-
கடவுளுடைய ராஜ்யம் பிறக்கிறது!வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
2. (அ) யோவான் என்ன ஒரு பெரிய அடையாளத்தை காண்கிறார்? (ஆ) அந்தப் பெரிய அடையாளத்தின் பொருள் எப்போது வெளிப்படுத்தப்பட்டது?
2 இப்போது யோவான் ஒரு பெரிய அடையாளத்தைப் பார்க்கிறார்—கடவுளுடைய ஜனங்களுக்கு முனைப்பான விதத்தில் அக்கறையூட்டுவதாய் இருக்கிறது. இது கிளர்ச்சியூட்டும் தீர்க்கதரிசன தரிசனத்தை அறிமுகப்படுத்தி வைக்கிறது, இதனுடைய பொருள் முதலில் மார்ச் 1, 1925 ஆங்கில காவற்கோபுர பத்திரிகையில் “தேசத்தின் பிறப்பு” என்ற தலைப்புக்கொண்ட ஒரு கட்டுரையில் வெளிவந்தது, பின்னர் 1926-ல் விடுதலை என்ற புத்தகத்தில் மறுபடியும் வெளியிடப்பட்டது. பைபிள் அறிவைப் பற்றிய இந்தப் பிரகாசமான ஒளி யெகோவாவுடைய வேலையின் முன்னேற்றத்துக்கு ஒரு முனைப்பான குறியாக ஆனது. ஆகையால், அந்த நாடகம் வெளிப்பட ஆரம்பிக்கையில் யோவான் அதை விவரிக்கட்டும்: “அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின் மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன. அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள்.”—வெளிப்படுத்துதல் 12:1, 2.
-
-
கடவுளுடைய ராஜ்யம் பிறக்கிறது!வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
6. (அ) யோவான் காண்கிற ஸ்திரீயானவள் சூரியனை அணிந்திருப்பதாலும், பாதங்களின் கீழே சந்திரனை உடையவளாயிருப்பதாலும், நட்சத்திரங்களிலுள்ள கிரீடத்தைக் கொண்டிருப்பதாலும் என்ன குறித்துக் காட்டப்படுகிறது? (ஆ) கர்ப்பவதியாயிருந்த ஸ்திரீ பிரசவவேதனையடைவது எதை அடையாளப்படுத்துகிறது?
6 இந்த ஸ்திரீ சூரியனை அணிந்திருப்பதாகவும் அவள் பாதங்களுக்குக் கீழே சந்திரனை உடையவளாகவும் இருப்பதாக யோவான் காண்கிறார். நாம் அவளுடைய நட்சத்திரங்களுள்ள கிரீடத்தைச் சேர்ப்போமேயானால், அவள் முற்றிலும் பரலோகத்திலிருந்து வரும் ஒளிகளால் சூழப்பட்டிருக்கிறாள். கடவுளுடைய கிருபையொளி அவள் மீது இரவும் பகலும் பிரகாசிக்கிறது. யெகோவாவுடைய சிறப்புவாய்ந்த பரலோக அமைப்புக்கு என்னே ஒரு பொருத்தமான அடையாளம்! அவள் பிரசவவேதனைப்படுகிற கர்ப்பவதியாகவும்கூட இருக்கிறாள். தெய்வீக உதவியை நாடி அவள் அலறுவது பிள்ளைபெறுவதற்கான நேரம் வந்துவிட்டதைக் காட்டுகிறது. பைபிளிலே, கர்ப்பவேதனைப்படுவது ஒரு முக்கியமான விளைபயனை உண்டாக்குவதற்கு அவசியப்படுத்தும் கடின உழைப்பை குறிப்பதற்கு எப்போதும் பயன்படுத்தப்படுகிறது. (ஒப்பிடவும்: சங்கீதம் 90:2; நீதிமொழிகள் 25:23; ஏசாயா 66:7, 8.) சந்தேகமில்லாமல், யெகோவாவுடைய பரலோக அமைப்பு இந்தக் குறிப்பிடத்தக்க பிறப்புக்காக ஆயத்தப்படும்போது இந்த வகையான கர்ப்பவேதனையை அனுபவித்தது.
-