-
ஜீவ புஸ்தகச்சுருளில் உங்கள் பெயர் இருக்கிறதா?வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
10. சர்தையிலுள்ள சபையில் என்ன உற்சாகமூட்டும் அம்சத்தை இயேசு கண்டார், இது நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
10 சர்தையிலுள்ள சபைக்கான இயேசுவின் அடுத்த வார்த்தைகள் அதிக உற்சாகமூட்டுவதாக இருக்கின்றன. அவர் இவ்வாறு சொல்கிறார்: “ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து, என்னோடேகூட நடப்பார்கள். ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவ புஸ்தகத்திலிருந்து [ஜீவ புஸ்தகச்சுருளிலிருந்து, NW ] அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப் போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.” (வெளிப்படுத்துதல் 3:4, 5) இந்த வார்த்தைகள் நம்மை எழுப்பி உண்மையுள்ளவர்களாக இருப்பதற்கான நம்முடைய தீர்மானத்தைப் பலப்படுத்தவில்லையா? ஒரு மூப்பர் குழுவின் அஜாக்கிரதையின் காரணமாக ஒரு சபை முழுவதுமாக ஆவிக்குரிய ஆழ்ந்த தூக்கத்தில் விழக்கூடும். இருப்பினும், அங்கிருக்கும் சில தனிப்பட்ட நபர்கள், தங்களுடைய கிறிஸ்தவ அடையாளத்தை சுத்தமாகவும் கறைபடாமலும் வைத்துக்கொண்டு அதன் மூலம் யெகோவாவிடம் ஒரு நல்ல பெயரை தொடர்ந்து கொண்டிருப்பதற்காக தைரியமாய் கடுமையாக முயற்சிக்கக்கூடும்.—நீதிமொழிகள் 22:1.
-
-
ஜீவ புஸ்தகச்சுருளில் உங்கள் பெயர் இருக்கிறதா?வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
13. தங்களுடைய ‘வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத’ அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் வைக்கப்பட்டுள்ளன?
13 முடிவுவரையாக உண்மையாக இருந்து, அவர்களுடைய கிறிஸ்தவ அடையாளத்தைக் கறைப்படுத்திக்கொள்ளாத சர்தையிலுள்ள அந்த நபர்கள், ஓர் ஆச்சரியமான நம்பிக்கையின் நிறைவேற்றத்தை அடைகின்றனர். இயேசுவின் மேசியானிய ராஜ்யம் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்ட பின்பு, அவர்கள் ஆவி வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்பட்டிருக்கிறார்கள். மேலும் ஜெயங்கொள்பவர்களாக அவர்களுடைய கறையற்ற, களங்கமற்ற நீதியின் அடையாளமாக வெண்வஸ்திரம் தரித்தவர்களாக இருக்கிறார்கள். ஜீவனுக்கு வழிநடத்தும் இடுக்கமான பாதையில் நடந்தவர்களாக, அவர்கள் ஒரு நித்திய வெகுமதியை அனுபவிப்பார்கள்.—மத்தேயு 7:14; வெளிப்படுத்துதல் 6:9-11-ஐயும் காண்க.
என்றென்றும் ஜீவ புத்தகத்திலே!
14. ‘ஜீவபுஸ்தகம்’ என்றால் என்ன, அங்கு யாருடைய பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன?
14 ‘ஜீவபுஸ்தகம்’ என்றால் என்ன, அதில் யாருடைய பெயர்கள் வைத்திருக்கப்பட்டிருக்கும்? ஜீவபுஸ்தகம் அல்லது சுருள் என்பது நித்திய ஜீவ அளிப்பைப் பெறுவதற்கு தகுதியுள்ள யெகோவாவின் ஊழியர்களின் பதிவைக் குறிப்பிடுகிறது. (மல்கியா 3:16 ) இங்கே வெளிப்படுத்துதலில் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் பெயர்களுக்கு தெளிவான குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பூமியின்மீது நித்திய ஜீவனுக்கான வரிசையிலுள்ளவர்களின் பெயர்களுங்கூட அதிலே பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. மேலும், அந்தப் புஸ்தகத்திலிருந்து பெயர்கள் ‘கிறுக்கிப் போடப்படவும்’ முடியும். (யாத்திராகமம் 32:32, 33 ) ஆயினும், மரணம் வரையாக, ஜீவபுஸ்தகத்தில் பெயர்கள் நிலைத்திருக்கும் யோவான் வகுப்பார் பரலோகத்தில் அழியாத ஜீவனைப் பெறுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 2:10 ) தம் பிதாவுக்கு முன்பாகவும் அவருடைய தூதர்களுக்கு முன்பாகவும் இயேசு விசேஷமாக அறிக்கையிடும் பெயர்கள் இவையே. அந்த வெகுமதி எவ்வளவு மேன்மையானது!
15. திரள் கூட்டத்தின் அங்கத்தினர்கள் எவ்வாறு அவர்களுடைய பெயர்களை அழிக்க முடியாத வகையில் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்படும்படி செய்வர்?
15 ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள திரள் கூட்டத்தாரும் மிகுந்த உபத்திரவத்திலிருந்து உயிரோடு வருவார்கள். இயேசுவின் ஆயிர வருட ஆட்சி முழுவதுமாகவும் அதைத் தொடர்ந்து வரும் இறுதியான சோதனையின்போதும் விசுவாசத்தை அப்பியாசிப்பதன் மூலம் இவர்கள் பரதீஸான பூமியில் நித்திய ஜீவன் என்ற வெகுமதியளிக்கப்படுவார்கள். (தானியேல் 12:1; வெளிப்படுத்துதல் 7:9, 14; 20:15; 21:4 ) அதற்குப் பிறகு ஜீவபுஸ்தகத்தில் அவர்களுடைய பெயர்கள் அழிக்க முடியாத வகையில் எழுதப்பட்டு நிலைத்திருக்கும். பரிசுத்த ஆவியின் மூலம் இங்கு அளிக்கப்பட்டிருப்பதை அறிந்தவர்களாக, இயேசு மீண்டும் மீண்டும் கொடுக்கும் அறிவுரைகளுக்கு நீங்கள் மிகவும் ஊக்கத்துடன் பிரதிபலிக்கமாட்டீர்களா: “ஆவியானவர் [ஆவி, NW ] சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்”?—வெளிப்படுத்துதல் 3:6.
-