சங்கீதம்
தாவீதின் சங்கீதம்.
29 பலம்படைத்தவர்களின் மகன்களே, யெகோவாவுக்குச் செலுத்த வேண்டிய புகழைச் செலுத்துங்கள்.
யெகோவாவின் மகிமைக்கும் பலத்துக்கும் செலுத்த வேண்டிய புகழைச் செலுத்துங்கள்.+
2 யெகோவாவின் பெயருக்குக் கொடுக்க வேண்டிய மகிமையைக் கொடுங்கள்.
பரிசுத்த உடையில்* யெகோவாவை வணங்குங்கள்.*
திரண்டிருக்கும் தண்ணீர்மேல் யெகோவா இருக்கிறார்.+
5 யெகோவாவின் குரல் தேவதாரு மரங்களை முறிக்கிறது.
ஆம், யெகோவாவின் குரல் லீபனோனின் தேவதாரு மரங்களை முறித்துப்போடுகிறது.+
7 யெகோவாவின் குரல் தீ ஜுவாலைகளைத் தெறிக்க வைக்கிறது.+
8 யெகோவாவின் குரல் வனாந்தரத்தை அதிர வைக்கிறது.+
யெகோவா காதேஸ்+ வனாந்தரத்தை அதிர வைக்கிறார்.
9 யெகோவாவின் குரல் மான்களை நடுங்கச் செய்து குட்டி போட வைக்கிறது.
அவருடைய குரல் காடுகளை வெட்டவெளியாக்குகிறது.+
அவருடைய ஆலயத்திலுள்ள எல்லாரும் அவருக்கு மகிமை சேர்க்கிறார்கள்.*
11 யெகோவா தன்னுடைய மக்களுக்குப் பலம் தருவார்.+
யெகோவா தன்னுடைய மக்களுக்குச் சமாதானம் அருளுவார்.+