உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யார் பரலோகத்திற்குப் போகிறார்கள்?
    பைபிள் தரும் பதில்கள்
    • எத்தனை பேர் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள்?

      1,44,000 பேர் பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்று பைபிள் சுட்டிக்காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 7:4) அப்போஸ்தலன் யோவான் பார்த்த ஒரு தரிசனத்தில், “சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டியானவர் நின்றுகொண்டிருந்தார்; . . . 1,44,000 பேர் அவரோடு நின்றுகொண்டிருந்தார்கள்.” இந்தத் தரிசனம், வெளிப்படுத்துதல் 14:1-3-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இங்கே “ஆட்டுக்குட்டியானவர்” என்ற வார்த்தை உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவைக் குறிக்கிறது. (யோவான் 1:29; 1 பேதுரு 1:19) “சீயோன் மலை” என்பது இயேசு மற்றும் அவரோடு பரலோகத்தில் ஆட்சி செய்கிற 1,44,000 பேரின் மேன்மையான நிலையைக் குறிக்கிறது.—சங்கீதம் 2:6; எபிரெயர் 12:22.

      பரலோக அரசாங்கத்தில் கிறிஸ்துவோடு ஆட்சிசெய்வதற்காக “அழைக்கப்பட்ட,” “தேர்ந்தெடுக்கப்பட்ட” ஆட்கள் “சிறுமந்தை” என்று அழைக்கப்படுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 17:14; லூக்கா 12:32) “சிறுமந்தை” என்ற வார்த்தை, இயேசுவுடைய ஆடுகளின் முழு எண்ணிக்கையோடு ஒப்பிட அவர்கள் குறைவாகவே இருப்பார்கள் என்பதைக் காட்டுகிறது.—யோவான் 10:16.

  • யார் பரலோகத்திற்குப் போகிறார்கள்?
    பைபிள் தரும் பதில்கள்
    • தவறான கருத்து: 1,44,000 என்று வெளிப்படுத்துதல் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிக்கை அடையாளப்பூர்வமானது, நிஜமானது அல்ல.

      உண்மை: வெளிப்படுத்துதலில் அடையாளப்பூர்வ எண்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும், நிஜ எண்ணிக்கையிலும் சில எண்கள் உள்ளன. உதாரணத்திற்கு, “ஆட்டுக்குட்டியானவரின் 12 அப்போஸ்தலர்களுடைய 12 பெயர்கள்” பற்றி அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:14) இங்கே 12 என்பது நிஜமான எண்ணாக இருப்பது போலவே 1,44,000 என்ற எண்ணிக்கையும் நிஜமானதுதான்; இதற்கான அத்தாட்சியைக் கவனியுங்கள்.

      “முத்திரை போடப்பட்டவர்களின் [அதாவது, பரலோக வாழ்வுக்கான உத்தரவாதத்தைப் பெற்றவர்களின்] எண்ணிக்கை . . . 1,44,000” என்று வெளிப்படுத்துதல் 7:4 சொல்கிறது. இந்த வசனத்தின் சூழமைவு இரண்டாவது வகுப்பாரைப் பற்றியும் சொல்கிறது, அதாவது ‘எந்த மனிதனாலும் எண்ண முடியாத திரள் கூட்டமான ஜனங்களை’ பற்றிச் சொல்கிறது. அந்த ‘திரள் கூட்டமான ஜனங்களும்’ கடவுளிடமிருந்து மீட்புப் பெறுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 10) 1,44,000 என்ற எண்ணிக்கை அடையாளப்பூர்வமானது என்றால், அதாவது குறிப்பிட்ட எண்ணிக்கை இல்லாத ஒரு தொகுதி என்றால், இரண்டு வகுப்பாருக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லாமல் போய்விடும்.a

      மற்றொரு விஷயம்: 1,44,000 பேர் “முதல் விளைச்சலாக மனிதகுலத்திலிருந்து விலைகொடுத்து வாங்கப்பட்டவர்கள்” என்று விவரிக்கப்படுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 14:4) ‘முதல் விளைச்சல்’ என்பது முழு விளைச்சலைப் பிரதிநிதித்துவம் செய்கிற ஒரு சிறிய பங்கைக் குறிக்கிறது. பூமியில் கணக்கிட முடியாத எண்ணிக்கையிலுள்ள மக்கள்மீது பரலோகத்திலிருந்து கிறிஸ்துவோடு ஆட்சிசெய்யப்போகிற குறைந்த எண்ணிக்கையினரை இந்த வார்த்தை மிகச் சரியாகவே விவரிக்கிறது.—வெளிப்படுத்துதல் 5:10.

      a வெளிப்படுத்துதல் 7:4-ல் சொல்லப்பட்டுள்ள 1,44,000 என்ற எண்ணிக்கையைப் பற்றி பேராசிரியர் ராபர்ட் எல். தாமஸ் இப்படி எழுதினார்: “இது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை; 7:9-ல் கொடுக்கப்பட்டுள்ள கணக்கிட முடியாத எண்ணிக்கையுடன் இது வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அடையாளப்பூர்வமானது என்று சொன்னால், இந்தப் புத்தகத்திலுள்ள வேறெந்த எண்ணிக்கையையும் நிஜமானதாக எடுத்துக்கொள்ள முடியாது.”—வெளிப்படுத்துதல் 1-7: ஆன் எக்ஸிஜெட்டிகல் கமென்ட்ரி, பக்கம் 474.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்