உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ‘புஸ்தகச் சுருளைத் திறப்பதற்கு பாத்திரவான் யார்?’
    வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
    • 14. (அ) இயேசுவின் புஸ்தகச் சுருளை எடுக்கும் செயலுக்கு நான்கு ஜீவன்களும் 24 மூப்பர்களும் எவ்வாறு பிரதிபலிக்கின்றன[ர்]? (ஆ) 24 மூப்பர்களைப் பற்றி யோவான் பெற்றுக்கொள்கிற தகவல் அவர்களுடைய அடையாளத்தையும் நிலையையும் எவ்வாறு உறுதிப்படுத்துகிறது?

      14 யெகோவாவின் சிங்காசனத்திற்கு முன்பாக இருந்த அந்த மற்றவர்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்? “அந்தப் புஸ்தகத்தை [புஸ்தகச் சுருளை, NW] அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்[தனர்].” (வெளிப்படுத்துதல் 5:8) கடவுளுடைய சிங்காசனத்திற்கு முன்பாக உள்ள நான்கு கேருபீய ஜீவன்களைப் போன்று, 24 மூப்பர்கள், அவருடைய அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளுகிறவர்களாய் இயேசுவுக்கு தலை வணங்கி நிற்கின்றனர். ஆனால் இந்த மூப்பர்கள் மட்டுமே, சுரமண்டலங்களையும் தூபவர்க்கத்தின் கலசங்களையும் கொண்டிருக்கின்றனர்.a மேலும் இப்பொழுது அவர்கள் மட்டுமே ஒரு புதிய பாடலைப் பாடுகின்றனர். (வெளிப்படுத்துதல் 5:9) இவ்வாறாக, அவர்கள், சுரமண்டலங்களை எடுத்துக்கொண்டு ஒரு புதிய பாடலை பாடுகிற பரிசுத்த “தேவனுடைய இஸ்ரவேலின்” 1,44,000 பேருக்கு ஒத்திருக்கின்றனர். (கலாத்தியர் 6:16; கொலோசெயர் 1:12; வெளிப்படுத்துதல் 7:3-8; 14:1-4) மேலுமாக, 24 மூப்பர்கள், பூர்வ இஸ்ரவேலில் ஆசரிப்புக்கூடாரத்தில் யெகோவாவுக்குத் தூபவர்க்கத்தை எரித்த ஆசாரியர்கள் செய்த சேவைக்கு படமாக இருக்கும் பரலோக, ஆசாரிய வேலையை நிறைவேற்றுகிறவர்களாக காண்பிக்கப்படுகிறார்கள். மேலும் கடவுள், மோசேயின் நியாயப்பிரமாணத்தை நடுவில் இராதபடிக்கு எடுத்து, இயேசுவின் கழுமரத்தில் அதை ஆணி அடித்தபோது அந்த வேலை பூமியின் மீது முடிவுக்கு வந்தது. (கொலோசெயர் 2:14) இவை எல்லாவற்றிலிருந்தும் நாம் என்ன முடிவுக்கு வருகிறோம்? இங்கே மேற்கொண்ட அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் ‘தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளும்’ அவர்களுடைய இறுதியான நியமிப்பில் காணப்படுகிறார்கள்.—வெளிப்படுத்துதல் 20:6.

  • ‘புஸ்தகச் சுருளைத் திறப்பதற்கு பாத்திரவான் யார்?’
    வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
    • ஒரு புதிய பாட்டு

      17. (அ) என்ன புதிய பாடலை 24 மூப்பர்கள் பாடுகிறார்கள்? (ஆ) ‘புதிய பாடல்’ என்ற சொற்றொடர் பைபிளில் வழக்கமாக எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது?

      17 இப்பொழுது ஓர் இனிய இசைப் பாடல் தொனிக்கிறது. இது ஆட்டுக்குட்டியானவருக்கு அவருடைய ஆசாரிய கூட்டாளிகள், 24 மூப்பர்களால் பாடப்படுகிறது: “அவர்கள் ஒரு புதிய பாட்டை பாடுகிறார்கள்: நீரே புஸ்தகச் சுருளை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர், ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து ஆட்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டீர்.” (வெளிப்படுத்துதல் 5:9, NW) ‘புதிய பாடல்’ என்ற சொற்றொடர் பைபிளில் அநேக முறைகள் வருகிறது, மேலும் சில வல்லமையான விடுதலையின் செயலுக்காக யெகோவாவைப் புகழ்வதற்கு வழக்கமாக குறிப்பிடப்படுகிறது. (சங்கீதம் 96:1; 98:1; 144:9) இவ்வாறாக, பாடல் புதியதாக இருக்கிறது, ஏனெனில் பாடுபவர் யெகோவாவின் கூடுதலான ஆச்சரியப்படத்தக்க வேலைகளை இப்பொழுது அறிவித்து, மேலும் அவருடைய மகிமையான நாமத்திற்கு புதுப்பிக்கப்பட்ட போற்றுதலை வெளிக்காட்டக்கூடும்.

      18. அவர்களுடைய புதிய பாடலுடன் 24 மூப்பர்கள் எதற்காக இயேசுவைத் துதிக்கிறார்கள்?

      18 இருப்பினும், இங்கே, 24 மூப்பர்கள் புதிய பாடலை யெகோவாவுக்கு முன்பாக இல்லாமல் இயேசுவுக்கு முன்பாக பாடுகிறார்கள். ஆனால் நியமம் ஒன்றாகவே இருக்கிறது. தேவனுடைய குமாரனாக, அவர்களுக்காக செய்திருக்கிற புதிய காரியங்களுக்காக அவர்கள் இயேசுவை துதிக்கிறார்கள். அவருடைய இரத்தத்தின் மூலமாக, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருந்து, அதனால் யெகோவாவின் விசேஷித்த ஜனமாக ஒரு புதிய தேசத்தைக் கொண்டுவருவதை கூடிய காரியமாக்கினார். (ரோமர் 2:28, 29; 1 கொரிந்தியர் 11:25; எபிரெயர் 7:18-25) இந்தப் புதிய ஆவிக்குரிய தேசத்தின் அங்கத்தினர்கள் மாம்சப்பிரகாரமான அநேக தேசங்களிலிருந்து வந்தவர்கள். ஆனால் இயேசு அவர்களை ஒரே தேசத்தைப் போன்று ஒரே சபையாக ஐக்கியப்படுத்தினார்.—ஏசாயா 26:2; 1 பேதுரு 2:9, 10.

      19. (அ) மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலர்கள் அவர்களுடைய உண்மையற்றத் தன்மையின் காரணமாக என்ன ஆசீர்வாதத்தை உணரத் தவறிவிட்டார்கள்? (ஆ) யெகோவாவின் புதிய தேசம் என்ன ஆசீர்வாதத்தை அனுபவிக்க பெறுகிறது?

      19 மோசேயின் நாட்களில் யெகோவா இஸ்ரவேலர்களை ஒரு தேசமாக ஏற்படுத்தினபோது, அவர்களுடன் ஓர் உடன்படிக்கை செய்து, அந்த உடன்படிக்கைக்கு அவர்கள் உண்மையுள்ளவர்களாக நிலைத்திருப்பார்களேயானால் அவருக்கு முன்பாக ஆசாரிய ராஜ்யமாய் இருப்பார்கள் என்று வாக்களித்திருந்தார். (யாத்திராகமம் 19:5, 6) இஸ்ரவேலர்கள் உண்மையுள்ளவர்களாக இருக்கவில்லை, மேலும் இந்த வாக்குத்தத்தத்தை ஒருபோதும் அடையவும் இல்லை. மறுபட்சத்தில், இயேசுவினால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட புதிய உடன்படிக்கையினால் உண்டாக்கப்பட்ட புதிய தேசம் உண்மையுள்ளதாக நிலைத்திருக்கிறது. எனவே, இதனுடைய அங்கத்தினர்கள் பூமியின் மீது அரசர்களாக ஆட்சி செய்யவும் மேலும் ஆசாரியர்களாக சேவை செய்யவும், மனிதவர்க்கத்தில் நல்ல இருதயமுள்ளவர்கள் யெகோவாவுடன் ஒப்புரவு ஆவதற்கு உதவி செய்யக்கூடியவர்களாகவும் ஆகிறார்கள். (கொலோசெயர் 1:20) புதிய பாட்டு விவரிக்கிறப் பிரகாரமாகவே இது இருக்கிறது: “எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம்.” (வெளிப்படுத்துதல் 5:10) மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவுக்கு இந்தப் புதிய துதிப்பாடலை பாடுவதில் அந்த 24 மூப்பர்கள் என்னே மகிழ்ச்சியைக் கொண்டிருக்கிறார்கள்!

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்