தகவல் பெட்டி 2ஆ
எசேக்கியேல்—வாழ்வும் காலமும்
எசேக்கியேல் என்ற பெயருக்கு, “கடவுள் பலப்படுத்துகிறார்” என்று அர்த்தம். எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனங்களில் நிறைய எச்சரிப்பு செய்திகள் இருக்கின்றன. ஆனாலும், அவர் சொன்ன பெரும்பாலான விஷயங்கள் அவருடைய பெயரின் அர்த்தத்தோடு ஒத்துப்போகின்றன. அதோடு, கடவுளுக்குத் தூய வணக்கத்தைச் செலுத்த விரும்புகிறவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்துகின்றன.
அவர் காலத்தில் வாழ்ந்த மற்ற தீர்க்கதரிசிகள்
எரேமியா
குருமார் வம்சத்தைச் சேர்ந்தவர்; எருசலேமில் ரொம்பக் காலம் தீர்க்கதரிசியாகச் சேவை செய்தார் (கி.மு. 647-580)
உல்தாள்
சுமார் கி.மு. 642-ல் திருச்சட்டப் புத்தகம் ஆலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் தீர்க்கதரிசியாகச் சேவை செய்தார்
தானியேல்
(ராஜாக்கள் தோன்றிய) யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர். கி.மு. 617-ல் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்டார்
ஆபகூக்
யோயாக்கீம் ஆட்சி செய்ய ஆரம்பித்த சமயத்தில், யூதாவில் தீர்க்கதரிசியாகச் சேவை செய்திருக்கலாம்
ஒபதியா
ஏதோமுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொன்னார். எருசலேம் அழிக்கப்பட்ட காலத்தில் அவர் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கலாம்
எப்போது தீர்க்கதரிசனம் சொன்னார்கள்? (வருஷங்கள் கி.மு.-வில்)
எசேக்கியேலின் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்கள் (வருஷங்கள் கி.மு.-வில்)
சுமார் 643: பிறக்கிறார்
617: பாபிலோனுக்குக் கைதியாகக் கொண்டுபோகப்படுகிறார்
613: தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பிக்கிறார்; யெகோவா காட்டிய தரிசனத்தைப் பார்க்கிறார்
612: ஆலயத்தில் நடக்கும் விசுவாசதுரோகத்தைப் பற்றிய தரிசனத்தைப் பார்க்கிறார்
611: எருசலேமுக்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பிக்கிறார்
609: மனைவி இறந்துபோகிறாள்; எருசலேமின் கடைசி முற்றுகை ஆரம்பிக்கிறது
607: எருசலேம் அழிந்துவிட்டது என்ற செய்தி கிடைக்கிறது
593: ஆலயத்தைப் பற்றிய தரிசனத்தைப் பார்க்கிறார்
591: நேபுகாத்நேச்சார் எகிப்தின் மீது படையெடுப்பார் என்று முன்னறிவிக்கிறார்; தன்னுடைய புத்தகத்தை எழுதி முடிக்கிறார்
யூதா மற்றும் பாபிலோனின் ராஜாக்கள்
659-629: யோசியா, தூய வணக்கத்தை முன்னேற்றுவிக்கிறார்; ஆனால், பார்வோன் நேகோவுக்கு எதிரான போரில் கொல்லப்படுகிறார்
628: யோவாகாஸ், மூன்று மாதங்களுக்கு மோசமாக ஆட்சி செய்த பிறகு, பார்வோன் நேகோவால் சிறைபிடிக்கப்படுகிறார்
628-618: கெட்ட ராஜாவான யோயாக்கீமை, பார்வோன் நேகோ தன்னுடைய சிற்றரசராக ஆக்குகிறார்
625: எகிப்திய படையை நேபுகாத்நேச்சார் தோற்கடிக்கிறார்
620: நேபுகாத்நேச்சார் யூதாமீது முதல்முறை படையெடுத்து யோயாக்கீமை எருசலேமில் சிற்றரசராக ஆக்குகிறார்
618: யோயாக்கீம், நேபுகாத்நேச்சாருக்கு எதிராகக் கலகம் செய்கிறார்; வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தின் மீது பாபிலோனியர்கள் இரண்டாவது முறை படையெடுத்தபோது கொல்லப்பட்டிருக்கலாம்
617: எகொனியா என்றும் அழைக்கப்பட்ட கெட்ட ராஜாவான யோயாக்கீன், மூன்று மாதங்களுக்கு ஆட்சி செய்த பிறகு நேபுகாத்நேச்சாரிடம் சரணடைகிறார்
617-607: சிதேக்கியா, ஒரு கெட்ட ராஜாவாகவும் அதேசமயம் ஒரு கோழையாகவும் இருக்கிறார். நேபுகாத்நேச்சார் அவரைச் சிற்றரசராக ஆக்குகிறார்
609: சிதேக்கியா, நேபுகாத்நேச்சாருக்கு எதிராகக் கலகம் செய்கிறார்; அப்போது நேபுகாத்நேச்சார் மூன்றாவது முறையாக யூதாமீது படையெடுக்கிறார்
607: நேபுகாத்நேச்சார் எருசலேமை அழிக்கிறார்; சிதேக்கியாவைச் சிறைபிடித்து அவரைக் குருடாக்கி பாபிலோனுக்குக் கொண்டுபோகிறார்