உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மகிமையாய்ப் பிரகாசிக்கும் நகரம்
    வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
    • 6. (அ) அந்த நகரத்தை அளப்பதை யோவான் எவ்வாறு விவரிக்கிறார், இந்த அளவிடுதல் எதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது? (ஆ) பயன்படுத்தப்பட்ட அளவுகோல் ‘மனுஷனுடைய அளவின்படி, அதே சமயத்தில் தூதனுடையதன்படி’ இருந்தது எதை விளக்குவதாக இருக்கலாம்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

      6 யோவான் தன்னுடைய விவரத்தைத் தொடர்ந்து கூறுகிறார்: “என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான். அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி [பர்லாங்கு, NW] அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது. அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே [மனுஷனுடைய அளவின்படி, அதே சமயத்தில் தூதனுடையதன்படி, NW] நூற்றுநாற்பத்துநான்கு முழமாயிருந்தது.” (வெளிப்படுத்துதல் 21:15-17) ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலம் அளக்கப்பட்டபோது, அதைக் குறித்த யெகோவாவின் நோக்கங்கள் நிறைவேற்றப்படுமென்ற பொறுப்புறுதியை இது அளித்தது. (வெளிப்படுத்துதல் 11:1) இப்பொழுது, அந்தத் தூதன் புதிய எருசலேமை அளவிடுவது, இந்த மகிமையான நகரத்தைக் குறித்த யெகோவாவின் நோக்கங்கள் எவ்வளவாய் மாற்றக்கூடாதவையாக இருக்கின்றனவெனக் காட்டுகிறது.a

      7. அந்த நகரத்தின் அளவுகளைப் பற்றியதில் தனிச் சிறப்புக்குரியதாயிருப்பது என்ன?

      7 எத்தகைய தனிச் சிறப்புக்குரிய நகரம் இது! சுற்றளவில் 12,000 பர்லாங்குகளைக் (ஏறக்குறைய 2,220 கிலோமீட்டரைக்) கொண்ட பரிபூரண கனசதுரம், 144 முழங்கள் அல்லது 64 மீட்டர் உயரமான ஒரு மதிலால் சூழப்பட்டுள்ளது. எந்தச் சொல்லர்த்தமான ஒரு நகரமும் இத்தகைய அளவுகளை உடையதாக ஒருபோதும் இருக்க முடியாது. அது தற்கால இஸ்ரவேல் தேசத்தைப்போல் ஏறக்குறைய 14 மடங்குகள் பெரியதான ஒரு பிராந்தியத்தை தன்னுள் அடக்கும், மேலும் வானவெளியில் பெரும்பாலும் 560 கிலோமீட்டர் உயர்ந்தோங்கி நிற்கும்! வெளிப்படுத்துதல் அடையாளங்களில் கொடுக்கப்பட்டன. ஆகையால், பரலோக புதிய எருசலேமைப்பற்றி இந்த அளவுகள் நமக்கு என்ன சொல்கின்றன?

      8. இவற்றால் குறிப்பிட்டுக் காட்டப்படுவதென்ன: (அ) அந்த நகரத்தின் 144-முழம் உயரமான மதில்கள்? (ஆ) அந்த நகரத்தின் 12,000 பர்லாங்கு அளவு? (இ) உருவமைப்பில் அந்த நகரம் பரிபூரண கனசதுரமாக இருப்பது?

      8 இந்த நகரம் ஆவிக்குரியபிரகாரம் ஏற்கப்பட்ட கடவுளுடைய குமாரரான 1,44,000 ஆட்களாலாகியதென்பதை, இந்த 144 முழம் உயரமான மதில்கள் நமக்கு நினைப்பூட்டுகின்றன. நீளமும், அகலமும், உயரமும் சமமாயுள்ள அந்த நகரத்தின் 12,000 பர்லாங்கு அளவில் தோன்றுகிற இந்த எண் 12, பைபிள் தீர்க்கதரிசனத்தில் அமைப்புக்குரிய பொருத்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, புதிய எருசலேம், கடவுளுடைய நித்திய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஈடற்று உயர்ந்த முறையில் திட்டமிடப்பட்ட அமைப்புக்குரிய ஓர் ஏற்பாடாகும். புதிய எருசலேம், அரசராகிய இயேசு கிறிஸ்துவோடுகூட, யெகோவாவின் ராஜ்ய அமைப்பாக இருக்கிறது. பின்னும் அந்த நகரத்தின் வடிவம்: ஒரு பரிபூரண கனசதுரம். சாலொமோனின் ஆலயத்தில், யெகோவாவின் சமுகத்தின் அடையாள பிரதிநிதித்துவம் அடங்கிய மகா பரிசுத்த ஸ்தலம் ஒரு பரிபூரண கனசதுரமாக இருந்தது. (1 இராஜாக்கள் 6:19, 20) அவ்வாறெனில், யெகோவாவின் மகிமையால்தானே பிரகாசிப்பிக்கப்பட்ட, இந்தப் புதிய எருசலேம், மிகப்பேரளவிலாகிய பரிபூரண கனசதுரமாகக் காணப்படுவது எவ்வளவு பொருத்தமாயுள்ளது! அதன் அளவுகள் எல்லாம் பரிபூரணமாய்ச் சமநிலைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அது மாறுபாடுகளோ ஊறுபாடுகளோ இல்லாத ஒரு நகரம்.—வெளிப்படுத்துதல் 21:23.

  • மகிமையாய்ப் பிரகாசிக்கும் நகரம்
    வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
    • a பயன்படுத்தப்பட்ட அளவுகோல் “மனுஷனுடைய அளவின்படி, அதே சமயத்தில் தூதனுடையதன்படி” இருந்த இந்த உண்மை, அந்த நகரம் தொடக்கத்தில் மனிதராயிருந்து ஆனால் பின்பு தூதர்களுக்குள் ஆவி சிருஷ்டிகளாய்விட்ட 1,44,000 ஆட்கள் அமைந்ததாயிருக்கும் இந்த உண்மையோடு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்