-
“சாத்தானுடைய ஆழமான காரியங்களை” வெறுத்தல்வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
8. (அ) தியத்தீராவிலுள்ள “யேசபேல்” பற்றி இயேசுவின் அறிவிப்பு என்ன? (ஆ) நவீன காலங்களில் தவறான பெண் செல்வாக்கு எவ்வாறு உணரப்பட்டிருக்கிறது?
8 தியத்தீராவிலுள்ள மூப்பர்களுக்கு இயேசு பின்வருமாறு தொடர்ந்து சொல்கிறார்: ‘அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணை கொடுத்தேன்; தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை. இதோ, நாம் அவளைக் கட்டில் கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ் செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளை விட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளுவேன்.’ (வெளிப்படுத்துதல் 2:21, 22) ஆகாபின் மேல் ஆதிக்கம் செலுத்தி, அப்போது மரண தண்டனை நிறைவேற்ற கடவுளால் நியமிக்கப்பட்ட யெகூவை எதிர்த்து நின்ற பூர்வ யேசபேல் போன்று, பெண்களின் இந்தச் செல்வாக்கு கணவர்களையும் மூப்பர்களையும் சூழ்ச்சியாக கையாள முயன்று கொண்டிருக்கலாம். தியத்தீராவிலுள்ள மூப்பர்கள், இந்த நாணமில்லாத யேசபேல் செல்வாக்கை அனுமதித்துக் கொண்டிருக்கிறதாக தெரிகிறது. இங்கு இயேசு அவர்களுக்கும், இன்று பூலோக முழுவதும் உள்ள யெகோவாவின் மக்களின் சபைக்கும் பலமான எச்சரிப்பைக் கொடுக்கிறார். நவீன காலங்களில், அப்படிப்பட்ட பிடிவாதமான சில பெண்கள் தங்கள் கணவர்கள் விசுவாசதுரோகிகளாகும்படி தூண்டியிருக்கின்றனர், மேலும் யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களுக்கு எதிராகவும்கூட நீதிமன்ற நடவடிக்கை எடுக்கும்படி பின்னின்று தூண்டிவிட்டிருக்கின்றனர்.—யூதா 5-8-ஐ ஒப்பிடவும்.
-
-
“சாத்தானுடைய ஆழமான காரியங்களை” வெறுத்தல்வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
10. (அ) யேசபேலும் அவளுடைய பிள்ளைகளும் ஏன் நியாயத்தீர்ப்பை பெறவேண்டும்? (ஆ) யேசபேலின் பிள்ளைகளாகிறவர்கள் என்ன அபாயகரமான நிலையில் இருக்கிறார்கள், மேலும் அப்படிப்பட்டவர்கள் என்ன செய்யவேண்டும்?
10 “யேசபேல் என்னும் ஸ்திரீ”யைக் குறிப்பிடும்போது, இயேசு இவ்வாறு தொடருகிறார்: “அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.” (வெளிப்படுத்துதல் 2:23) யேசபேலும் அவள் பிள்ளைகளும் மனந்திரும்ப இயேசு காலத்தை அனுமதித்திருந்தார், ஆனால் அவர்களோ அவர்களுடைய ஒழுக்கக்கேடான வழிகளில் நிலைத்திருப்பதனால் நியாயத்தீர்ப்பைக் கட்டாயமாகவே பெற வேண்டும். இன்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு இதில் வலிமையுள்ள ஒரு செய்தி இருக்கிறது. யேசபேலைப் போன்று நடப்பவர்கள், ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி, தலைமைத்துவம் மற்றும் ஒழுக்கம் பற்றிய பைபிள் நியமங்களை மீறுவதன் மூலம் அல்லது பிடிவாதமாக இருந்து தேவராஜ்ய ஒழுங்கை அசட்டை செய்வதன் மூலம் அவளுடைய பிள்ளைகளாகி ஆவிக்குரிய விதத்தில் அபாயகரமான நோய்வாய்ப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். உண்மையாகவே, அப்படிப்பட்ட ஓர் ஆள் சபையிலுள்ள மூப்பர்களை அவனுக்காக ஜெபம் பண்ணும்படி அழைத்தால், “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் [யெகோவா, NW] அவனை எழுப்புவார்”—அவன் மனத்தாழ்மையுடன் அந்த ஜெபங்களுக்கு ஒத்திசைந்து நடக்கும் பட்சத்தில் மட்டுமே. ஆனால் எவனும் (அல்லது எவளும்) ஒழுக்கக்கேடான செயல்களை மறைத்துப் போட முயற்சி செய்வதன் மூலம் அல்லது வைராக்கியமான ஊழியம் செய்வதாக வெளித்தோற்றத்தில் காட்டிக்கொள்வதன் மூலம் கடவுளையோ கிறிஸ்துவையோ ஏமாற்றிவிடலாம் என்று நினைத்துவிட வேண்டாம்.—யாக்கோபு 5:14, 15.
11. சட்டவிரோதமான பெண்களின் செல்வாக்கு ஊடுருவுவதைக் குறித்து விழிப்புடன் இருப்பதற்கு சபைகள் இன்று எவ்வாறு உதவப்படுகின்றன?
11 சந்தோஷகரமாக, யெகோவாவின் சாட்சிகளின் பெரும்பாலான சபைகள் இந்த ஆபத்துக்கு இன்று விழிப்புள்ளவையாக இருக்கின்றன. தேவாட்சிக்கு எதிரான மனநிலைகளையும் தவறு செய்வதை நோக்கிச் செல்லும் போக்குகளையும் குறித்து மூப்பர்கள் விழிப்புள்ளவர்களாயிருக்கின்றனர். ஆபத்தின் வழியில் இருக்கின்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதிக தாமதமாவதற்கு முன்பாக அவர்கள் தங்கள் ஆவிக்குரிய தன்மையைக் கட்டியெழுப்பி சீர்பொருந்தும்படியாக உதவி செய்ய இந்த மூப்பர்கள் முயற்சிசெய்கிறார்கள். (கலாத்தியர் 5:16; 6:1) அன்பாகவும் உறுதியாகவும், இந்தக் கிறிஸ்தவக் கண்காணிகள் பெண்களின் விடுதலை என்பதற்கு ஒத்த நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்காக சிறிய தன்னலக் கும்பல்கள் எடுக்கக்கூடிய பெண்களின் எந்த முயற்சியையும் தடுத்துப்போடுகின்றனர். மேலுமாக, யெகோவாவின் சாட்சிகளுடைய வெளியீடுகளில், காலத்திற்கேற்ற அறிவுரைகள் அவ்வப்போது கொடுக்கப்படுகின்றன.a
12. யெகூவைப் போன்ற ஒரு வைராக்கியத்தை யோவான் வகுப்பார் இன்று என்ன வழியில் காட்டுகின்றனர்?
12 இருப்பினும், படுமோசமான ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டிருக்கையில், மேலும் குறிப்பாக இது ஒரு பழக்கமாகி விட்டிருக்கையில் மனந்திரும்பாத பாவிகள் கட்டாயமாக சபை நீக்கம் செய்யப்பட வேண்டும். இஸ்ரவேலில் யேசபேலின் செல்வாக்கின் எல்லா தடயங்களையும் நீக்கிப் போடுவதற்கான யெகூவின் வைராக்கியத்தை நாம் நினைவுகூருகிறோம். அதைப்போலவே, இன்று, இந்த யோவான் வகுப்பார் உறுதியான நடவடிக்கை எடுத்து தங்களுடைய “யோனதாப்” தோழர்களுக்கு முன்மாதிரியை வைத்து, மேலும் எதை வேண்டுமானாலும் செய்ய அனுமதிக்கும் கிறிஸ்தவமண்டல ஊழியர்களிடமிருந்து அதிக வித்தியாசப்பட்டவர்களாக தங்களைக் காண்பித்துக் கொண்டிருக்கின்றனர்.—2 இராஜாக்கள் 9:22, 30-37; 10:12-17.
-