-
ஒரு மிகப் பெரிய திரள் கூட்டம்வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
17. (அ) 24 மூப்பர்களில் ஒருவரால் என்ன கேள்வி எழுப்பப்படுகிறது மேலும் அந்த மூப்பர் பதிலைக் கண்டுபிடிக்க முடிகிறது என்ற உண்மை எதைக் காண்பிக்கிறது? (ஆ) அந்த மூப்பரின் கேள்வி எப்போது பதிலளிக்கப்பட்டது?
17 அப்போஸ்தலனாகிய யோவானின் காலத்திலிருந்து கர்த்தருடைய நாளினூடேயும், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் திரள் கூட்டத்தாரின் அடையாளத்தைக் குறித்து புரியாமல் இருந்தார்கள். அப்படியானால், 24 மூப்பர்களில் ஒருவர், பரலோகத்தில் ஏற்கெனவே இருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர், ஒரு பொருத்தமான கேள்வியை எழுப்புவதன் மூலம் யோவானுடைய சிந்தனையைத் தூண்டுவது தகுதியாயிருக்கிறது. “அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். அதற்கு நான்: என் ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன்.” (வெளிப்படுத்துதல் 7:13, 14அ) ஆம், அந்த மூப்பர் பதிலைக் கண்டுபிடித்து யோவானுக்குக் கொடுக்க முடியும். இது, 24 மூப்பர்களின் தொகுதியில் உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் இன்றைக்கு தெய்வீக சத்தியங்களை அறிவிப்பதில் உட்பட்டிருக்கக்கூடும் என்பதைக் காண்பிக்கிறது. அவர்களுடைய பங்கில், பூமியிலிருக்கும் யோவான் வகுப்பாரைச் சேர்ந்தவர்கள் யெகோவா அவர்கள் மத்தியில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம் திரள் கூட்டத்தாரின் அடையாளத்தைக் கற்றுக்கொண்டார்கள். யெகோவாவின் ஏற்ற காலத்தில், 1935-ல் தேவாட்சிக்குரிய வானமண்டலத்தை ஒளி வீசிப் பிரகாசிக்கச் செய்த தெய்வீக வெளிச்சத்தின் மின்னொளியைத் தாமதமில்லாமல் விரைவாக மதித்துணரக்கூடியவர்களாக இருந்தார்கள்.
-
-
ஒரு மிகப் பெரிய திரள் கூட்டம்வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
22. திரள் கூட்டத்தாரைப் பற்றி யோவான் மேலுமான என்ன தகவலைப் பெறுகிறார்?
22 தெய்வீக வழிமூலத்தின் மூலமாக, யோவான் இந்தத் திரள் கூட்டத்தைப் பற்றி மேலுமானத் தகவலைப் பெறுகிறார்: “அப்பொழுது அவன் [மூப்பர்]: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரை சேவிக்கிறார்கள் [அவருக்குப் பரிசுத்த சேவை செய்கிறார்கள், NW]; சிங்காசனத்தில் மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார் [அவருடைய கூடாரத்தை அவர்கள்மேல் விரிக்கிறார், NW].”—வெளிப்படுத்துதல் 7:14ஆ, 15.
23. திரள் கூட்டத்தார் ‘வெளிவரக்கூடிய’ அந்த மிகுந்த உபத்திரவம் என்ன?
23 முன்பு ஒரு சமயத்தில், இயேசு, ராஜ்ய மகிமையில் தம்முடைய வந்திருத்தல் “உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனி மேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவத்தில்” உச்சக்கட்டத்தை அடையும் என்பதாக சொல்லியிருந்தார். (மத்தேயு 24:21, 22) அந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, தேவதூதர்கள் பூமியின் நான்கு காற்றுகளைச் சாத்தானின் உலக ஒழுங்குமுறையைப் பாழாக்குவதற்கு அவிழ்த்துவிடுவார்கள். முதலாவது பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோன் அழிந்துவிடும். பின்னர், உபத்திரவத்தின் உச்சக்கட்டத்தில், இயேசு, 1,44,000 பேரில் மீந்திருப்பவர்களை, ஒரு மிகப்பெரிய திரள் கூட்டத்தாரோடு காப்பாற்றுவார்.—வெளிப்படுத்துதல் 7:1; 18:2.
24. திரள் கூட்டத்தாரின் தனிப்பட்ட நபர்கள் தப்பிப்பிழைப்பதற்கு எவ்வாறு தகுதிபெறுகிறார்கள்?
24 திரள் கூட்டத்தாரின் தனிப்பட்ட நபர்கள் தப்பிப்பிழைப்பதற்கு எவ்வாறு தகுதிபெறுகிறார்கள்? மூப்பர் யோவானிடம், அவர்கள் “தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்தவர்கள்” என்று சொல்லுகிறார். வேறு வார்த்தைகளில், அவர்களுடைய மீட்பராக இயேசுவில் விசுவாசம் வைத்திருக்கிறார்கள், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள், ஒப்புக்கொடுத்தலை முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள், மேலும் அவர்களுடைய நேர்மையான நடத்தையின் மூலம் ‘நல்மனச்சாட்சியைக் கொண்டிருக்கிறார்கள்.’ (1 பேதுரு 3:16, 21; மத்தேயு 20:28) இவ்வாறு, யெகோவாவின் கண்களில், அவர்கள் சுத்தமுள்ளவர்களாகவும் நீதியுள்ள ஆட்களாகவும் இருக்கிறார்கள். மேலும், “உலகத்தால் கறைப்படுத்தப்படாதபடி” தங்களை வைத்துக்கொள்ளுகிறார்கள்.—யாக்கோபு 1:27.
-