-
இழிபேரெடுத்த வேசியை நியாயந்தீர்த்தல்வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
13. அந்தத் தூதன் ஆவிக்குள் அவரை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனபோது, யோவான் என்ன ஆச்சரியமான காட்சியைக் காண்கிறார்?
13 இந்தப் பெரும் வேசியையும் அவளுடைய அழிவையுங்குறித்து இந்தத் தீர்க்கதரிசனம் மேலும் என்ன வெளிப்படுத்துகிறது? யோவான் இப்பொழுது கூறுகிறபடி, மேலுமான ஓர் உயிர்ப்புள்ள காட்சி தோற்றத்துக்கு வருகிறது: “[அந்தத் தூதன்] ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக் கண்டேன்.”—வெளிப்படுத்துதல் 17:3.
-
-
இழிபேரெடுத்த வேசியை நியாயந்தீர்த்தல்வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
15. வெளிப்படுத்துதல் 13:1-ல் கூறப்பட்டிருக்கிற மூர்க்க மிருகத்துக்கும் வெளிப்படுத்துதல் 17:3-ல் கூறப்பட்டிருக்கிற மூர்க்க மிருகத்துக்கும் என்ன வித்தியாசங்கள் இருக்கின்றன?
15 இந்த மூர்க்க மிருகம் ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் கொண்டிருக்கிறது. அவ்வாறெனில், இது யோவான் முன்னால் கண்ட ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்த அதே மூர்க்க மிருகமாக இருக்குமா? (வெளிப்படுத்துதல் 13:1) இல்லை, வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த மூர்க்க மிருகம் சிவப்பு நிறமுள்ளது, மேலும், முந்தின மூர்க்க மிருகத்தைப்போல் இது முடிகள் அணிந்திருப்பதாகச் சொல்லப்படுகிறதில்லை. இதன் ஏழு தலைகளில் மாத்திரமே தூஷண நாமங்களைக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும், இது “தூஷணமான நாமங்களால் நிறைந்த”தாக இருக்கிறது. இருப்பினும், இந்தப் புதிய மூர்க்க மிருகத்துக்கும் அந்த முந்தின மிருகத்துக்கும் இடையில் ஓர் உறவு இருக்க வேண்டும்; இவற்றிற்கிடையேயுள்ள ஒப்புமைகள் தற்செயலாக இருக்க முடியாதபடி மிக முனைப்பாயிருக்கின்றன.
16. சிவப்புநிற மூர்க்க மிருகத்தின் அடையாளம் என்ன? அதன் நோக்கத்தைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
16 அவ்வாறெனில், இந்தப் புதிய சிவப்புநிற மூர்க்க மிருகம் என்ன? இது, ஓர் ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்த ஆங்கில-அமெரிக்க மூர்க்க மிருகத்தின் தூண்டுதலால் அந்த மூர்க்க மிருகத்துக்கு உருவாக்கப்பட்ட சொரூபமாக இருக்க வேண்டும். இந்தச் சொரூபம் உருவாக்கப்பட்ட பின்பு, இந்த இரண்டு கொம்புகளையுடைய மூர்க்க மிருகம் அந்த மூர்க்க மிருகத்தின் சொரூபத்துக்கு ஆவியைக் கொடுக்கும்படி அனுமதிக்கப்பட்டது. (வெளிப்படுத்துதல் 13:14, 15) உயிருள்ள, சுவாசிக்கிற சொரூபத்தை, யோவான் இப்பொழுது காண்கிறார். இது 1920-ல் இந்த இரண்டு கொம்புகளையுடைய மூர்க்க மிருகம் உயிருக்குக் கொண்டுவந்த சர்வதேச சங்கத்தைப் படமாகக் குறிக்கிறது. இந்தச் சர்வதேச சங்கம் “எல்லா மனிதருக்கும் நீதியை வழங்குவதற்குப் பொதுவிடமாக இருந்து போர் பயமுறுத்தலை என்றென்றுமாக ஒழித்துப்போடும்,” என்று ஐ.மா. ஜனாதிபதி உவில்சன் எதிர்பார்த்தார். இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பின் அது ஐக்கிய நாட்டுச் சங்கமாக உயிர்த்தெழுப்பப்பட்டபோது, அதன் அமைப்பின் நோக்கம் “சர்வதேச சமாதானத்தையும் பாதுகாப்பையும் காத்துவரவேண்டுமென்பதே.”
-