பாடல் 134
பிள்ளைகள் கடவுள் தந்த சொத்து
1. ஒ-ரு பெண் தா-யா-கும் நா-ளில்,
ஓர் ஆண் தந்-தை-யா-கி-ற தி-னத்-தில்,
அள்-ளிக்-கொள்-ள கி-டைக்-கும் சொத்-து,
அன்-பு காட்-ட ஒ-ரு முத்-து!
பெற்-றோர்-க-ளின் அ-ரும் வா-ரி-சு!
யெ-கோ-வா-வின் அ-ரு-மை ப-ரி-சு!
தே-வன் வ-ழி-யில் வ-ளர்த்-தா-லே,
பூ-வா-கப் பூத்-தி-டும் பிள்-ளை-யே!
(பல்லவி)
உங்-கள் கை-யில் தந்-தா-ரே தே-வன்,
பொக்-கி-ஷ-மாய் ஓர் ஜீ-வ-னை!
பார்த்-துப் பார்த்-துப் பா-து-காப்-பீ-ரே,
தே-வன் வ-ழி காட்-டு-வீ-ரே!
2. பெற்-றோ-ரே சத்-யம் கற்-றீர்-கள்,
இ-த-யத்-தில் ப-தி-ய வைத்-தீர்-கள்!
பிஞ்-சு நெஞ்-சில் அ-தை ஊன்-றுங்-கள்,
ஆன்-மீ-க நீ-ரை ஊற்-றுங்-கள்.
தி-னம் தி-னம் ப-ரா-ம-ரித்-து,
வே-தத்-தி-லே நி-லைக்-கச் செய்-யுங்-கள்.
பூந்-த-ளிர் த-ழைப்-ப-தைப் பார்த்-து,
பூ-ரித்-துப் பூ-ரித்-துப் போ-வீர்-கள்!
(பல்லவி)
உங்-கள் கை-யில் தந்-தா-ரே தே-வன்,
பொக்-கி-ஷ-மாய் ஓர் ஜீ-வ-னை!
பார்த்-துப் பார்த்-துப் பா-து-காப்-பீ-ரே,
தே-வன் வ-ழி காட்-டு-வீ-ரே!
(பாருங்கள்: உபா. 6:6, 7; எபே. 6:4; 1 தீ. 4:16.)