சங்கீதம்
95 வாருங்கள், யெகோவாவுக்கு முன்பாகச் சந்தோஷ ஆரவாரம் செய்வோம்!
நம்மை மீட்கும் கற்பாறைக்கு முன்பாக வெற்றி முழக்கம் செய்வோம்!+
6 வாருங்கள், அவரை வணங்குவோம்; அவர்முன் தலைவணங்குவோம்.
நம்மைப் படைத்த யெகோவாவுக்குமுன் மண்டிபோடுவோம்.+
7 ஏனென்றால், அவர்தான் நம் கடவுள்.
நாம் அவருடைய ஜனங்களாகவும்,
அவர் அக்கறையோடு மேய்க்கிற ஆடுகளாகவும் இருக்கிறோம்.+
இன்று நீங்கள் அவருடைய பேச்சைக் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!+
8 உங்களுடைய முன்னோர்கள் மேரிபாவில்* செய்தது போலவும்,
வனாந்தரத்திலுள்ள மாசாவில்* செய்தது போலவும்,+
உங்கள் இதயத்தை இறுகிப்போகச் செய்யாதீர்கள்.+
9 அங்கே அவர்கள் என்னைச் சோதித்தார்கள்.+
நான் செய்த செயல்களைப் பார்த்திருந்தும், என்னிடமே சவால்விட்டார்கள்.+
10 நாற்பது வருஷங்களாக அந்தத் தலைமுறை செய்ததெல்லாம் எனக்கு வெறுப்பாக இருந்தது.
“அவர்களுடைய இதயம் எப்போதும் வழிவிலகிப் போகிறது” என்றும்,
“அவர்கள் என் வழிகளைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்” என்றும் சொன்னேன்.
11 “அவர்கள் என்னோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க மாட்டார்கள்”+ என்று
கோபத்தோடு ஆணையிட்டுச் சொன்னேன்.