கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
யெகோவாவுடைய வாக்குறுதிகள்மீது உங்களுக்கு பலமான விசுவாசம் இருக்கிறதா?
யெகோவா கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேறாமல் போகவில்லை என்று யோசுவாவும் சாலொமோனும் சொன்னார்கள். (யோசு 23:14; 1ரா 8:56) இந்த ‘இரண்டு சாட்சிகளுடைய வாக்குமூலமும்’ நம் விசுவாசத்தை இன்னும் பலப்படுத்துகின்றன.—2கொ 13:1; தீத் 1:3.
யோசுவாவின் நாட்களில், யெகோவா தன்னுடைய வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றினார் என்பதைத் தெரிந்துகொள்ள “ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை” என்ற வீடியோவைக் குடும்பமாகப் பாருங்கள். பிறகு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்: (1) விசுவாசத்தைச் செயலில் காட்டிய ராகாபைப் போல் நீங்கள் எப்படி நடந்துகொள்ளலாம்? (எபி 11:31; யாக் 2:24-26) (2) வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் போனால் அழிவுதான் வரும் என்பதை ஆகானின் உதாரணம் எப்படிக் காட்டுகிறது? (3) கிபியோனியர்கள் போர்வீரர்களாக இருந்தாலும் ஏன் யோசுவாவை ஏமாற்றி இஸ்ரவேலர்களோடு சமாதானம் செய்தார்கள்? (4) எமோரியர்களின் ஐந்து ராஜாக்கள் இஸ்ரவேலர்களை எதிர்த்தபோது யெகோவா எப்படி தன் மக்களைக் காப்பாற்றினார்? (யோசு 10:5-14) (5) ‘கடவுளுடைய அரசாங்கத்துக்கும் நீதிநெறிகளுக்கும்’ முதலிடம் கொடுத்ததால் யெகோவா உங்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார்?—மத் 6:33.
யெகோவா ஏற்கனவே செய்ததை... இப்போது செய்துகொண்டிருப்பதை... இனி செய்யப்போவதைப் பற்றியெல்லாம் யோசிக்கும்போது அவருடைய வாக்குறுதிகள்மீது இருக்கும் விசுவாசம் இன்னும் பலப்படும்.—ரோ 8:31, 32.