உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • வரவிருக்கும் ஆயிரம் வருடங்களுக்காக இப்பொழுது ஒழுங்கமைத்தல்
    காவற்கோபுரம்—1990 | மே 1
    • 3, 4. (எ) இயேசு கிறிஸ்துவாலும் 1,44,000 பேராலும் ஆளப்படும் யெகோவாவின் ஆட்சி எவ்வளவு நீண்ட காலமாயிருக்கும்? (பி) அந்தக் காலப்பகுதிக்குப் பயன்படுத்தப்பட்ட சொற்றொடர் என்ன? உவர்ட்ச் டவர் பிரசுரங்கள் சிலவற்றின் தலைப்புகளில் இது எவ்விதமாகப் பிரதிபலிக்கப்பட்டது?

      3 இயேசு கிறிஸ்துவாலும் மகிமைப்படுத்தப்பட்ட அவருடைய 1,44,000 சீஷர்களாலும், ஆளப்படும் யெகோவாவின் ராஜ்ய ஆட்சிக் காலம், ஆயிரம் வருடங்களாக இருக்கும் என்பதாக முன்னறிவிக்கப்பட்டது. அந்த ஆயிரவருட ஆட்சியின் சம்பந்தமாக வயதான யோவான் அப்போஸ்தலன் எழுதியதாவது: “நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம் பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதன் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். (மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.) இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள் மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.”—வெளிப்படுத்துதல் 20:4–6.

      4 ஆயிரமாண்டுகள், ஓர் ஆயிர வருடக் காலப்பகுதியாக இருப்பதன் காரணமாக, அந்தக் காலப்பகுதி கிறிஸ்துவின் ஆயிரம் வருட ஆட்சிக்காலம் என்றழைக்கப்படுகிறது. இந்தப் பைபிள் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு அதைக் கற்பிக்கிறவர்கள், “ஆயிரம்” என்பதற்குரிய கிரேக்க வார்த்தையின்படி, இயேசு நாதரின் நல்லாயிரஆண்டு ஆட்சியில் நம்பிக்கையுடையவர் அல்லது திரு ஆயிரக்கோட்பாட்டாளர் என்பதாக சிலசமயங்களில் அழைக்கப்படுகின்றனர். வேதாகமத்தில் படிப்புகள் (Studies in the Scriptures) புத்தகம் (ஒரு சமயம் உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்டது) ஆரம்பத்தில் ஆயிர வருட ஆட்சி தொடக்கம் (Millennial Dawn) என்றழைக்கப்பட்டது அக்கறையூட்டுவதாயிருக்கிறது. மேலும் ஒரு சமயம் பைபிள் மாணாக்கரால் பயன்படுத்தப்பட்ட பாட்டு புத்தகத்தின் தலைப்பு ஆயிரம் வருட ஆட்சி தொடக்கத்தின் கீர்த்தனை (Hymns of the Millennial Dawn) என்பதாக இருந்தது.

  • வரவிருக்கும் ஆயிரம் வருடங்களுக்காக இப்பொழுது ஒழுங்கமைத்தல்
    காவற்கோபுரம்—1990 | மே 1
    • 7. இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் காலத்தையும் இயல்பையும் குறித்து பைபிள் தெரிவிப்பது என்ன?

      7 ஆனால் வேதவசனங்களின் பிரகாரம், இயேசு கிறிஸ்துவின் மெய்யான ஆயிர வருட ஆட்சி இன்னும் எதிர்காலத்துக்குரியதாக இருக்கிறது. பைபிள் தீர்க்கதரிசனத்தின் நவீன நாளைய நிறைவேற்றம், அது மிக அருகாமையில், சமீபத்திலிருப்பதாக காண்பிக்கிறது. மெய்யான ஆயிர வருட ஆட்சியின் போது, சாத்தானும் அவனுடைய பேய்களும் உண்மையில் அபிஸிற்குள் தள்ளப்படுவர், இயேசு கிறிஸ்துவும் அவருடைய உடன் சுதந்திரவாளிகளான 1,44,000 பேரும் பிசாசின் அமைப்பிலிருந்து எந்தவித குறுக்கீடுமின்றி எல்லா மனிதவர்க்கத்தின் மீதும் ஆட்சி செலுத்துவர். யெகோவா அவருடைய “சிநேகிதனாகிய” ஆபிரகாமோடு செய்து கொண்ட உடன்படிக்கையின் நிறைவேற்றமாக, மீட்டுக்கொள்ளப்பட்ட எல்லா மனிதவர்க்கத்தின் நித்திய ஆசீர்வாதம், “திரள் கூட்டத்தாரோடு” ஆரம்பமாகும். இவர்கள் இந்தப் பொல்லாத ஒழுங்கு முறையை முடிவுக்குக் கொண்டுவரும் ஈடிணையற்ற “உபத்திரவத்தை” தப்பிப்பிழைத்தவர்களாக இருப்பர். இது “ஆட்டுக்குட்டியானவருடைய (இயேசு கிறிஸ்து) இரத்தத்திலே” மீட்டுக் கொள்ளப்பட்ட இலட்சக்கணக்கான மரித்த ஆட்களுக்கு விரிவாக்கப்படும். (யாக்கோபு 2:21–23; வெளிப்படுத்துதல் 7:1–17; ஆதியாகமம் 12:3; 22:15–18; மத்தேயு 24:21, 22) இந்த நோக்கத்துக்காக, இவர்கள் ஞாபகார்த்தக் கல்லறைகளில் அவர்களுடைய மரண நித்திரையிலிருந்து பூமியின் மீது ஜீவனுக்கு உயிர்த்தெழுப்பப்படுவர்.—யோவான் 5:28, 29.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்