சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம்.
21 யெகோவாவே, நீங்கள் பலம் தருவதால் ராஜா சந்தோஷமாக இருக்கிறார்.+
நீங்கள் தரும் மீட்பினால் அவர் எவ்வளவாய்ப் பூரித்துப்போகிறார்!+
2 மனதுக்குள்* அவர் ஆசைப்பட்டதை நீங்கள் நிறைவேற்றியிருக்கிறீர்கள்.+
அவர் வாய்திறந்து கேட்ட எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறீர்கள். (சேலா)
3 ஏராளமான ஆசீர்வாதங்களோடு வந்து அவரைச் சந்திக்கிறீர்கள்.
சொக்கத்தங்கத்தில்* செய்யப்பட்ட கிரீடத்தை அவருக்குச் சூட்டுகிறீர்கள்.+
4 அவர் உங்களிடம் ஆயுளைக் கேட்டார், நீங்களும் தந்தீர்கள்.+
நீண்ட ஆயுளைத் தந்து, என்றென்றும் வாழ வைத்தீர்கள்.
5 நீங்கள் தரும் மீட்பினால் அவருக்குப் பேரும் புகழும் கிடைக்கிறது.+
நீங்கள் அவருக்கு மதிப்பையும் மேன்மையையும் தருகிறீர்கள்.
6 அவரை என்றென்றும் ஆசீர்வதிக்கிறீர்கள்.+
உங்கள் சன்னிதியில் இருக்கும் சந்தோஷத்தை அவருக்குக் கொடுக்கிறீர்கள்.+
7 ஏனென்றால், யெகோவாமேல் ராஜா நம்பிக்கை வைத்திருக்கிறார்.+
உன்னதமான கடவுள் அவருக்கு மாறாத அன்பைக் காட்டுவதால் அவர் அசைக்கப்படவே* மாட்டார்.+
8 உங்களுடைய கை உங்கள் எதிரிகள் எல்லாரையும் தேடிப் பிடிக்கும்.
உங்களுடைய வலது கை உங்களை வெறுக்கிற எல்லாரையும் எட்டிப் பிடிக்கும்.
9 அவர்களுக்கு எதிராக நீங்கள் முகத்தைத் திருப்பும்போது, அவர்கள் நெருப்புச் சூளையைப் போல ஆவார்கள்.
யெகோவா கோபத்தோடு அவர்களை விழுங்குவார், நெருப்பு அவர்களைச் சுட்டுப்பொசுக்கும்.+
10 அவர்களுடைய பிள்ளைகளை இந்தப் பூமியிலிருந்தே அழித்துவிடுவீர்கள்.
அவர்களுடைய சந்ததியை இந்த உலகத்திலிருந்தே ஒழித்துக்கட்டுவீர்கள்.
11 ஏனென்றால், அவர்கள் உங்களுக்குக் கெட்டது செய்ய நினைத்தார்கள்.+
அவர்கள் போட்ட சதித்திட்டங்கள் எதுவும் வெற்றி பெறாது.+
13 யெகோவாவே, எழுந்து வந்து உங்களுடைய பலத்தைக் காட்டுங்கள்.
உங்களுடைய வல்லமையைப் பற்றி நாங்கள் புகழ்ந்து* பாடுவோம்.