-
கடும் மூர்க்கத்தனமான இரண்டு மிருகங்களுடன் போராடுதல்வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
25. (அ) உலகக் காட்சிக்குள் வருகிற அடையாளக் குறிப்பான மற்றொரு மூர்க்க மிருகத்தை யோவான் எவ்வாறு விவரிக்கிறார்? (ஆ) இந்தப் புதிய மூர்க்க மிருகத்தின் இரண்டு கொம்புகளும், அது பூமியிலிருந்து வெளிவருவதும் குறிப்பிடுவது என்ன?
25 ஆனால் இப்பொழுது மற்றொரு மூர்க்க மிருகம் உலகக் காட்சிக்குள் வருகிறது. யோவான் அறிவிப்பதாவது: “பின்பு, வேறொரு [மூர்க்க, NW] மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது. அது முந்தின [மூர்க்க, NW] மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச் சொஸ்தமடைந்த முந்தின [மூர்க்க, NW] மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது. அன்றியும், அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்[தது].” (வெளிப்படுத்துதல் 13:11-13) இந்த மூர்க்க மிருகத்துக்கு இரண்டு கொம்புகள் இருக்கின்றன, இது இரண்டு அரசியல் வல்லரசுகளின் கூட்டிணைவைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. இது சமுத்திரத்திலிருந்து அல்ல, பூமியிலிருந்து வெளிவருவதாக விவரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, இது சாத்தானின் ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்ட பூமிக்குரிய காரிய ஒழுங்குமுறையிலிருந்து வெளிவருகிறது. இது, கர்த்தருடைய நாளின்போது குறிப்பிடத்தக்கப் பாகத்தை வகிக்கிற, ஏற்கெனவே இருக்கும் ஓர் உலக வல்லரசாக இருக்க வேண்டும்.
26. (அ) இரண்டு கொம்புகளையுடைய அந்த மூர்க்க மிருகம் என்ன, அந்த முதல் மூர்க்க மிருகத்தோடு அது எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது? (ஆ) எந்தக் கருத்தில் இந்த இரண்டு கொம்புகளையுடைய மிருகத்தின் கொம்புகள் ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இருக்கின்றன, அது பேசுகையில் எவ்வாறு “வலுசர்ப்பத்தைப்போல” இருக்கிறது? (இ) தேசாபிமானமுள்ள ஜனங்கள் எதை உண்மையில் வணங்குகிறார்கள், தேசாபிமானம் எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது? (அடிக்குறிப்பைப் பார்க்கவும்.)
26 இது என்னவாக இருக்கலாம்? இது ஆங்கில-அமெரிக்க உலக வல்லரசு—முதல் மூர்க்க மிருகத்தின் ஏழாவது தலையைப்போன்றதே, ஆனால் ஒரு விசேஷித்த பாகம் வகிக்கும் நிலையிலுள்ளது! தரிசனத்தில் இதை ஒரு தனி மூர்க்க மிருகமாகப் பிரித்துக் காட்டுவது, உலக மேடையில் இது தனித்தியங்கி எவ்வாறு செயல்படுகிறதென்பதை மேலும் தெளிவாகக் காண நமக்கு உதவிசெய்கிறது. இரண்டு கொம்புகளையுடைய இந்த அடையாளக் குறிப்பான மூர்க்க மிருகம், ஒரேசமயத்தில் வாழ்பவையும், தனித்தியங்குபவையும், ஆனால் ஒத்துழைப்பவையுமான இரண்டு அரசியல் வல்லரசுகளால் ஆகியது. “ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக”வுள்ள அதன் இரண்டு கொம்புகள், உலகம் முழுவதும் அதனிடம் திரும்பவேண்டிய சாந்தமும் தீங்குசெய்யாததும், அறிவொளியூட்டப்பட்ட வகையான அரசாங்கத்தைக் கொண்டிருப்பதுமாகத் தன்னைத் தோன்றச் செய்கிறதெனத் தெரிகிறது. ஆனால், அதன் ஆட்சிமுறை ஏற்கப்படாத இடங்களில் அது வற்புறுத்தலையும் பயமுறுத்தல்களையும் நேரடியான வன்முறையையுங்கூட பயன்படுத்துவதில் “வலுசர்ப்பத்தைப்போலப்” பேசுகிறது. கடவுளுடைய ஆட்டுக்குட்டியானவரின் அதிகாரத்திலுள்ள கடவுளுடைய ராஜ்யத்துக்குக் கீழ்ப்படிவதை அல்ல, ஆனால் அதற்கு மாறாக, அந்தப் பெரிய வலுசர்ப்பமாகிய சாத்தானின் அக்கறைகளுக்கே கீழ்ப்படியும்படி ஊக்குவிக்கிறது. முதல் மூர்க்க மிருகத்தை வணங்குவதோடு மேலும் கூட்டும் தேசிய பிரிவினைகளையும் பகைமைகளையும் அது முன்னேற்றுவித்திருக்கிறது.c
-
-
கடும் மூர்க்கத்தனமான இரண்டு மிருகங்களுடன் போராடுதல்வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
c தேசாபிமானம், உண்மையில், ஒரு மதமே என உரையாசிரியர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். ஆகவே தேசாபிமானிகளாக இருக்கும் ஆட்கள், தாங்கள் வாழும் நாடு பிரதிநிதித்துவம் செய்யும் மூர்க்க மிருகத்தின் அந்தப் பாகத்தை உண்மையில் வணங்குகின்றனர். ஐக்கிய மாகாணங்களிலுள்ள தேசாபிமானத்தைக் குறித்து, நாம் வாசிப்பதாவது: “மதமாகக் கருதப்படுகிற தேசாபிமானம், கடந்தகால மற்ற பெரிய மத ஒழுங்குமுறைகளோடு பேரளவானதைப் பொதுவாகக் கொண்டிருக்கிறது . . . தற்கால மத தேசாபிமானி தன் சொந்த தேசீய கடவுளின்பேரில் சார்ந்திருக்கும் உணர்வுடையவனாக இருக்கிறான். அவருடைய வல்லமைவாய்ந்த உதவி தேவையென அவன் உணருகிறான். அவரில் தன் சொந்த பரிபூரணத்தின் மற்றும் சந்தோஷத்தின் ஊற்றுமூலத்தை அவன் கண்டுணருகிறான். கண்டிப்பான மதக் கருத்தில், அவருக்கே அவன் தன்னைக் கீழ்ப்படுத்துகிறான். . . . அந்தத் தேசம் நித்தியமானதாகக் கருதப்படுகிறது, அதன் ராஜபக்தியுள்ள மைந்தர்களின் மரணங்கள் அதன் அழிவற்ற கீர்த்தியோடும் புகழோடும் மேலும் கூட்டுகிறது.”—கார்ல்டன் J. F. ஹேய்ஸ், அமெரிக்கர்கள் நம்புவதும் அவர்கள் வணங்கும் முறையும் (ஆங்கிலம்) என்ற, J. பால் உவில்லியம்ஸ் எழுதிய புத்தகத்தின் 359-ம் பக்கத்தில் மேற்கோளாகக் குறிப்பிட்டிருக்கிறபடி.
-