-
கடவுளுடைய பரிசுத்த இரகசியம் —அதன் மகிமையான உச்சக்கட்டம்!வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
8. (அ) ஏழாவது எக்காளம் ஊதப்படுவது தேசத்தாரிடமிருந்து என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது? (ஆ) யாருக்கு விரோதமாக தேசத்தார் தங்களுடைய எரிச்சலை வெளிக்காட்டியிருக்கிறார்கள்?
8 மறுபட்சத்தில், தேசத்தாருக்கு இந்த ஏழாம் எக்காளம் ஊதப்படுவது எந்தவித சந்தோஷத்தையும் கொண்டுவரவில்லை. அவர்கள் யெகோவாவுடைய கோபத்தை எதிர்ப்படுவதற்கான காலம் வந்துவிட்டது. யோவான் சொல்கிற பிரகாரம்: “ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.” (வெளிப்படுத்துதல் 11:18) உலக தேசத்தார் 1914-லிருந்து ஒருவருக்கொருவர் விரோதமாகவும், கடவுளுடைய ராஜ்யத்துக்கு விரோதமாகவும் மேலும் விசேஷமாக யெகோவாவுடைய இரண்டு சாட்சிகளுக்கு விரோதமாகவும் தங்களுடைய எரிச்சலைக் கடுமையாக வெளிக்காட்டியிருக்கின்றனர்.—வெளிப்படுத்துதல் 11:3.
9. தேசத்தார் எப்படி பூமியை நாசப்படுத்தி வந்திருக்கிறார்கள், அதைக் குறித்து என்ன செய்ய கடவுள் முடிவுசெய்துள்ளார்?
9 சரித்திரம் முழுவதிலுமாக தேசத்தார் தொடர்ந்து யுத்தத்தில் ஈடுபடுவதினாலும் தவறான நிர்வாகத்தினாலும் பூமியை நாசப்படுத்தி வந்திருக்கின்றனர். என்றபோதிலும், இந்த நாசகரமான வேலை 1914 முதற்கொண்டு அபாயகரமான அளவில் பரவியிருக்கிறது. பேராசையும் ஊழலும் பாலைவனங்களை விரிவாக்குவதிலும் அநேக வளமிக்க நிலங்களை இழந்துவிடுவதிலும் விளைவடைந்திருக்கின்றன. அமில மழையும் கதிரியக்க மேகங்களும் அநேக இடங்களைப் பாழாக்கியிருக்கின்றன. உணவு மூலங்கள் அசுத்தமாக்கப்பட்டிருக்கின்றன. நாம் சுவாசிக்கிற காற்றும் குடிக்கிற தண்ணீரும் அசுத்தமாக்கப்பட்டிருக்கின்றன. தொழில்வள கழிவுப்பொருட்கள், நிலத்திலும் சமுத்திரத்திலும் உயிர்களை அச்சுறுத்துகின்றன. ஒரு சமயம், அனைத்து மனிதவர்க்கத்தையும் அணு ஆயுதங்கள் மூலம் நிர்மூலமாக்க வல்லரசுகள் முழு அழிவைக்கொண்டு பயமுறுத்தின. சந்தோஷகரமாக, யெகோவா ‘பூமியை அழிப்பவர்களை அழித்துப்போடுவார்’ (NW); பூமியிருக்கும் இந்த மோசமான நிலைக்கு உத்தரவாதமுள்ள அகந்தைக்கொண்ட, கடவுள்பயமற்ற ஆட்கள் மீது அவர் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவார். (உபாகமம் 32:5, 6; சங்கீதம் 14:1-3) ஆகையால், இந்தப் பொல்லாப்பான ஆட்களை கணக்கு ஒப்புவிக்கச்செய்ய அவர் இந்த மூன்றாம் ஆபத்துக்கு ஏற்பாடு செய்கிறார்.—வெளிப்படுத்துதல் 11:14.
அழித்துப்போடுபவர்களுக்கு ஆபத்து!
10. (அ) மூன்றாம் ஆபத்து என்ன? (ஆ) எவ்விதத்தில் மூன்றாம் ஆபத்து வாதனையை விட அதிகத்தை கொண்டுவருகிறது?
10 இதோ, மூன்றாம் ஆபத்து. அது விரைந்து வருகிறது! நாம் வாழ்ந்துவரும் அழகிய பூமியாகிய அவருடைய ‘பாதபடியை’ கெடுப்பவர்களுக்கு அழிவைக் கொண்டுவரும் யெகோவாவுடைய வழிமூலமாக இது இருக்கிறது. (ஏசாயா 66:1) அது மேசியானிய ராஜ்யத்தின் மூலம் செயல்பட இருக்கிறது—கடவுளுடைய பரிசுத்த இரகசியம். கடவுளுடைய சத்துருக்களும் விசேஷமாக கிறிஸ்தவமண்டல தலைவர்களும், இந்த முதல் இரண்டு ஆபத்துகளைக்கொண்டு வாதிக்கப்பட்டார்கள்—இவை முக்கியமாக வெட்டுக்கிளிகளுடைய வாதையின் மூலமாகவும் குதிரைச்சேனைகளுடைய இராணுவங்களின் மூலமாகவும் விளைவடைந்தன; ஆனால், மூன்றாம் ஆபத்து யெகோவாவுடைய ராஜ்யம்தானே கவனித்து நடத்தும் ஆபத்தாக இருக்கிறது, வேதனையைக் காட்டிலும் அதிகத்தைக் கொண்டுவருகிறது. (வெளிப்படுத்துதல் 9:3-19) கெடுத்துப்போடும் மனித சமுதாயத்தையும் அதன் ஆட்சியாளர்களையும் அகற்றிப்போடுவதற்குரிய மரண அடியை இது கொடுக்கிறது. இந்த மரண அடி அர்மகெதோனில் யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பின் உச்சக்கட்டமாக வரும். இது தானியேல் முன்னுரைத்ததுப்போலவே இருக்கிறது: “அந்த ராஜாக்களின் [பூமியை அழித்துப்போடும் ஆட்சியாளர்களின்] நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” கடவுளுடைய ராஜ்யம், கவர்ச்சிகரமான ஒரு மலையைப்போன்று, மகிமைநிறைந்த ஒரு பூமியின் மீது ஆட்சிசெய்து, யெகோவாவுடைய ஈடற்ற உன்னத அரசாட்சியை நியாயநிரூபணம் செய்வதாய் மனிதவர்க்கத்துக்கு நித்திய சந்தோஷத்தை கொண்டுவரும்.—தானியேல் 2:35, 44; ஏசாயா 11:9; 60:13.
11. (அ) இந்தத் தீர்க்கதரிசனம் அடுத்தடுத்து தொடர்ந்து பின்வரும் என்ன மகிழ்ச்சியூட்டும் சம்பவங்களை விவரிக்கிறது? (ஆ) எந்த தகுதியற்ற தயவு கண்டுணரப்படுகிறது, எப்படி, யார் மூலம்?
11 அந்த மூன்றாம் ஆபத்து கர்த்தருடைய நாளினூடே படிப்படியாக விடாது தொடர்ந்துவரும் மகிழ்ச்சியூட்டும் சம்பவங்களோடு வரும். ‘மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் தமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருக்கிறவர்களுக்கு கடவுள் பலனளிக்கிறதற்குமான’ காலமாக இது இருக்கும். மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைக் குறிப்பிடுகிறது! முன்பே மரித்துப்போன அபிஷேகம் செய்யப்பட்ட பரிசுத்தவான்களுக்கு இது கர்த்தருடைய நாளின் முற்பகுதியில் நடந்தேறுகிறது. (1 தெசலோனிக்கேயர் 4:15-17) காலப்போக்கில், மீதியானோரான பரிசுத்தவான்கள் உடனடியான உயிர்த்தெழுதல் மூலமாக இவர்களைச் சேர்ந்துகொள்கிறார்கள். மற்றவர்களுக்குங்கூட பரிசளிக்கப்பட வேண்டும், அவர்கள் மகா உபத்திரவத்தை தப்பிப்பிழைக்கும் திரள் கூட்டத்தாராயிருந்தாலுஞ்சரி அல்லது கிறிஸ்துவுடைய ஆயிர-வருட ஆட்சியில் உயிருக்கு கொண்டுவரப்படும் ‘மரித்தோராகிய சிறியோராகவும் பெரியோராகவும்’ இருந்தாலுஞ்சரி பூர்வ காலங்களில் வாழ்ந்த தீர்க்கதரிசிகளாகிய கடவுளுடைய ஊழியர்கள் உட்பட, மனிதவர்க்கத்தில் யெகோவாவுடைய நாமத்துக்குப் பயப்படும் மற்ற ஆட்களும் இதில் உள்ளடங்குவர். கடவுளுடைய மேசியானிய அரசர் மரணத்தின் திறவுகோலையும் ஹேடீஸின் திறவுகோலையும் கொண்டிருப்பதன் காரணமாக, அவருடைய ராஜ்ய ஆட்சி நித்திய ஜீவனாகிய அருமையான ஏற்பாட்டை அடைய நாடுகிற யாவருக்கும் அதை அவர் கொடுப்பதற்கு வழியைத் திறந்து வைக்கும். (வெளிப்படுத்துதல் 1:18; 7:9, 14; 20:12, 13; ரோமர் 6:22; யோவான் 5:28, 29) அது பரலோகத்திலே அழியாமையுள்ள வாழ்க்கை அனுபவிப்பதாயிருந்தாலுஞ்சரி பூமியில் நித்திய வாழ்க்கை அனுபவிப்பதாயிருந்தாலுஞ்சரி, இந்த உயிராகிய பரிசு யெகோவாவுடைய தகுதியற்ற தயவாக இருக்கிறது, இதை பெற்றுக்கொள்கிற ஒவ்வொருவரும் எப்போதும் நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டும்!—எபிரெயர் 2:9.
-
-
கடவுளுடைய பரிசுத்த இரகசியம் —அதன் மகிமையான உச்சக்கட்டம்!வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
[பக்கம் 175-ன் பெட்டி]
பூமியை அழிப்பது
“ஒவ்வொரு மூன்று நொடிகளுக்கும் கால்பந்தாட்ட இட அளவுள்ள மூலாதார மழைக்காட்டின் ஒரு பகுதி மறைந்துவிடுகிறது. . . . ஆதாரமூல காடு இழக்கப்படுவது ஆயிரக்கணக்கான செடிகொடிகளையும் மிருக உயிரினங்களையும் அழித்துப்போடுகிறது.”—விளக்கப்படங்கள் கொண்ட உலக நிலப்படம் (ஆங்கிலம்) (ரான்டு மெக்நால்லி).
“குடியேறிய இரண்டே நூற்றாண்டுகளில் [மிகப் பெரிய ஏரிகளும்] உலகத்திலுள்ள பெரிய சாக்கடையாக ஆகியிருக்கின்றன.”—பூகோளமும் தபாலும் (ஆங்கிலம்) (கனடா).
ஏப்ரல் 1986-ல், ரஷ்யா செர்னோபலிலுள்ள அணுசக்தி ஆலையில் ஏற்பட்ட அணுகுண்டுவெடிப்பும் தீயும் “ஹிரோஷிமா, நாகசாகியில் ஏற்பட்ட அணுகுண்டு வெடிப்புக்கு பிறகு . . . இதுவே ஒரு குறிப்பிடத்தக்க அணுகுண்டு வெடிப்பு சம்பவமாகும், இதுவரை வெடித்துள்ள எல்லா அணுசக்தி சோதனைகளிலும் அணுகுண்டு வெடிப்புகளிலும் இதுவே நீண்ட காலத்துக்கு உலகின் காற்றிலும் நிலத்தின் மேற்பரப்பிலும் தண்ணீரிலும் அதிக வெப்பக் கதிர்களைப்” பரவச்செய்திருக்கிறது.—ஜாமா, தி நியூ யார்க் டைம்ஸ்.
ஜப்பான், மினாமடாவில் உள்ள விரிகுடாவில் ஒரு வேதியியல் தொழிற்சாலையானது மீதைல்மெர்குரியை வெளியேற்றியது. இதனால் மாசுபட்ட மீன்களையும் சிப்பி நண்டுகளையும் உட்கொண்டது, மினாமடா நோய் (MD) என்கிற நோய் தொற்றச்செய்தது, “நாட்பட இருக்கும் நரம்பு சம்பந்தப்பட்ட நோயாகும். . . . இந்நாள்வரை [1985-ல்] ஜப்பான் முழுவதிலும் 2,578 பேர் உண்மையில் அந்த மினாமடா நோயைக் (MD) கொண்டிருந்ததாக அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்டிருக்கிறது.”—இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் எப்பிடமியாலஜி.
[பக்கம் 176-ன் பெட்டி]
வெளிப்படுத்துதல் 11:15-19-ல் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த நியாயத்தீர்ப்புச் செய்திகள் பின்வரும் தரிசனங்களுக்கு ஓர் அறிமுகமாக இருக்கின்றன. வெளிப்படுத்துதல் 12-ம் அதிகாரமானது, வெளிப்படுத்துதல் 11:15, 17-ல் சொல்லப்பட்ட மகத்தான அறிவிப்புகளை நுணுக்க விவரங்களோடு விரிவாக விளக்கிச்சொல்லும் இடைப்பதிவை கொண்டிருக்கிறது. 13-ம் அதிகாரம், 11:18-க்கான பின்னணியைக் கொடுக்கிறது, பூமிக்கு அழிவைக் கொண்டுவந்திருக்கும் சாத்தானுடைய அரசியல் அமைப்பின் ஆரம்பத்தையும் வளர்ச்சியையும் அது விவரிக்கிறது. . 14 மற்றும் 15 அதிகாரங்கள் ஏழாவது எக்காளம் தொனிக்கப்படுவதோடும் மூன்றாவது ஆபத்தோடும் சம்பந்தப்பட்ட கூடுதலான ராஜ்ய நியாயத்தீர்ப்புகளை விவரமாக விளக்குகிறது.
-