-
கடவுளுடைய அரசாங்கம்—அது என்ன?இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
2. இயேசுவோடு சேர்ந்து யாரெல்லாம் ஆட்சி செய்வார்கள்?
இயேசுவோடு சேர்ந்து, ‘எல்லா கோத்திரங்களையும் மொழிகளையும் இனங்களையும் தேசங்களையும் சேர்ந்த [நபர்கள்] . . . ராஜாக்களாகப் பூமியின் மீது ஆட்சி செய்வார்கள்.’ (வெளிப்படுத்துதல் 5:9, 10) அவர்கள் எத்தனை பேர்? இயேசு இந்தப் பூமியில் வாழ்ந்த காலத்திலிருந்து லட்சக்கணக்கானவர்கள் அவருடைய சீஷர்களாக ஆகியிருப்பது உண்மைதான். ஆனால், 1,44,000 பேர் மட்டும்தான் பரலோகத்துக்குப் போய் அவரோடு சேர்ந்து ஆட்சி செய்வார்கள். (வெளிப்படுத்துதல் 14:1-4-ஐ வாசியுங்கள்.) மற்றவர்கள் கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக இந்தப் பூமியில் வாழ்வார்கள்.—சங்கீதம் 37:29.
-
-
கடவுளுடைய அரசாங்கம்—அது என்ன?இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
6. நம்மைப் புரிந்துகொள்ளும் அரசர்கள்
நம் அரசரான இயேசு ஒரு மனிதராக வாழ்ந்தவர். அதனால், “நம் பலவீனங்களைக் குறித்து [அவரால்] அனுதாபப்பட” முடியும். (எபிரெயர் 4:15) அவரோடு ஆட்சி செய்யப்போகும் 1,44,000 பேரையும் யெகோவா இந்தப் பூமியிலிருந்துதான் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்த ஆண்களும் பெண்களும் கடவுளுக்கு உண்மையாக இருப்பவர்கள், ‘எல்லா கோத்திரங்களையும் மொழிகளையும் இனங்களையும் தேசங்களையும் சேர்ந்தவர்கள்.’—வெளிப்படுத்துதல் 5:9.
இயேசுவும் 1,44,000 பேரும் நம்மைப்போல் மனிதர்களாக வாழ்ந்தவர்கள் என்று தெரிந்துகொள்வது உங்களுக்கு ஆறுதலாக இருக்கிறதா? ஏன்?
இயேசுவோடு சேர்ந்து ஆட்சி செய்ய எல்லா பின்னணியையும் சேர்ந்த ஆண்களையும் பெண்களையும் யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார்
-