பாடல் 98
ராஜ்ய விதை விதைத்தல்
1. யெ-கோ-வா-வின் வே-லை செய்-வோ-ரே,
ஆத்-மார்த்-த-மா-ன ஊழ்-ய-ரே,
பண்-ணை வே-லைக்-கு வ-ரு-வீ-ரே,
ஏ-சு-வின் பின்-னே செல்-வீ-ரே;
மண்-ணை உ-ழு-து நன்-றாக்-கு-வீ-ரே,
சத்-ய வி-தை தூ-வு-வீ-ரே,
வேர்-வை சிந்-தி வே-லை செய்-தி-டு-வீ-ரே,
அ-மோ-க-மாய் அள்-ளி-டு-வீ-ரே!
2. பா-றை நி-லத்-தில் வி-தை வீழ்ந்-தால்,
பட்-டென்-று து-ளிர் வி-டு-மே;
ஆ-னால், ஆ-ழ-மாய் வே-ரூன்-றா-தே,
காய்ந்-து க-ரு-கிப்-போ-கு-மே.
முட்-கள் மத்-தி-யில் வீழ்ந்-த வி-தை-யே
பே-ரா-சை-யால் பா-ழா-கு-மே;
நல்-ல நி-லத்-தில் வி-தை-கள் வீழ்ந்-தா-லோ
நன்-றா-கக் க-னி தந்-தி-டு-மே!
3. சோர்ந்-து-போ-கா-மல் உ-ழைப்-பீ-ரே,
வே-லை-யில் ப-லன் காண்-பீ-ரே;
மக்-கள் மீ-தன்-பு காட்-டு-வீ-ரே,
நெஞ்-சங்-க-ளை எட்-டு-வீ-ரே;
அச்-சம் போக்-கி-யே தெம்-பாக்-கு-வீ-ரே,
நீண்-ட பொ-று-மை காப்-பீ-ரே;
முப்-ப-து ம-டங்-கா-வ-து சேர்ப்-பீ-ரே,
முத்-துப் புன்-ன-கை சிந்-து-வீ-ரே!
(காண்க: மத். 13:19-23; 22:37.)