உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 16
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

1 நாளாகமம் முக்கியக் குறிப்புகள்

      • கடவுளின் பெட்டி கூடாரத்தில் வைக்கப்படுகிறது (1-6)

      • தாவீதின் நன்றிப் பாடல் (7-36)

        • “யெகோவா ராஜாவாகிவிட்டார்!” (31)

      • கடவுளின் பெட்டிக்கு முன்னால் சேவை (37-43)

1 நாளாகமம் 16:1

இணைவசனங்கள்

  • +1ரா 8:1; 1நா 15:1
  • +2சா 6:17-19; 1ரா 8:5

1 நாளாகமம் 16:2

இணைவசனங்கள்

  • +லேவி 1:3
  • +லேவி 3:1

1 நாளாகமம் 16:4

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “நினைத்துப் பார்ப்பதற்கும்.”

இணைவசனங்கள்

  • +எண் 18:2

1 நாளாகமம் 16:5

இணைவசனங்கள்

  • +1நா 6:31, 39
  • +1நா 15:18
  • +1நா 15:21
  • +1நா 15:17, 19

1 நாளாகமம் 16:7

இணைவசனங்கள்

  • +1நா 6:31, 39

1 நாளாகமம் 16:8

இணைவசனங்கள்

  • +சங் 106:1
  • +சங் 67:2; 105:1-6; ஏசா 12:4

1 நாளாகமம் 16:9

அடிக்குறிப்புகள்

  • *

    அல்லது, “அறிவியுங்கள்.”

இணைவசனங்கள்

  • +2சா 23:1; எபே 5:19
  • +சங் 107:43

1 நாளாகமம் 16:10

இணைவசனங்கள்

  • +லேவி 22:32; ஏசா 45:25; எரே 9:24
  • +1நா 28:9; பிலி 4:4

1 நாளாகமம் 16:11

இணைவசனங்கள்

  • +ஆமோ 5:4; செப் 2:3
  • +சங் 24:5, 6

1 நாளாகமம் 16:12

இணைவசனங்கள்

  • +ஏசா 41:8
  • +சங் 135:4

1 நாளாகமம் 16:13

இணைவசனங்கள்

  • +சங் 111:2-4

1 நாளாகமம் 16:14

இணைவசனங்கள்

  • +சங் 95:7
  • +சங் 105:7-11

1 நாளாகமம் 16:15

இணைவசனங்கள்

  • +உபா 7:9

1 நாளாகமம் 16:16

இணைவசனங்கள்

  • +ஆதி 15:18; 17:1, 2
  • +ஆதி 26:3-5

1 நாளாகமம் 16:17

இணைவசனங்கள்

  • +ஆதி 28:14

1 நாளாகமம் 16:18

இணைவசனங்கள்

  • +ஆதி 12:7; 17:8; 35:12
  • +உபா 32:8

1 நாளாகமம் 16:19

இணைவசனங்கள்

  • +ஆதி 34:30; உபா 26:5; சங் 105:12-15

1 நாளாகமம் 16:20

இணைவசனங்கள்

  • +ஆதி 20:1; 46:6

1 நாளாகமம் 16:21

இணைவசனங்கள்

  • +ஆதி 31:7, 42
  • +ஆதி 12:17; 20:3

1 நாளாகமம் 16:22

அடிக்குறிப்புகள்

  • *

    வே.வா., “அபிஷேகம் செய்தவர்கள்மேல்.”

இணைவசனங்கள்

  • +ஆதி 20:7

1 நாளாகமம் 16:23

இணைவசனங்கள்

  • +சங் 40:10; 96:1-6

1 நாளாகமம் 16:25

இணைவசனங்கள்

  • +யாத் 15:11

1 நாளாகமம் 16:26

இணைவசனங்கள்

  • +ஏசா 45:20; 1கொ 8:4
  • +ஏசா 44:24

1 நாளாகமம் 16:27

இணைவசனங்கள்

  • +உபா 33:26; சங் 8:1
  • +1தீ 1:11

1 நாளாகமம் 16:28

இணைவசனங்கள்

  • +சங் 68:34; 96:7-13

1 நாளாகமம் 16:29

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “அலங்காரத்தோடு.”

  • *

    அல்லது, “யெகோவா பரிசுத்தத்தில் மகத்தானவராக இருப்பதால் அவரை வணங்குங்கள்.”

இணைவசனங்கள்

  • +உபா 28:58; நெ 9:5; சங் 148:13
  • +1நா 29:3-5; மத் 5:23
  • +உபா 26:10

1 நாளாகமம் 16:30

இணைவசனங்கள்

  • +சங் 104:5; பிர 1:4

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    10/1/2005, பக். 10-11

1 நாளாகமம் 16:31

இணைவசனங்கள்

  • +சங் 97:1
  • +வெளி 19:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/15/2014, பக். 10-11

1 நாளாகமம் 16:34

இணைவசனங்கள்

  • +2நா 5:13; லூ 18:19
  • +சங் 103:17; எரே 31:3; புல 3:22

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    1/15/2002, பக். 11

1 நாளாகமம் 16:35

இணைவசனங்கள்

  • +சங் 68:20
  • +சங் 122:4
  • +ஏசா 43:21

1 நாளாகமம் 16:36

அடிக்குறிப்புகள்

  • *

    அதாவது, “அப்படியே ஆகட்டும்!”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 9

1 நாளாகமம் 16:37

இணைவசனங்கள்

  • +1நா 15:16, 17
  • +1நா 16:4-6
  • +யாத் 29:38; 2நா 13:11; எஸ்றா 3:4

1 நாளாகமம் 16:39

இணைவசனங்கள்

  • +1ரா 3:4
  • +1நா 12:28

1 நாளாகமம் 16:40

இணைவசனங்கள்

  • +யாத் 29:39; 2நா 2:4

1 நாளாகமம் 16:41

இணைவசனங்கள்

  • +1நா 25:1
  • +1நா 16:4
  • +2நா 5:13; எஸ்றா 3:11

1 நாளாகமம் 16:42

இணைவசனங்கள்

  • +1நா 6:31, 33; 15:16, 17
  • +1நா 25:1, 3

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

1 நா. 16:11ரா 8:1; 1நா 15:1
1 நா. 16:12சா 6:17-19; 1ரா 8:5
1 நா. 16:2லேவி 1:3
1 நா. 16:2லேவி 3:1
1 நா. 16:4எண் 18:2
1 நா. 16:51நா 6:31, 39
1 நா. 16:51நா 15:18
1 நா. 16:51நா 15:21
1 நா. 16:51நா 15:17, 19
1 நா. 16:71நா 6:31, 39
1 நா. 16:8சங் 106:1
1 நா. 16:8சங் 67:2; 105:1-6; ஏசா 12:4
1 நா. 16:92சா 23:1; எபே 5:19
1 நா. 16:9சங் 107:43
1 நா. 16:10லேவி 22:32; ஏசா 45:25; எரே 9:24
1 நா. 16:101நா 28:9; பிலி 4:4
1 நா. 16:11ஆமோ 5:4; செப் 2:3
1 நா. 16:11சங் 24:5, 6
1 நா. 16:12ஏசா 41:8
1 நா. 16:12சங் 135:4
1 நா. 16:13சங் 111:2-4
1 நா. 16:14சங் 95:7
1 நா. 16:14சங் 105:7-11
1 நா. 16:15உபா 7:9
1 நா. 16:16ஆதி 15:18; 17:1, 2
1 நா. 16:16ஆதி 26:3-5
1 நா. 16:17ஆதி 28:14
1 நா. 16:18ஆதி 12:7; 17:8; 35:12
1 நா. 16:18உபா 32:8
1 நா. 16:19ஆதி 34:30; உபா 26:5; சங் 105:12-15
1 நா. 16:20ஆதி 20:1; 46:6
1 நா. 16:21ஆதி 31:7, 42
1 நா. 16:21ஆதி 12:17; 20:3
1 நா. 16:22ஆதி 20:7
1 நா. 16:23சங் 40:10; 96:1-6
1 நா. 16:25யாத் 15:11
1 நா. 16:26ஏசா 45:20; 1கொ 8:4
1 நா. 16:26ஏசா 44:24
1 நா. 16:27உபா 33:26; சங் 8:1
1 நா. 16:271தீ 1:11
1 நா. 16:28சங் 68:34; 96:7-13
1 நா. 16:29உபா 28:58; நெ 9:5; சங் 148:13
1 நா. 16:291நா 29:3-5; மத் 5:23
1 நா. 16:29உபா 26:10
1 நா. 16:30சங் 104:5; பிர 1:4
1 நா. 16:31சங் 97:1
1 நா. 16:31வெளி 19:6
1 நா. 16:342நா 5:13; லூ 18:19
1 நா. 16:34சங் 103:17; எரே 31:3; புல 3:22
1 நா. 16:35சங் 68:20
1 நா. 16:35சங் 122:4
1 நா. 16:35ஏசா 43:21
1 நா. 16:371நா 15:16, 17
1 நா. 16:371நா 16:4-6
1 நா. 16:37யாத் 29:38; 2நா 13:11; எஸ்றா 3:4
1 நா. 16:391ரா 3:4
1 நா. 16:391நா 12:28
1 நா. 16:40யாத் 29:39; 2நா 2:4
1 நா. 16:411நா 25:1
1 நா. 16:411நா 16:4
1 நா. 16:412நா 5:13; எஸ்றா 3:11
1 நா. 16:421நா 6:31, 33; 15:16, 17
1 நா. 16:421நா 25:1, 3
  • பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
  • ஆராய்ச்சி பைபிள் (nwtsty)-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
1 நாளாகமம் 16:1-43

1 நாளாகமம்

16 உண்மைக் கடவுளின் பெட்டியை வைப்பதற்காக தாவீது போட்டிருந்த கூடாரத்துக்குள் அதைக் கொண்டுவந்து வைத்தார்கள்.+ பின்பு, உண்மைக் கடவுளுக்கு முன்னால் தகன பலிகளையும் சமாதான பலிகளையும் கொடுத்தார்கள்.+ 2 தாவீது தகன பலிகளையும்+ சமாதான பலிகளையும்+ கொடுத்த பின்பு, யெகோவாவுடைய பெயரில் மக்களை ஆசீர்வதித்தார். 3 அதோடு, அங்கே வந்திருந்த இஸ்ரவேலர்கள் எல்லாருக்கும், ஆண்கள் பெண்கள் ஒவ்வொருவருக்கும், ஒரு வட்ட ரொட்டியையும் பேரீச்ச அடையையும் உலர்ந்த திராட்சை அடையையும் கொடுத்தார். 4 பின்பு, யெகோவாவின் பெட்டிக்கு+ முன்னால் சேவை செய்வதற்கும் இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவை மகிமைப்படுத்துவதற்கும்* போற்றிப் புகழ்வதற்கும் அவருக்கு நன்றி சொல்வதற்கும் சில லேவியர்களை நியமித்தார். 5 அவர்களுடைய தலைவர் ஆசாப்.+ அவருக்கு அடுத்த இடத்தில் சகரியா இருந்தார். எயியேல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்-ஏதோம், எயியேல்+ ஆகியோர் யாழ்களையும் மற்ற நரம்பிசைக் கருவிகளையும் வாசித்தார்கள்.+ ஆசாப் ஜால்ராக்களைத் தட்டி ஓசையெழுப்பினார்.+ 6 குருமார்களான பெனாயாவும் யகாசியேலும் உண்மைக் கடவுளின் ஒப்பந்தப் பெட்டிக்கு முன்னால் எப்போதும் எக்காளங்களை ஊதினார்கள்.

7 அன்று யெகோவாவுக்கு முதன்முதலில் தாவீது நன்றிப் பாடலை எழுதினார், அந்தப் பாடலைப் பாடச் சொல்லி ஆசாப்பிடமும்+ அவருடைய சகோதரர்களிடமும் சொன்னார். அந்தப் பாடல் இதுதான்:

 8 “யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள்,+ அவருடைய பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள்.

அவருடைய செயல்களை எல்லாருக்கும் சொல்லுங்கள்!+

 9 அவருக்காகப் பாடல் பாடுங்கள், அவரைப் புகழ்ந்து பாடுங்கள்,+

அவருடைய அதிசயமான செயல்கள் எல்லாவற்றையும் ஆழ்ந்து யோசியுங்கள்.*+

10 அவருடைய பரிசுத்த பெயரைப் பற்றிப் பெருமையாகப் பேசுங்கள்.+

யெகோவாவை நாடுகிறவர்களின் இதயம் சந்தோஷத்தில் துள்ளட்டும்.+

11 யெகோவாவைத் தேடுங்கள்,+ அவரிடம் பலம் கேட்டு வேண்டுங்கள்.

எப்போதும் அவருடைய முகத்தையே நாடுங்கள்.+

12 அவருடைய ஊழியரான இஸ்ரவேலின் சந்ததியே,+ யாக்கோபின் வம்சமே, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனமே!+

13 அவர் செய்த அதிசயமான செயல்களையும்+ அற்புதங்களையும்

அவர் கொடுத்த நீதித்தீர்ப்புகளையும் நினைத்துப் பாருங்கள்.

14 அவர்தான் நம் கடவுளாகிய யெகோவா.+

அவருடைய நீதித்தீர்ப்புகள் பூமி முழுவதும் கொடுக்கப்படுகின்றன.+

15 அவர் செய்த ஒப்பந்தத்தை எப்போதும் நினைத்துப் பாருங்கள்;

ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்குத் தந்த வாக்குறுதியை நினைத்துப் பாருங்கள்.+

16 ஆபிரகாமோடு செய்த ஒப்பந்தத்தையும்,+

ஈசாக்குக்குக் கொடுத்த உறுதிமொழியையும்+ நினைத்துப் பாருங்கள்,

17 அதை யாக்கோபுக்கு ஓர் ஆணையாகவும்,+

இஸ்ரவேலுக்கு ஒரு நிரந்தர ஒப்பந்தமாகவும் கொடுத்து உறுதிப்படுத்தினார்.

18 அப்போது, ‘கானான் தேசத்தை+ உனக்குச் சொத்தாகத் தருவேன்’+ என்று சொன்னார்.

19 அந்தச் சமயத்தில் அவர்கள் கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள்,

கொஞ்சத்திலும் கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள், அந்தத் தேசத்தில் அன்னியர்களாக இருந்தார்கள்.+

20 தேசம் தேசமாக அவர்கள் அலைந்து திரிந்தார்கள்,

ராஜ்யம் ராஜ்யமாகச் சுற்றித் திரிந்தார்கள்.+

21 அவர்களை அடக்கி ஒடுக்க எந்த மனிதனையும் கடவுள் அனுமதிக்கவில்லை,+

ஆனால், அவர்களுக்காக ராஜாக்களையே கண்டித்து,+

22 ‘நான் தேர்ந்தெடுத்தவர்கள்மேல்* கை வைக்காதீர்கள்,

என் தீர்க்கதரிசிகளுக்கு எந்தக் கெடுதலும் செய்யாதீர்கள்’+ என்று சொன்னார்.

23 பூமியெங்கும் உள்ளவர்களே, யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்!

அவர் தரும் மீட்பைப் பற்றித் தினம் தினம் அறிவியுங்கள்!+

24 அவருடைய மகிமையைப் பற்றித் தேசங்களுக்குச் சொல்லுங்கள்,

அவருடைய அற்புதமான செயல்களைப் பற்றி எல்லா மக்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

25 யெகோவா மகத்தானவர், எல்லா புகழையும் பெறத் தகுதியானவர்.

மற்ற எல்லா தெய்வங்களையும்விட அதிக பயபக்திக்குரியவர்.+

26 மக்கள் வணங்கும் தெய்வங்களெல்லாம் ஒன்றுக்குமே உதவாத தெய்வங்கள்,+

ஆனால், யெகோவாதான் வானத்தைப் படைத்தவர்.+

27 மகத்துவமும் மேன்மையும் அவருடைய சன்னிதியில் இருக்கின்றன.+

பலமும் சந்தோஷமும் அவருடைய வீட்டில் இருக்கின்றன.+

28 ஜனங்களின் வம்சங்களே, யெகோவாவுக்குச் செலுத்த வேண்டிய புகழைச் செலுத்துங்கள்,

யெகோவாவின் மகிமைக்கும் பலத்துக்கும் செலுத்த வேண்டிய புகழைச் செலுத்துங்கள்.+

29 யெகோவாவின் பெயருக்குக் கொடுக்க வேண்டிய மகிமையைக் கொடுங்கள்;+

காணிக்கையோடு அவர் முன்னால் வாருங்கள்.+

பரிசுத்த உடையில்* யெகோவாவை வணங்குங்கள்.*+

30 பூமியெங்கும் உள்ளவர்களே! அவர் முன்னால் நடுநடுங்குங்கள்!

பூமி உறுதியாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது, அதை அசைக்கவே முடியாது.+

31 வானம் சந்தோஷப்படட்டும், பூமி பூரித்துப்போகட்டும்;+

‘யெகோவா ராஜாவாகிவிட்டார்!’ என்று தேசங்களுக்குச் சொல்லுங்கள்.+

32 கடலும் அதில் நிறைந்திருப்பவையும் முழக்கம் செய்யட்டும்;

வயல்களும் அவற்றிலுள்ள அனைத்தும் ஆனந்தப்படட்டும்.

33 அவற்றோடு சேர்ந்து காட்டு மரங்களும் கடவுளுக்குமுன் சந்தோஷக் குரல் எழுப்பட்டும்.

ஏனென்றால், யெகோவா பூமிக்குத் தீர்ப்பு கொடுக்க வருகிறார்.

34 யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர்;+

அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.+

35 ‘எங்களை மீட்கிற கடவுளே, எங்களைக் காப்பாற்றுங்கள்,+

மற்ற தேசங்களிலிருந்து எங்களைக் கூட்டிச்சேர்த்து எங்களைக் காப்பாற்றுங்கள்.

அப்போது, உங்களுடைய பரிசுத்தமான பெயருக்கு நன்றி சொல்வோம்,+

சந்தோஷம் பொங்க உங்களைப் புகழ்வோம்.+

36 இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவுக்கு என்றென்றும் புகழ் சேரட்டும்.’”

இந்தப் பாடலைக் கேட்ட மக்கள் எல்லாரும், “ஆமென்!”*

என்று சொல்லி யெகோவாவைப் புகழ்ந்தார்கள்.

37 பின்பு, யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டிக்கு முன்னால் எப்போதும் சேவை செய்ய ஆசாப்பையும்+ அவருடைய சகோதரர்களையும் தாவீது நியமித்தார்.+ அங்கே வழக்கமாகச் செய்ய வேண்டிய வேலைகளை அவர்கள் தினமும் செய்வதற்காக+ அவர்களை நியமித்தார். 38 அதோடு, ஓபேத்-ஏதோமையும் அவருடைய சகோதரர்கள் 68 பேரையும் நியமித்தார். எதித்தூனின் மகன் ஓபேத்-ஏதோமையும் ஓசாவையும் வாயிற்காவலர்களாக நியமித்தார்; 39 யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரம் கிபியோனிலுள்ள+ ஆராதனை மேட்டில் இருந்தது. அங்கே குருவாகிய சாதோக்கும்+ மற்ற குருமார்களும் சேவை செய்தார்கள். 40 தகன பலிக்கான பலிபீடத்தில் காலையும் மாலையும் தவறாமல் யெகோவாவுக்குத் தகன பலி கொடுத்தார்கள். இஸ்ரவேலுக்கு யெகோவா கொடுத்த திருச்சட்டத்தில் உள்ளபடியே எல்லாவற்றையும் செய்தார்கள்.+ 41 அவர்களோடு ஏமானையும் எதித்தூனையும்+ பெயர் பெயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற ஆண்களையும் யெகோவாவுக்கு நன்றிப் பாடல் பாடுவதற்காக நியமித்தார்கள்;+ “அவர் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்” என்று சொல்லி கடவுளை அவர்கள் புகழ்ந்து பாடினார்கள்.+ 42 ஏமானும்+ எதித்தூனும் எக்காளங்களை ஊதி, ஜால்ராக்களைத் தட்டி, மற்ற இசைக் கருவிகளை இசைத்து உண்மைக் கடவுளைப் புகழ்ந்தார்கள். எதித்தூனின்+ மகன்கள் வாயிற்காவலர்களாகச் சேவை செய்தார்கள். 43 பின்பு, மக்கள் எல்லாரும் தங்களுடைய வீடுகளுக்குப் போனார்கள். தாவீதும் தன்னுடைய குடும்பத்தாரை ஆசீர்வதிப்பதற்காகப் போனார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்