனால், வெளிப்படுத்துதல் ஆறாவது அதிகாரத்தில், “பூமியின் ராஜாக்களும், உயர் அதிகாரிகளும், படைத் தளபதிகளும், பணக்காரர்களும், பலசாலிகளும், அடிமைகள் எல்லாரும், சுதந்திர மக்கள் எல்லாரும்” ‘சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பவரின் முகத்திலிருந்தும் ஆட்டுக்குட்டியானவரின் கோபத்திலிருந்தும்’ ஒளிந்துகொள்ள முயற்சி செய்வதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. “ஏனென்றால், அவர்களுடைய கடும் கோபத்தின் மகா நாள் வந்துவிட்டது. அதை எதிர்த்துநிற்க யாரால் முடியும்?” என்று அவர்கள் சொல்கிறார்கள். (வெளி 6:15-17; லூ 21:36-ஐ ஒப்பிடுங்கள்.) இவற்றை வைத்துப் பார்க்கும்போது, யாரெல்லாம் கடும் கோபத்தின் நாளிலிருந்து காப்பாற்றப்படுகிறார்களோ யாரெல்லாம் கடவுளுடைய அங்கீகாரத்தையும் ஆட்டுக்குட்டியானவரின் அங்கீகாரத்தையும் பெற்று அவர்கள்முன் ‘நிற்கிறார்களோ’ அவர்கள்தான் “திரள் கூட்டமான மக்கள்” என்று தெரிகிறது.
it-2-E 1127 ¶4
உபத்திரவம்
எருசலேம் அழிந்து ஏறக்குறைய 30 வருஷங்களுக்குப் பிறகு, எல்லா தேசங்களையும் கோத்திரங்களையும் இனங்களையும் சேர்ந்த திரள் கூட்டமான மக்களைப் பற்றி அப்போஸ்தலன் யோவானுக்குச் சொல்லப்பட்டது. “இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பித்தவர்கள்” என்று அவர் எழுதினார். (வெளி 7:13, 14) அப்படியென்றால், திரள் கூட்டமான மக்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து காப்பாற்றப்படுவார்கள் என்று தெரிகிறது. இதேபோன்ற ஒரு விவரிப்பு, அப்போஸ்தலர் 7:9, 10-ல் இருக்கிறது. ‘கடவுள் அவரோடு [யோசேப்போடு] இருந்தார்; அவருக்கு வந்த எல்லா கஷ்டங்களிலிருந்தும் அவரை விடுவித்தார்’ என்று அந்த வசனங்கள் சொல்கின்றன. யோசேப்பு, அவருக்கு வந்த எல்லா கஷ்டங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டார் என்று சொல்லும்போது, அவற்றைச் சகித்துக்கொள்ள அவருக்கு சக்தி கிடைத்தது என்பதை மட்டுமல்ல, அந்த வேதனைகளிலிருந்து அவர் காப்பாற்றப்பட்டார் என்பதையும் குறிக்கிறது.
it-1-E 996-997
திரள் கூட்டமான மக்கள்
அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது. திரள் கூட்டமான மக்கள் யாரென்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்? அவர்களைப் பற்றிய விவரிப்பு வெளிப்படுத்துதல் 7-ஆம் அதிகாரத்திலும், அதைப் போன்ற மற்ற வசனங்களிலும் இருக்கிறது. கடவுள் ‘இவர்கள்மேல் தன்னுடைய கூடாரத்தை விரிப்பதை’ பற்றியும், ‘வாழ்வு தரும் நீரூற்றுகளிடம் அவர்களை வழிநடத்துவதை’ பற்றியும், ‘கடவுள் அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீரையெல்லாம் துடைத்துவிடுவதை’ பற்றியும் வெளிப்படுத்துதல் 7:15-17 (அடிக்குறிப்பு) சொல்கிறது. இதேபோன்ற விவரிப்பை வெளிப்படுத்துதல் 21:2-4-ல் நாம் பார்க்கிறோம். “கடவுளுடைய கூடாரம் மனிதர்களோடு இருக்கும்,” “அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்,” “இனிமேல் மரணம் இருக்காது” என்றெல்லாம் அது சொல்கிறது. இந்தத் தரிசனம் ‘புதிய எருசலேம் இறங்கி வரும்’ இடமான பூமியில் இருப்பவர்களைப் பற்றித்தான் பேசுகிறது, பரலோகத்தில் இருப்பவர்களைப் பற்றி அல்ல.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
தேவனுடைய இஸ்ரவேலரை முத்திரை போடுதல்
4 சந்தேகமில்லாமல், இந்த நான்கு தூதர்கள், குறிக்கப்பட்டிருக்கும் காலம் வரையாக நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படுவதை நிறுத்திவைக்க யெகோவா பயன்படுத்தும் நான்கு தேவதூதர் தொகுதிகளை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு திசைகளிலிருந்து ஒரே சமயத்தில் அந்தத் தெய்வீக கோபாக்கினையின் காற்றுகளை விரைவாகச் சுழலும்படி தேவதூதர்கள் அவிழ்த்துவிடுகையில், நாசம் மிகப் பெரியதாயிருக்கும். அது, பூர்வ ஏலாமியரை சிதறப்பண்ணி, நொறுக்கி, வேருடன் அழிப்பதற்கு யெகோவா பயன்படுத்திய நான்கு காற்றுகளைப் போன்றிருக்கும், ஆனால் மிகப்பெரிய அளவில் இருக்கும். (எரேமியா 49:36-38) இது, அம்மோன் தேசத்தாரை நிர்மூலமாக்க யெகோவா கொண்டு வந்த “பெருங்காற்றை” விட மிக அதிக நாசத்தை விளைவிக்கும் ஒரு மிகப் பெரிய புயல் காற்றாக இருக்கும். (ஆமோஸ் 1:13-15) யெகோவாவுடைய கடுங்கோபத்தின் நாளிலே, அவருடைய அரசாட்சியை வரும் எல்லா நித்திய காலத்திற்கும் நியாயநிரூபணம் செய்கையில், பூமியின் மீதுள்ள சாத்தானுடைய அமைப்பின் எந்தப் பாகமும் நிலைநிற்க முடியாது.—சங்கீதம் 83:15, 18; ஏசாயா 29:5, 6.
it-1-E 12
அபெத்தோன்
அதலபாதாளத்தின் தேவதூதரான அபெத்தோன்—யார் அவர்?
வெளிப்படுத்துதல் 9:11-ல், “அபெத்தோன்” என்ற வார்த்தை ‘அதலபாதாளத்தின் தேவதூதருடைய’ பெயராகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பெயருக்கு இணையான கிரேக்க பெயர், அப்பொல்லியோன். இதற்கு, “அழிக்கிறவர்” என்று அர்த்தம். 19-வது நூற்றாண்டில், இந்த வசனத்தில் இருக்கிற தீர்க்கதரிசனம் பேரரசர் வெஸ்பேஸியன், முகமது, நெப்போலியன் போன்ற ஆட்களைக் குறிப்பதாகச் சிலர் சொன்னார்கள்; அதோடு, இந்தத் தேவதூதர் பொதுவாக சாத்தானோடு சம்பந்தப்படுத்தப்பட்டார். ஆனால், இதற்கு நேர்மாறான ஒரு விஷயத்தை வெளிப்படுத்துதல் 20:1-3-லிருந்து தெரிந்துகொள்கிறோம். “அதலபாதாளத்தின் சாவியை” வைத்திருக்கும் இந்தத் தேவதூதர், கடவுளுடைய சார்பில் பரலோகத்திலிருந்து வருவதாகவும், சாத்தானைக் கட்டிப்போட்டு அதலபாதாளத்துக்குள் தள்ளியடைப்பதாகவும் அந்த வசனங்கள் காட்டுகின்றன. வெளிப்படுத்துதல் 9:11-ஐப் பற்றி தி இன்ட்டர்பிரெட்டர்ஸ் பைபிள் இப்படிச் சொல்கிறது: “அபெத்தோன் என்பவர் சாத்தானுடைய தூதர் அல்ல; அவர் கடவுளுடைய தூதர். கடவுள் சொல்லியிருப்பதால்தான் அழிக்கும் வேலையை அவர் செய்கிறார்.”
இப்போது நாம் கவனித்த எபிரெய வசனங்களிலிருந்து, ‘அவெத்தோன்’ என்ற வார்த்தை ஷியோலோடும் மரணத்தோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. வெளிப்படுத்துதல் 1:18-ல் இயேசு கிறிஸ்து, “என்றென்றும் உயிரோடு இருக்கிறேன், மரணத்தின் சாவியும் கல்லறையின் சாவியும் என்னிடம் இருக்கின்றன” என்று சொல்கிறார். அதலபாதாளத்தின்மீது இயேசுவுக்கு அதிகாரம் இருப்பதை லூக்கா 8:31-லிருந்து தெரிந்துகொள்கிறோம். அவருக்கு அழிக்கிற சக்தி இருக்கிறதென்று, அதுவும் சாத்தானை அழிக்கிற சக்தி இருக்கிறதென்று, எபிரெயர் 2:14-லிருந்து தெரிகிறது. “மரணத்துக்கு வழிவகுக்கிற பிசாசைத் தன்னுடைய மரணத்தால் அழிப்பதற்கு” இயேசு சதையும் இரத்தமுமாக ஆனார் என்று அந்த வசனம் சொல்கிறது. வெளிப்படுத்துதல் 19:11-16-ல், அவர் ‘அழிக்கிறவராக’ கடவுளால் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
டிசம்பர் 9-15
பைபிளில் இருக்கும் புதையல்கள் | வெளிப்படுத்துதல் 10-12
“‘இரண்டு சாட்சிகள்’ கொல்லப்பட்டு திரும்ப உயிருக்குக் கொண்டுவரப்படுகிறார்கள்”
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
வெளிப்படுத்துதல் 11-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள இரண்டு சாட்சிகள் யார்?
வெளிப்படுத்துதல் 11:3-ல் இரண்டு சாட்சிகளைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் 1,260 நாட்களுக்கு தீர்க்கதரிசனம் சொல்வார்கள். பின்பு, ஒரு “மூர்க்க மிருகம் அவர்களோடு போரிட்டு, அவர்களை ஜெயித்து, கொன்றுபோடும்.” ஆனால், “மூன்றரை நாட்களுக்குப் பின்பு,” அந்தச் சாட்சிகள் மீண்டும் உயிர் பெறுவார்கள். அதைப்பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுவார்கள். இந்த சம்பவங்கள் எதைக் குறிக்கிறது?—வெளி. 11:7, 11.
அந்த இரண்டு சாட்சிகள் யார்? இதைப் புரிந்துகொள்ள அடுத்து வரும் வசனங்களை கவனியுங்கள். முதலாவதாக, “இரண்டு ஒலிவ மரங்களும் இரண்டு குத்துவிளக்குகளும் அந்த இரண்டு சாட்சிகளை அடையாளப்படுத்துகின்றன” என்று வெளிப்படுத்துதல் 11:4 சொல்கிறது. இரண்டு ஒலிவ மரங்களையும் குத்துவிளக்கையும் பற்றி சகரியா புத்தகத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த இரண்டு ஒலிவ மரங்கள், “அபிஷேகம் பெற்ற” ஆளுநரான செருபாபேலையும் தலைமை குருவான யோசுவாவையும் குறிக்கிறது. அவர்கள், “சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில்” நிற்பதாக சொல்லப்பட்டுள்ளது. (சக. 4:1-3, 14) இரண்டாவதாக, வெளிப்படுத்துதல் 11:5, 6-ல், அந்த இரண்டு சாட்சிகள் மோசேயையும் எலியாவையும் போல் அற்புதங்களைச் செய்வார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.—வெளிப்படுத்துதல் 11:5, 6-ஐ எண்ணாகமம் 16:1-7, 28-35 மற்றும் 1 இராஜாக்கள் 17:1; 18:41-45-யோடு ஒப்பிடுங்கள்.
வெளிப்படுத்துதலில் சொல்லப்பட்ட விஷயத்துக்கும் சகரியாவில் சொல்லப்பட்ட விஷயத்துக்கும் என்ன ஒற்றுமை இருக்கிறது? கஷ்டமான காலங்களில் கடவுளுடைய மக்களை வழிநடத்தினவர்களை பற்றி இந்தப் பதிவுகள் சொல்கின்றன. அவர்களைப் போலவே 1914-ல் இயேசு ராஜாவானபோது, பரலோக நம்பிக்கையுள்ள சில கிறிஸ்தவர்கள் பிரசங்க வேலையை வழிநடத்தினார்கள். வெளிப்படுத்துதல் 11-ஆம் அதிகாரத்தில் சொல்லியிருக்கிறபடி, மூன்றரை வருஷங்கள் அவர்கள் “துக்க உடை உடுத்திக்கொண்டு” அதாவது, கஷ்டமான காலங்களில் பிரசங்கித்தார்கள்.
அதன்பிறகு பரலோக நம்பிக்கையுள்ள அந்த கிறிஸ்தவர்கள் அடையாள அர்த்தத்தில் மூன்றரை நாட்களுக்கு இறந்த நிலையில் இருந்தார்கள். அதாவது, கொஞ்ச காலத்துக்கு சிறையில் போடப்பட்டார்கள். அப்போது பிரசங்க வேலை முழுமையாக நின்றுவிட்டது என்று நினைத்து அவர்களுடைய எதிரிகள் சந்தோஷப்பட்டார்கள்.—வெளி. 11:8-10.
ஆனால், அந்த இரண்டு சாட்சிகள் மூன்றரை நாட்களுக்கு பிறகு மறுபடியும் உயிரோடு வருவார்கள் என்று வெளிப்படுத்துதல் 11:11 சொல்கிறது. அதேபோல் பரலோக நம்பிக்கையுள்ள அந்த கிறிஸ்தவர்கள் சிறையிலிருந்து விடுதலையானார்கள். அவர்களில் யாரெல்லாம் உண்மையாக இருந்தார்களோ அவர்களுக்கு இயேசு கிறிஸ்து மூலம் யெகோவா ஒரு முக்கியமான பொறுப்பை கொடுத்தார். 1919-ல் இன்னும் சில சகோதரர்களோடு இவர்களையும் ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையாக’ நியமித்தார். இவர்கள் கடவுளுடைய மக்களுக்கு ‘ஏற்ற வேளையில் உணவளிப்பதற்காக’ நியமிக்கப்பட்டார்கள்.—மத். 24:45-47; வெளி. 11:11, 12.
நாம் இதுவரை பார்த்த விஷயங்கள் எல்லாம், வெளிப்படுத்துதல் 11:1, 2-ல் சொல்லப்பட்டிருக்கிற ‘கடவுளுடைய ஆலயத்தை அளப்பதோடு,’ அதாவது சோதிப்பதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ‘கடவுளுடைய ஆலயத்தை’ சோதிப்பதையும் சுத்தப்படுத்துவதையும் பற்றி மல்கியா 3-ஆம் அதிகாரத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. (மல். 3:1-4) மல்கியா புத்தகத்தில் சொல்லியிருக்கிறபடி, ஆலயத்தைச் சோதிக்கவும் சுத்தப்படுத்தவும் எவ்வளவு காலம் எடுத்தது? இது 1914-ல் ஆரம்பித்து 1919 வரை நீடித்தது. வெளிப்படுத்துதல் 11-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் 1,260 நாட்களும் (42 மாதங்கள்) அடையாள அர்த்தமுள்ள மூன்றரை நாட்களும் சேர்ந்ததுதான் இந்தக் காலப்பகுதி.
ஒரு முக்கியமான வேலைக்காக யெகோவா அவருக்கென்று மக்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை ‘தூய்மைப்படுத்தியதற்காக’ நாம் எவ்வளவு சந்தோஷமாக இருக்க வேண்டும்! (தீத். 2:14) கஷ்டமான காலங்களில் கடவுளுடைய மக்களை வழிநடத்திய சகோதரர்களின் முன்மாதிரியை நாம் பின்பற்றுவோம். இவர்கள்தான் வெளிப்படுத்துதல் 11-ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்டிருக்கும் அடையாள அர்த்தமுள்ள இரண்டு சாட்சிகள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E 880-881
சுருள்
அடையாள அர்த்தம். பைபிளில் “சுருள்” என்ற வார்த்தை நிறைய வசனங்களில் அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எசேக்கியேலும் சரி, சகரியாவும் சரி, இரண்டு பக்கங்களிலும் எழுதப்பட்டிருந்த ஒரு சுருளைப் பார்த்தார்கள். பொதுவாக, சுருளின் ஒரு பக்கத்தில்தான் மக்கள் எழுதினார்கள். ஆனால், அவர்கள் பார்த்த சுருள் இரண்டு பக்கங்களிலும் எழுதப்பட்டிருந்தது. அதிலிருந்த தண்டனைத்தீர்ப்புச் செய்திகள் எந்தளவு முக்கியமான செய்திகளாக இருந்தன என்பதை அது காட்டியிருக்கலாம். (எசே 2:9–3:3; சக 5:1-4) வெளிப்படுத்துதலில் சொல்லப்பட்டுள்ள ஒரு தரிசனத்தில், சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தவரின் வலது கையில், ஏழு முத்திரைகளால் முத்திரை போடப்பட்டிருந்த ஒரு சுருள் இருந்தது. கடவுளுடைய ஆட்டுக்குட்டியானவர் அதை உடைக்கும்வரை அதிலுள்ள விஷயங்களை யாரும் தெரிந்துகொள்ளாதபடி அது முத்திரை போடப்பட்டிருந்தது. (வெளி 5:1, 12; 6:1, 12-14) பிற்பாடு, அந்தத் தரிசனத்தில் யோவானிடமே ஒரு சுருள் கொடுக்கப்பட்டு, அதைச் சாப்பிடும்படி சொல்லப்பட்டது. அது அவருடைய வாயில் தேன்போல் இனித்தது, ஆனால் வயிற்றில் கசப்பாக இருந்தது. அந்தச் சுருள் முத்திரை போடப்படாமல் திறந்திருந்ததால், அதைப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அந்தச் செய்தியைப் பெற்றுக்கொண்டது யோவானுக்கு ‘இனிப்பான’ அனுபவமாக இருந்திருக்கும், ஆனால் அதிலிருந்த கடுமையான செய்திகளை மக்களுக்குச் சொல்வது அவருக்குக் கசப்பாக இருந்திருக்கும். (வெளி 10:1-11) ‘புலம்பல் பாடல்களும், துக்கமும் வேதனையுமான செய்திகளும் எழுதப்பட்டிருந்த’ ஒரு சுருள் எசேக்கியேலுக்குக் கொடுக்கப்பட்டபோது அவருக்கும் அதுபோல்தான் இருந்தது.—எசே 2:10.
it-2-E 187 ¶7-9
பிரசவ வேதனை
அப்போஸ்தலன் யோவான் பார்த்த ஒரு தரிசனத்தில், பரலோகத்திலே ஒரு பெண் “பிரசவ வேதனைப்பட்டு, வலியில் கதறிக்கொண்டிருந்தாள்.” “எல்லா தேசங்களையும் இரும்புக் கோலால் நொறுக்கப்போகிற ஓர் ஆண் குழந்தையை, ஓர் ஆண்மகனை, அவள் பெற்றெடுத்தாள்.” ராட்சதப் பாம்பு அந்தக் குழந்தையை விழுங்குவதற்கு முயற்சி செய்தது. ஆனால், “கடவுளிடமும் அவருடைய சிம்மாசனத்திடமும் அவளுடைய குழந்தை எடுத்துக்கொள்ளப்பட்டது.” (வெளி 12:1, 2, 4-6) பழங்காலத்தில், குழந்தை பிறந்ததும் அதன் அப்பா ஏற்றுக்கொள்வதற்காக அதை அவரிடம் கொடுப்பது வழக்கமாக இருந்தது. அதேபோல், இந்தக் குழந்தை கடவுளிடம் எடுத்துக்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படுவது, அதைக் கடவுள் தன்னுடைய சொந்தப் பிள்ளையாக ஏற்றுக்கொண்டதைக் குறிக்கிறது. அப்படியென்றால், அந்த “பெண்” கடவுளுடைய “மனைவியாக,” ‘மேலான எருசலேமாக,’ கிறிஸ்துவுக்கும் அவருடைய ஆன்மீகச் சகோதரர்களுக்கும் ‘தாயாக’ இருக்கிறாள் என்று தெரிகிறது.—கலா 4:26; எபி 2:11, 12, 17.
அந்த “பெண்” பரலோகத்தில் இருக்கும் கடவுளுடைய மனைவியைக் குறிப்பதால், பரிபூரணமாக இருப்பாள். பிரசவத்தின்போது அவளுக்கு நிஜமான வேதனையோ வலியோ வராது. அப்படியென்றால், இங்கே சொல்லப்படும் பிரசவ வேதனை எதற்கு அடையாளமாக இருக்கிறது? சீக்கிரத்தில் பிரசவம் ஏற்படும் என்பதை அவள் உணருவதற்கும் எதிர்பார்ப்பதற்கும் அடையாளமாக இருக்கிறது.—வெளி 12:2.
அந்த ‘ஆண் குழந்தை’ அல்லது ‘ஆண்மகன்’ யார்? அவர் ‘எல்லா தேசங்களையும் இரும்புக் கோலால் நொறுக்கப்போகிறார்’ என்று சொல்லப்பட்டது. சங்கீதம் 2:6-9-ல் மேசியானிய ராஜாவைப் பற்றி இப்படித்தான் முன்னறிவிக்கப்பட்டது. ஆனால், கிறிஸ்து இந்தப் பூமியில் பிறந்து, இறந்து, உயிரோடு எழுப்பப்பட்டு பல காலத்துக்குப் பிறகுதான் யோவான் இந்தத் தரிசனத்தைப் பார்த்தார். அப்படியென்றால், கடவுளுடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவினால் ஆளப்படும் மேசியானிய அரசாங்கத்தின் பிறப்பைப் பற்றித்தான் இந்தத் தரிசனம் காட்டியதாகத் தெரிகிறது. கிறிஸ்து உயிரோடு எழுப்பப்பட்ட பிறகு, “கடவுளுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்தார். அந்தச் சமயத்திலிருந்து, தன்னுடைய எதிரிகள் தனக்குக் கால்மணையாக்கிப் போடப்படும்வரை காத்துக்கொண்டிருக்கிறார்.”—எபி 10:12, 13; சங் 110:1; வெளி 12:10.
டிசம்பர் 16-22
பைபிளில் இருக்கும் புதையல்கள் | வெளிப்படுத்துதல் 13-16
“பயங்கரமான மிருகங்களைப் பார்த்து பயந்துபோகாதீர்கள்”
யெகோவா ‘மறைபொருளை வெளிப்படுத்துகிறவர்’
6 கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதிக்கட்டத்தில், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு சிலிர்க்க வைக்கும் பல தரிசனங்களை அப்போஸ்தலன் யோவானுக்குத் தந்தார். (வெளி. 1:1) அந்தத் தரிசனங்கள் ஒன்றில், கடற்கரை மணலில் ஒரு ராட்சதப் பாம்பு நிற்பதை யோவான் பார்த்தார். அந்தப் பாம்பு பிசாசைக் குறிக்கிறது. (வெளிப்படுத்துதல் 13:1, 2-ஐ வாசியுங்கள்.) அதோடு, விசித்திரமான ஒரு மூர்க்க மிருகம் கடலிலிருந்து ஏறி வந்து, பிசாசிடமிருந்து மிகுந்த அதிகாரத்தைப் பெறுவதை அவர் பார்த்தார். பின்னர், கருஞ்சிவப்பு நிறமுள்ள இன்னொரு மிருகத்தை யோவான் பார்த்தார், அதற்கும் ஏழு தலைகள் இருந்தன. வெளிப்படுத்துதல் 13:1-ல் குறிப்பிடப்பட்டுள்ள மிருகத்திற்கு ஒப்பான ஓர் உருவத்தை அது பெற்றிருந்தது. அதன் ஏழு தலைகள் “ஏழு ராஜாக்களை,” அதாவது ராஜ்யங்களை, குறிப்பதாக ஒரு தேவதூதன் பின்னர் யோவானுக்குத் தெரிவித்தார். (வெளி. 13:14, 15; 17:3, 9, 10) வெளிப்படுத்துதல் புத்தகத்தை யோவான் எழுதிய சமயத்தில், ஐந்து ராஜ்யங்கள் ஏற்கெனவே உலக அரங்கில் ஆட்சி செய்துவிட்டுப் போயிருந்தன, ஒன்று அப்போது ஆட்சி செய்துகொண்டிருந்தது, மற்றொன்று “இன்னும் வரவில்லை.” அந்த ராஜ்யங்கள், அதாவது உலக வல்லரசுகள் யாவை? இப்போது நாம், வெளிப்படுத்துதல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூர்க்க மிருகத்தின் ஒவ்வொரு தலையையும் பற்றிப் பார்ப்போம். அதோடு, இந்த ராஜ்யங்கள் பலவற்றைக் குறித்து... அதிலும், ஒருசில ராஜ்யங்கள் தோன்றுவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அவற்றைக் குறித்து... தானியேல் சொல்லியிருந்த நுணுக்கமான விவரங்களைப் பற்றியும் பின்வரும் பத்திகளில் பார்ப்போம்.
கடும் மூர்க்கத்தனமான இரண்டு மிருகங்களுடன் போராடுதல்
26 இது என்னவாக இருக்கலாம்? இது ஆங்கில-அமெரிக்க உலக வல்லரசு—முதல் மூர்க்க மிருகத்தின் ஏழாவது தலையைப்போன்றதே, ஆனால் ஒரு விசேஷித்த பாகம் வகிக்கும் நிலையிலுள்ளது! தரிசனத்தில் இதை ஒரு தனி மூர்க்க மிருகமாகப் பிரித்துக் காட்டுவது, உலக மேடையில் இது தனித்தியங்கி எவ்வாறு செயல்படுகிறதென்பதை மேலும் தெளிவாகக் காண நமக்கு உதவிசெய்கிறது. இரண்டு கொம்புகளையுடைய இந்த அடையாளக் குறிப்பான மூர்க்க மிருகம், ஒரேசமயத்தில் வாழ்பவையும், தனித்தியங்குபவையும், ஆனால் ஒத்துழைப்பவையுமான இரண்டு அரசியல் வல்லரசுகளால் ஆகியது. “ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக”வுள்ள அதன் இரண்டு கொம்புகள், உலகம் முழுவதும் அதனிடம் திரும்பவேண்டிய சாந்தமும் தீங்குசெய்யாததும், அறிவொளியூட்டப்பட்ட வகையான அரசாங்கத்தைக் கொண்டிருப்பதுமாகத் தன்னைத் தோன்றச் செய்கிறதெனத் தெரிகிறது. ஆனால், அதன் ஆட்சிமுறை ஏற்கப்படாத இடங்களில் அது வற்புறுத்தலையும் பயமுறுத்தல்களையும் நேரடியான வன்முறையையுங்கூட பயன்படுத்துவதில் “வலுசர்ப்பத்தைப்போலப்” பேசுகிறது. கடவுளுடைய ஆட்டுக்குட்டியானவரின் அதிகாரத்திலுள்ள கடவுளுடைய ராஜ்யத்துக்குக் கீழ்ப்படிவதை அல்ல, ஆனால் அதற்கு மாறாக, அந்தப் பெரிய வலுசர்ப்பமாகிய சாத்தானின் அக்கறைகளுக்கே கீழ்ப்படியும்படி ஊக்குவிக்கிறது. முதல் மூர்க்க மிருகத்தை வணங்குவதோடு மேலும் கூட்டும் தேசிய பிரிவினைகளையும் பகைமைகளையும் அது முன்னேற்றுவித்திருக்கிறது.
கடும் மூர்க்கத்தனமான இரண்டு மிருகங்களுடன் போராடுதல்
30 சரித்திரத்தின் இந்த நிறைவேற்றம் இந்தச் சொரூபத்தை, பிரிட்டனாலும் ஐக்கிய மாகாணங்களாலும் முன்மொழியப்பட்டு முன்னேற்றுவிக்கப்பட்டு, ஆதரிக்கப்பட்ட அமைப்பெனவும், தொடக்கத்தில் சர்வதேச சங்கம் என அறியப்பட்டதெனவும் அடையாளங்காட்டுகிறது. பின்னால், வெளிப்படுத்துதல் 17-ம் அதிகாரத்தில், இது, உயிருள்ள, சுவாசிக்கும் சிவப்பு நிறமுள்ள தனித்தியங்கும் மூர்க்க மிருகமாக வேறுபட்ட சின்னத்தின்கீழ் தோன்றும். தானே மனிதவர்க்கத்துக்குச் சமாதானமும் பாதுகாப்பும் கொண்டுவரக்கூடிய ஒரேவொரு ஏதுவென அகந்தையான உரிமைபாராட்டுதல்களைச் செய்வதில் இந்தச் சர்வதேசக் குழு ‘பேசுகிறது.’ ஆனால் உண்மையில் அது, அதன் உறுப்பினராயுள்ள தேசங்கள் வீராவேச வசைப் பேச்சுகளையும் நிந்தைமொழிகளையும் பரிமாற்றம் செய்துகொள்வதற்கான பொதுவிடமாகிவிட்டிருக்கிறது. அதன் அதிகாரத்துக்குப் பணியாத எந்தத் தேசத்தையும் அல்லது ஜனத்தையும், சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைப்பதாக அல்லது நடைப்பிணமாக்குவதாக அது பயமுறுத்தியிருக்கிறது. அதன் கருத்துப்பாங்குகளுக்கு ஒத்துப்போகாதத் தேசங்களை சர்வதேச சங்கம் உண்மையிலேயே வெளியேற்றிவிட்டது. மிகுந்த உபத்திரவத்தின் தொடக்கத்தில், மூர்க்க மிருகத்தினுடைய இந்தச் சொரூபத்தின் இராணுவக் ‘கொம்புகள்’ பாழாக்கும் ஒரு பாகத்தை நிறைவேற்றும்.—வெளிப்படுத்துதல் 7:14; 17:8, 16.
31 இரண்டாம் உலக யுத்தம் முதற்கொண்டு, மூர்க்க மிருகத்தின் இந்தச் சொரூபம்—இப்பொழுது ஐக்கிய நாட்டுச் சங்கமாக வெளிப்பட்டிருப்பது—சொல்லர்த்தமான முறையில் ஏற்கெனவே கொன்றிருக்கிறது. உதாரணமாக, 1950-ல் ஐநா படை ஒன்று, வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்குமிடையில் உண்டான போரில் பங்குகொண்டது. இந்த ஐநா படை, தென் கொரியர்களோடுசேர்ந்து, வட கொரியர்களும் சீன மக்களுமான 14,20,000 ஆட்களைக் கொன்றதாக மதிப்பிடப்பட்டது. அவ்வாறே, 1960-லிருந்து 1964 வரை, ஐக்கிய நாட்டு சேனைகள் காங்கோவில் (கின்ஷாசாவில்) செயல்பட்டன. மேலும், போப் பால் VI மற்றும் போப் ஜான் பால் II உட்பட, உலகத் தலைவர்கள், இந்தச் சொரூபமே சமாதானத்துக்கான மனிதனின் கடைசியும் மிகச் சிறந்ததுமான நம்பிக்கையெனத் தொடர்ந்து உறுதிக்கூறிக்கொண்டிருக்கின்றனர். மனிதவர்க்கம் அதைச் சேவிக்கத் தவறினால், மனித குலம் தன்னைத்தானே அழித்துக்கொள்ளுமென அவர்கள் வற்புறுத்திக் கூறுகின்றனர். இவ்வாறு அவர்கள் அந்தச் சொரூபத்தோடு உடன்பட்டுச் சென்று அதை வணங்க மறுக்கும் மனிதர் யாவரும் அடையாளக் குறிப்பாய்க் கொல்லப்படும்படி செய்கின்றனர்.—உபாகமம் 5:8, 9.
w09 2/15 4 ¶2
வெளிப்படுத்துதல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—இரண்டாம் பகுதி
13:16, 17. அன்றாட வேலைகளில் ஈடுபடும்போது, அதாவது ‘கொள்வதிலோ விற்பதிலோ’ ஈடுபடும்போது, நமக்கு என்ன கஷ்டங்கள் வந்தாலும்சரி, இந்த மிருகம் நம்முடைய வாழ்க்கையை ஆட்டிப்படைக்க நாம் அனுமதித்துவிடக் கூடாது. ‘கைகளிலாவது நெற்றிகளிலாவது . . . இந்த மிருகத்தின் முத்திரையைப்’ பெறுவது நம்முடைய செயல்களை அல்லது நம்முடைய சிந்தையை இந்த மிருகம் ஆட்டிப்படைக்க அனுமதிப்பதற்குச் சமம்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w09 2/15 4 ¶5
வெளிப்படுத்துதல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—இரண்டாம் பகுதி
16:13-16. “அசுத்த ஆவிகள் [“அசுத்தமான செய்திகள்,” NW]” என்பது சாத்தானுடைய பிரச்சாரத்தைக் குறிக்கின்றன. கடவுளுடைய கோபாக்கினை என்ற ஏழு கலசங்களிலிருந்து ஊற்றப்படுவதைப் பார்த்து, பூமியின் ராஜாக்கள் மனம் மாறிவிடாமல் இருப்பதற்காகவும் யெகோவாவுக்கு விரோதமாகச் செயல்படுவதற்காகவும் சாத்தான் இந்தப் பிரச்சாரத்தைச் செய்கிறான்.—மத். 24:42, 44.
உங்களுடைய மீட்பு நெருங்கிவிட்டது!
9 மிகுந்த உபத்திரவத்தின்போது, நாம் ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை’ சொல்ல மாட்டோம். ஏனென்றால், நற்செய்தியை சொல்வதற்கான சமயம் அப்போது முடிந்திருக்கும்; உலக ‘முடிவுக்கான’ சமயம் வந்திருக்கும்! (மத். 24:14) அப்போது, கடவுளுடைய மக்கள் நியாயத்தீர்ப்பு பற்றிய கடுமையான செய்தியை தைரியமாக சொல்வார்கள். அது, சீக்கிரத்தில் சாத்தானுடைய உலகம் அடியோடு அழிக்கப்படும் என்ற செய்தியாக இருக்கலாம். அந்த செய்தியை, வானத்திலிருந்து வரும் ஆலங்கட்டிகளுக்கு ஒப்பிட்டு பைபிள் இப்படி சொல்கிறது: “வானத்திலிருந்து மாபெரும் ஆலங்கட்டிகள் மனிதர்கள்மீது விழுந்தன; ஒவ்வொரு ஆலங்கட்டியும் சுமார் ஒரு தாலந்து எடையுள்ளதாக இருந்தது. ஆலங்கட்டியினால் உண்டான இந்த வாதை மிகக் கொடியதாக இருந்ததால், மனிதர்கள் கடவுளை நிந்தித்தார்கள்.”—வெளி. 16:21.
டிசம்பர் 23-29
பைபிளில் இருக்கும் புதையல்கள் | வெளிப்படுத்துதல் 17-19
“கடவுளின் போர் எல்லா போர்களையும் முடிவுக்கு கொண்டுவரும்”
w08-E 4/1 8 ¶3-4
அர்மகெதோன்—எல்லா போர்களுக்கும் முடிவுகட்டப்போகும் கடவுளுடைய போர்
கெட்டவர்களின் கையில் அதிகாரம் இருக்கும்வரை, நல்லவர்களுக்குச் சமாதானமும் பாதுகாப்பும் இருக்காது. (நீதிமொழிகள் 29:2; பிரசங்கி 8:9) பொல்லாதவர்கள் இருக்கும்வரை அக்கிரமும் ஊழலும் நடந்துகொண்டுதான் இருக்கும். அவர்கள் ஒழிக்கப்பட்டால்தான் இந்த உலகத்துக்கு நிரந்தர சமாதானமும் நீதியும் கிடைக்கும். அதனால்தான், “நீதிமானுக்குப் பொல்லாதவன் மீட்புவிலையாவான்” என்று சாலொமோன் எழுதினார்.—நீதிமொழிகள் 21:18.
கடவுளே நம் நீதிபதி. அதனால், கெட்டவர்களுக்கு எதிராக அவர் தரும் தீர்ப்பு நீதியானதாகத்தான் இருக்கும் என்று நாம் நம்பலாம். “இந்த முழு உலகத்துக்கே நீதிபதியாக இருப்பவர் நியாயமாக நடக்காமல் இருப்பாரா?” என்று ஆபிரகாம் கேட்டார். அதற்கு யெகோவா கொடுத்த பதிலிலிருந்து, அவர் எப்போதுமே நியாயமாக நடந்துகொள்வார் என்பதை ஆபிரகாம் புரிந்துகொண்டார். (ஆதியாகமம் 18:25) அதுமட்டுமல்ல, பைபிள் சொல்கிறபடி, கெட்டவர்களை அழிக்க வேண்டுமென்று யெகோவா ஆசைப்படுவதே இல்லை; அவர்கள் திருந்தாத பட்சத்தில் மட்டும்தான் அவர்களை அழிக்கிறார்.—எசேக்கியேல் 18:32; 2 பேதுரு 3:9.
it-1-E 1146 ¶1
குதிரை
அப்போஸ்தலன் யோவான் பார்த்த தரிசனத்தில், மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து ஒரு வெள்ளைக் குதிரையில் சவாரி செய்கிறார்; அவரோடு வரும் படைவீரர்களும் வெள்ளைக் குதிரைகளில் சவாரி செய்கிறார்கள். யெகோவாவின் சார்பாக எல்லா எதிரிகளையும் அழிக்க கிறிஸ்து நீதியாகப் போர் செய்வார் என்பதை அந்தத் தரிசனம் காட்டியது. (வெளி 19:11, 14) அதற்கு முன்பு, நான்கு குதிரைவீரர்கள் வித்தியாசப்பட்ட நிறங்களிலுள்ள குதிரைகளில் வருவதைப் பற்றி ஒரு தரிசனத்தில் காட்டப்பட்டது. ராஜாவாக கிறிஸ்து நடவடிக்கை எடுக்கப்போவதையும், அதற்குப் பிறகு ஆபத்துகள் வரப்போவதையும் அது அடையாளப்படுத்தியது.—வெளி 6:2-8.
போர்வீரரான-அரசர் அர்மகெதோனில் வெற்றிபெறுகிறார்
24 சாத்தானின் அரசியலமைப்பைப் பிரதிநிதித்துவஞ்செய்யும், ஏழுதலைகளையும் பத்துக்கொம்புகளையுமுடையதாய், சமுத்திரத்திலிருந்து வெளிவந்த அந்த மூர்க்க மிருகம் இல்லாமல் ஒழிந்துபோகும்படி தள்ளப்பட்டது, அதோடுகூட பொய்த் தீர்க்கதரிசியாகிய ஏழாவது உலக வல்லரசும் ஒழிந்துபோகிறது. (வெளிப்படுத்துதல் 13:1, 11-13; 16:13) இன்னும் ‘உயிரோடு’ இருக்கையிலேயே, அல்லது பூமியிலுள்ள கடவுளுடைய ஜனங்களுக்கு விரோதமாகத் தங்கள் ஒன்றுபட்ட எதிர்ப்பில் இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கையிலேயே, அவர்கள் “அக்கினிக்கடலிலே” தள்ளப்படுகிறார்கள். இது சொல்லர்த்தமான ஓர் அக்கினிக்கடலா? இல்லை, அந்த மூர்க்க மிருகமும் அந்தப் பொய்த் தீர்க்கதரிசியும் சொல்லர்த்தமான மிருகங்கள் அல்லாததுபோலவே இதுவும் இல்லை. மாறாக, இது முழுமையான, இறுதி அழிவுக்கு, திரும்ப வருதல் இராத ஓர் இடத்துக்கு அடையாளமாக உள்ளது. பின்னால், இங்கேயே, மரணமும் ஹேடீஸும் தள்ளப்படும், பிசாசுதானேயும் தள்ளப்படுவான். (வெளிப்படுத்துதல் 20:10, 14) இது நிச்சயமாகவே பொல்லாதவர்களுக்கான, நித்திய சித்திரவதைக்குரிய ஒரு நரகம் அல்ல, ஏனெனில் அத்தகைய இடத்தைப்பற்றிய எண்ணம்தானே யெகோவாவுக்கு அறவே வெறுக்கத்தக்கதாயுள்ளது.—எரேமியா 19:5; 32:35; 1 யோவான் 4:8, 16.
போர்வீரரான-அரசர் அர்மகெதோனில் வெற்றிபெறுகிறார்
25 அரசாங்கத்தின் நேர்முகமான பாகமாயிராதவர்களாயினும், இந்த நேர்மையற்ற மனிதவர்க்க உலகத்தின் சீர்திருத்தப்பட முடியாத பாகமாயிருந்த மற்ற யாவரும் அவ்வாறே ‘குதிரையின்மேல் ஏறியிருந்தவருடைய நீண்ட பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்.’ அவர்களை மரணத்துக்குப் பாத்திரராக இயேசு தீர்ப்பார். இவர்களுடைய காரியத்தில் அக்கினிக்கடல் குறிப்பிடப்படாததால், இவர்களுக்கு ஓர் உயிர்த்தெழுதல் இருக்குமென நாம் எதிர்பார்க்க வேண்டுமா? அந்தச் சமயத்தில் யெகோவாவின் நியாயாதிபதி மரணாக்கினைத்தீர்ப்பை நிறைவேற்றின ஆட்கள் உயிர்த்தெழுப்பப்படுவரென ஓரிடத்திலும் நமக்குச் சொல்லப்பட்டில்லை. இயேசுதாமே சொன்னபடி, “செம்மறியாடுகளாக” இராத யாவரும் “பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தஞ்செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினிக்குள்,” அதாவது, “நித்திய அறுப்புண்டுபோதலுக்குள்” செல்கின்றனர். (மத்தேயு 25:33, 41, 46, NW) இது “தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்” உச்சநிலையை அடையச் செய்கிறது.—2 பேதுரு 3:7; நாகூம் 1:2, 7-9; மல்கியா 4:1.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
ஒரு வியப்பூட்டும் இரகசியம் தெளிவாக்கப்பட்டது
5 “மூர்க்க மிருகம் . . . இருந்தது.” ஆம், 63 தேசங்கள் ஒரு சமயத்திலோ அல்லது வேறொரு சமயத்திலோ பங்கெடுத்தன; ஜனவரி 10, 1920 முதல் சர்வதேச சங்கமாக அது இருந்தது. ஆனால், ஒவ்வொன்றாக ஜப்பான், ஜெர்மனி, மற்றும் இத்தாலி விலகிக்கொண்டன, முன்னாள் சோவியத் யூனியன் சர்வதேச சங்கத்திலிருந்து விலக்கப்பட்டது. செப்டம்பர் 1939-ல் ஜெர்மனியின் நாசி சர்வாதிகாரி இரண்டாம் உலக யுத்தத்தைத் தொடங்கி வைத்தார். உலகத்தில் சமாதானத்தைக் காக்கத் தவறியதால், சர்வதேச சங்கம் உண்மையில் செயலற்ற அபிஸ்ஸிற்குள் தள்ளப்பட்டது. 1942-ல் அது ஒரு காலத்தில் இருந்ததாக மாறியது. இதற்கு முன்பாகவோ அல்லது சில காலம் கழித்தோ அல்ல—ஆனால் அந்த நெருக்கடியான காலத்தின் போதுதானே—தரிசனத்தின் முழு அளவான அர்த்தத்தையும் தம்முடைய ஜனங்களுக்கு யெகோவா வெளிப்படுத்தினார்! இந்தத் தீர்க்கதரிசனத்திற்கிசைய புதிய உலக தேவராஜ்ய மாநாட்டில் N. H. நாரால் “மூர்க்க மிருகம் . . . இப்பொழுது இல்லை,” என அறிவிக்க முடிந்தது. “சர்வதேச சங்கம் தொடர்ந்து குழியிலேயே இருக்குமா?,” என்ற கேள்வியை அவர் கேட்டார். வெளிப்படுத்துதல் 17:8-ஐ மேற்கோள்காட்டி “உலக தேசங்களின் கூட்டமைப்பு மீண்டும் எழும்பும்” என அவர் பதிலளித்தார். யெகோவாவின் தீர்க்கதரிசன வார்த்தையை மெய்ப்பிக்கும் விதத்தில் அது அவ்வாறே நிரூபித்தது!
அபிஸ்ஸிலிருந்து ஏறிவருதல்
6 சிவப்புநிற மூர்க்க மிருகம் உண்மையில் அபிஸ்ஸிலிருந்து ஏறிவந்தது. ஜூன் 26, 1945-ல் அ.ஐ.மா., சான் ஃபிரான்ஸிஸ்கோவில், எக்காள முழக்க பேரொலியோடு ஐக்கிய நாட்டுச் சங்கத்தின் சாசனத்தை ஏற்றுக்கொள்ள 50 தேசங்கள் வாக்களித்தன. இந்த அமைப்பு “சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் காத்துக்கொள்ள வேண்டும்.” சர்வதேச சங்கத்திற்கும் ஐநா-விற்குமிடையே அநேக ஒப்புமைகள் இருந்தன. தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா பின்வருமாறு குறிப்பிடுகிறது: “முதல் உலக யுத்தத்திற்குப் பின் அமைக்கப்பட்ட சர்வதேச சங்கத்துடன் ஐநா சில வழிகளில் ஒப்புமையைக் கொண்டிருக்கிறது . . . ஐநா-வை ஏற்படுத்திய அநேக தேசங்கள் சர்வதேச சங்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது. சர்வதேச சங்கத்தைப் போலவே தேசங்களுக்கிடையில் சமாதானத்தைக் காத்துக்கொள்ள உதவுவதற்கே ஐநா ஸ்தாபிக்கப்பட்டது. ஐநா-வின் முக்கிய அமைப்புகள் சர்வதேச சங்கத்துடையதைப் போன்றிருக்கின்றன.” எனவே ஐநா உண்மையில் சிவப்புநிற மூர்க்க மிருகத்தின் புதுத் தோற்றமாகும். அது சர்வதேச சங்கத்தின் 63 உறுப்பினர்களைக் காட்டிலும் மிக அதிகமாக சுமார் 190 தேசங்களைக் கொண்டிருக்கிறது; அதன் முன்னோடியைக் காட்டிலும் விரிவான பொறுப்புக்களையும் அது ஏற்றிருக்கிறது.
“சீக்கிரத்தில் நடக்கப்போகிற காரியங்களை” யெகோவா வெளிப்படுத்துகிறார்
17 என்றாலும், பொய் மதம் தானாகவே சுவடு தெரியாமல் அழிந்துவிடாது. விலைமகளை அழிக்கும் எண்ணத்தை ராஜாக்களின் மனதில் கடவுள் விதைக்கும்வரை அவள் தொடர்ந்து அவர்களைத் தன் ஆசைக்கு அடிபணிய வைப்பாள். (வெளிப்படுத்துதல் 17:16, 17-ஐ வாசியுங்கள்.) சீக்கிரத்தில், சாத்தானுடைய உலகிலுள்ள அரசியல் அமைப்புகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஐக்கிய நாட்டுச் சங்கத்தைப் பயன்படுத்தி பொய் மதங்களை யெகோவா அழித்துவிடுவார். அது அவளுடைய செல்வாக்கையும் செல்வச்செழிப்பையும் பறித்துவிடும். சில பத்தாண்டுகளுக்கு முன்பு இப்படிப்பட்ட சம்பவம் நடக்குமென யாரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். இன்று, கருஞ்சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மீது உட்கார்ந்திருக்கும் விலைமகள் தள்ளாடிக்கொண்டிருக்கிறாள். என்றாலும், அதிலிருந்து மெல்ல மெல்ல சரிந்து அவளாகவே விழுந்துவிடமாட்டாள். திடீரென, வெறித்தனமாக அதிலிருந்து தள்ளிவிடப்படுவாள்.—வெளி. 18:7, 8, 15-19.
டிசம்பர் 30–ஜனவரி 5
பைபிளில் இருக்கும் புதையல்கள் | வெளிப்படுத்துதல் 20-22
“இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்”
ஒரு புதிய வானமும் ஒரு புதிய பூமியும்
2 யோவானுடைய நாளுக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், யெகோவா ஏசாயாவினிடம் பின்வருமாறு சொல்லியிருந்தார்: “இதோ, நான் புதிய வானத்தையும் [வானங்களையும், NW] புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.” (ஏசாயா 65:17; 66:22) உண்மையுள்ள யூதர்கள் பாபிலோனில் நாடுகடத்தப்பட்ட தங்கள் 70 ஆண்டு சிறையிருப்புக்குப் பின், பொ.ச.மு. 537-ல் எருசலேமுக்குத் திரும்பிவந்தபோது இந்தத் தீர்க்கதரிசனம் முதலாவதாக நிறைவேறிற்று. திரும்பநிலைநாட்டப்பட்டதில், அவர்கள், ஒரு புதிய அரசாங்க ஒழுங்குறையான, “புதிய வானங்க”ளின்கீழ், சுத்திகரிக்கப்பட்ட சமுதாயமான ஒரு “புதிய பூமி”யாக அமைந்தார்கள். எனினும், அப்போஸ்தலன் பேதுரு, இந்தத் தீர்க்கதரிசனத்தின் மேலுமான நிறைவேற்றப் பொருத்தத்தைக் குறிப்பிட்டு, பின்வருமாறு கூறினார்: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) இந்த வாக்குத்தத்தம் கர்த்தருடைய இந்த நாளின்போது நிறைவேற்றமடைவதை யோவான் இப்பொழுது காட்டுகிறார். “முந்தின வானமும் முந்தின பூமியும்” ஆகிய சாத்தானுடைய ஒழுங்குபடுத்தியமைக்கப்பட்ட காரிய ஒழுங்குமுறை, சாத்தானும் அவனுடைய பேய்களும் செல்வாக்குச் செலுத்தும் அதன் அரசாங்க அமைப்போடுகூட ஒழிந்துபோகும். கொந்தளிக்கும் ‘சமுத்திரம்’ ஆகிய பொல்லாத, கலகக்கார மனிதவர்க்கம் இல்லாமற்போகும். அதனிடத்தில் ஒரு “புதிய வானமும் புதிய பூமியும்” ஆகிய—பூமிக்குரிய ஒரு புதிய சமுதாயம் ஒரு புதிய அரசாங்கத்தின், கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் இருக்கும்.—வெளிப்படுத்துதல் 20:11-ஐ ஒத்துப்பாருங்கள்.
w13 12/1 11 ¶2-4
“இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்”
“அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்.” (வெளிப்படுத்துதல் 21:4) எப்படிப்பட்டக் கண்ணீரைத் துடைப்பார்? நம் கண்களைச் சுத்தப்படுத்தும் கண்ணீரையோ, சந்தோஷத்தால் பொங்கும் ஆனந்தக் கண்ணீரையோ அல்ல, துன்பத் துயரத்தினால் மக்கள் சிந்தும் சோகக் கண்ணீரைத்தான் கடவுள் துடைக்கப்போகிறார். ஆம், இந்தக் கண்ணீருக்குக் காரணமாக இருக்கும் துன்பத் துயரங்களை நிரந்தரமாக நீக்கப்போகிறார்.
“இனி மரணம் இருக்காது.” (வெளிப்படுத்துதல் 21:4) மரணத்தில் ஒருவரை இழக்கும்போது நம் கண்ணீருக்கு அணைக்கட்டுவது கடினம். ஆனால், தமக்குக் கீழ்ப்படியும் ஜனங்களை மரணத்தின் பிடியிலிருந்து யெகோவா விடுவிக்கப்போவதாக வாக்குகொடுத்திருக்கிறார். எப்படி விடுவிப்பார்? மரணத்திற்கான ஆணிவேரை நீக்குவதன் மூலம், அதாவது ஆதாமிடமிருந்து வழிவழியாக வந்த பாவத்தை நீக்குவதன் மூலம், விடுவிக்கப்போகிறார். (ரோமர் 5:12) இயேசுவின் பலி மூலமாக யெகோவா அவர்களை எந்தக் குறையுமில்லாத பரிபூரண மனிதர்களாகப் படிப்படியாக மாற்றுவார். அப்போது மரணம் “ஒழிக்கப்படும்.” (1 கொரிந்தியர் 15:26) அதன்பின் கடவுளுடைய நோக்கம் நிறைவேறும். மனிதர்கள் சந்தோஷமாக, ஆரோக்கியமாக என்றென்றும் வாழ்வார்கள்.
“வேதனை இருக்காது.” (வெளிப்படுத்துதல் 21:4) எப்படிப்பட்ட வேதனை இருக்காது? பாவத்தினாலும் அபூரணத்தினாலும் வரும் உடல் ரீதியான, மன ரீதியான, உணர்ச்சி ரீதியான வேதனைகள் இருக்காது; மனிதர்களை ஆட்டிப்படைக்கும் இவை எல்லாவற்றையும் கடவுள் முற்றிலுமாக நீக்கிப்போடுவார்.
யெகோவா, சத்தியத்தின் கடவுள்
14 யெகோவா தமது வார்த்தையாகிய பைபிளில் நமக்குச் சொல்லியிருக்கும் விஷயங்களுக்கு நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். தாம் எப்படிப்பட்டவர் என்று சொல்கிறாரோ அப்படிப்பட்டவராகவே இருக்கிறார், தாம் என்ன செய்யப் போவதாக சொல்கிறாரோ அதை நிச்சயம் செய்வார். ஆகவே, கடவுளில் நம்பிக்கை வைக்க நமக்கு எல்லா காரணமும் இருக்கிறது. “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையை” தாம் கொண்டு வரப்போவதாக யெகோவா சொல்கையில் நாம் அதை நம்பலாம். (2 தெசலோனிக்கேயர் 1:7) நீதியை நாடித் தொடருவோரைத் தாம் நேசிப்பதாக யெகோவா சொல்கையிலும், விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவனை தாம் அருளுவதாக சொல்கையிலும், துக்கத்தையும் அலறுதலையும் மரணத்தையும் நீக்கிப்போடுவதாக சொல்கையிலும் அவருடைய வார்த்தையை நாம் நம்பலாம். இந்தக் கடைசி வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேறும் என்பதை அப்போஸ்தலனாகிய யோவானுக்குக் கொடுத்த இந்தக் கட்டளை மூலம் யெகோவா கோடிட்டுக் காண்பித்தார்: “இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது.”—வெளிப்படுத்துதல் 21:4, 5; நீதிமொழிகள் 15:9; யோவான் 3:36.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E 249 ¶2
உயிர்
ஆதாம் கீழ்ப்படிந்தால் சாகாமல் வாழலாம் என்று கடவுள் சொல்லாமல் சொன்னார். (ஆதி 2:17) அப்படியென்றால், கீழ்ப்படிதலுள்ள மனிதர்களால் பாவமோ, அதன் விளைவான மரணமோ இல்லாமல் வாழ முடியும். மனிதர்களுடைய கடைசி எதிரியான மரணம் ஒழிக்கப்படும்போது, அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள். (1கொ 15:26) கிறிஸ்துவுடைய ஆட்சியின் முடிவில்தான் மரணம் ஒழிக்கப்படும். அவர் 1,000 வருஷங்கள் ஆட்சி செய்வார் என்று வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது. இயேசுவோடு சேர்ந்து ராஜாக்களாகவும் குருமார்களாகவும் சேவை செய்யப்போகிறவர்களைப் பற்றிச் சொல்லும்போது, “அவர்கள் உயிரோடு எழுந்து கிறிஸ்துவுடன் 1,000 வருஷங்கள் ராஜாக்களாக ஆட்சி செய்தார்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. “மரணமடைந்த மற்றவர்கள் அந்த 1,000 வருஷங்கள் முடியும்வரை உயிரோடு எழுந்திருக்கவில்லை” என்று சொல்லப்படுவது, அந்த ஆயிர வருஷ ஆட்சியின் முடிவில் உயிரோடு இருப்பவர்களைக் குறிக்கிறது. அதாவது, சாத்தான் அதலபாதாளத்திலிருந்து விடுதலையாகி மனிதர்களைக் கடைசியாகச் சோதிப்பதற்கு முன்பு உயிரோடு இருப்பவர்களைக் குறிக்கிறது. ஆயிர வருஷ ஆட்சியின் முடிவில், பூமியில் இருக்கும் எல்லாரும், ஆதாமும் ஏவாளும் பாவம் செய்வதற்குமுன் எப்படி இருந்தார்களோ அப்படிப் பரிபூரணமாக இருப்பார்கள். அவர்கள் எந்தக் குறையுமே இல்லாமல் வாழ்வார்கள். சாத்தான் கொஞ்சக் காலத்துக்கு விடுதலையான பிறகு கொண்டுவரப்போகும் கடைசி சோதனையில் தப்பிப்பவர்கள் முடிவே இல்லாமல் என்றென்றும் உயிர்வாழ்வார்கள்.—வெளி 20:4-10.
it-2-E 189-190
நெருப்பு ஏரி
இந்த வார்த்தைகள் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் மட்டும்தான் இருக்கின்றன. அதனால், அவை நிஜமான நெருப்பு ஏரியைக் குறிப்பதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. சொல்லப்போனால், “இந்த நெருப்பு ஏரி இரண்டாம் மரணத்தைக் குறிக்கிறது” என்று பைபிளே நேரடியாகச் சொல்கிறது.—வெளி 20:14; 21:8.
நெருப்பு ஏரி அடையாள அர்த்தத்தில்தான் சொல்லப்பட்டிருக்கிறது என்பது, வெளிப்படுத்துதல் புத்தகத்தில் அதைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் மற்ற வசனங்களிலிருந்து தெரிகிறது. உதாரணத்துக்கு, மரணம் நெருப்பு ஏரியில் தள்ளப்படுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. (வெளி 19:20; 20:14) மரணத்தை நிஜமாகவே நெருப்பில் சுட்டெரிக்க முடியாது. அதோடு, மனிதக் கண்களுக்குத் தெரியாத பிசாசும் நெருப்பு ஏரியில் தள்ளப்படுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பரலோக உடலில் இருக்கும் அவனை நிஜமான நெருப்பினால் ஒன்றும் செய்ய முடியாது.—வெளி 20:10; ஒப்பிட்டுப் பாருங்கள்: யாத் 3:2; நியா 13:20.
நெருப்பு ஏரி “இரண்டாம் மரணத்தை” குறிப்பதாலும்... “மரணமும் கல்லறையும்” அதில் தள்ளப்படுவதாக வெளிப்படுத்துதல் 20:14 சொல்வதாலும்... ஆதாமினால் வந்த மரணத்தை அந்த ஏரி அடையாளப்படுத்தாது என்று தெரிகிறது. (ரோ 5:12) அதேபோல், கல்லறையையும் அது குறிக்காது என்று தெரிகிறது. அப்படியென்றால், வேறு விதமான ஒரு மரணத்துக்குத்தான் அது அடையாளமாக இருக்க வேண்டும். அந்த மரணத்திலிருந்து யாராலும் விடுதலையாக முடியாது. ஏனென்றால், ‘மரணமும் கல்லறையும் தங்களிடம் இருக்கிற இறந்தவர்களை ஒப்படைப்பதுபோல்’ அந்த “ஏரி” ஒப்படைப்பதாக பைபிள் சொல்வதில்லை. (வெளி 20:13) ஆகவே, “வாழ்வின் புத்தகத்தில்” பெயர் எழுதப்படாத எல்லாரும், அதாவது கடவுளுடைய பேரரசாட்சியை விடாப்பிடியாக எதிர்க்கிற எல்லாரும், நெருப்பு ஏரியில் தள்ளப்படுவார்கள். அது இரண்டாம் மரணத்தை, அதாவது நிரந்தரமான அழிவை, குறிக்கிறது.—வெளி 20:15.