தகவல் பெட்டி 13அ
வெவ்வேறு ஆலயங்கள், வெவ்வேறு பாடங்கள்
தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்த ஆலயம்:
பாபிலோனில் சிறைபிடிக்கப்பட்டிருந்த யூதர்களுக்காக இதைப் பற்றி எசேக்கியேல் சொல்கிறார்
இதில் இருக்கிற பலிபீடத்தில் நிறைய பலிகள் செலுத்தப்படுகின்றன
வணக்கத்துக்கான யெகோவாவின் நீதியான நெறிமுறைகளை இது சிறப்பித்துக் காட்டுகிறது
1919-ல் மீண்டும் நிலைநாட்டப்பட ஆரம்பித்த தூய வணக்கத்தைப் பற்றி இது முக்கியமாகச் சொல்கிறது
மாபெரும் ஆன்மீக ஆலயம்:
எபிரெய கிறிஸ்தவர்களுக்காக இதைப் பற்றி பவுல் விளக்குகிறார்
இதில் இருக்கிற பலிபீடத்தில் “எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாக” ஒரேவொரு பலி செலுத்தப்படுகிறது (எபி. 10:10)
கிறிஸ்துவின் மீட்புப் பலியின் அடிப்படையில் தூய வணக்கத்துக்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாட்டைப் பற்றி இது விளக்குகிறது. வழிபாட்டுக் கூடாரமும், ஆலயங்களும் ரொம்பக் காலமாகவே இதற்கு அடையாளமாக இருந்தன
கி.பி. 29 முதல் கி.பி. 33 வரை மிகப் பெரிய தலைமைக் குருவான கிறிஸ்து செய்த வேலையைப் பற்றி இது முக்கியமாகச் சொல்கிறது