-
கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நாள்—அதன் மகிழ்ச்சியுள்ள பலன்!வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
7, 8. (அ) என்ன புஸ்தகச்சுருள் திறக்கப்படுகிறது, அதன்பின் என்ன நடைபெறுகிறது? (ஆ) யாருக்கு உயிர்த்தெழுதல் இராது?
7 யோவான் மேலும் கூறுவதாவது: “ஜீவபுஸ்தகம் [ஜீவ புஸ்தகச்சுருள், NW] என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் [புஸ்தகச்சுருள்களில், NW] எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் [ஹேடீஸும், NW] தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.” (வெளிப்படுத்துதல் 20:12ஆ, 13) நிச்சயமாகவே திகைக்கவைக்கும் ஒரு காட்சி! ‘சமுத்திரமும் மரணமும் ஹேடீஸும்’ ஒவ்வொன்றும் ஒரு பங்கை வகிக்கிறது, ஆனால் இந்தப் பதங்கள் ஒன்றுக்கொன்று பரிமாற்றமான ஒன்றாக இல்லையென்பதைக் கவனியுங்கள்.a யோனா, மீனின் வயிற்றில் இருந்ததனால் சமுத்திரத்தின் மத்தியில் இருந்தபோதும், ஷியோலில் அல்லது ஹேடீஸில் இருந்ததாகத் தன்னைக் குறித்துப் பேசினார். (யோனா 2:2, NW) ஆதாமினால் உண்டான மரணப் பிடிப்பில் ஒருவர் வைக்கப்பட்டிருந்தால், அப்பொழுது அவரும் ஹேடீஸில் இருக்கலாம். ஒருவரும் கவனிக்காமல் விடப்படுவதில்லையென இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள் உறுதியான நிச்சயத்தை அளிக்கின்றன.
-
-
கடவுளுடைய நியாயத்தீர்ப்பு நாள்—அதன் மகிழ்ச்சியுள்ள பலன்!வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
a சமுத்திரத்திலிருந்து உயிர்த்தெழுப்பப்படுவோரில், நோவாவின் நாளைய ஜலப்பிரளயத்தில் அழிந்த பூமியின் ஒழுக்கங்கெட்ட குடிமக்கள் உட்பட்டிரார்; அந்த அழிவு கடைமுடிவானதாக இருந்தது, அவ்வாறே யெகோவா அளித்த ஆக்கினைத்தீர்ப்பு மிகுந்த உபத்திரவத்தில் நிறைவேற்றப்படுவதும் இருக்கும்.—மத்தேயு 25:41, 46; 2 பேதுரு 3:5-7.
-