7 பின்பு யெகோவா ஆபிராமுக்குத் தோன்றி, “உன்னுடைய சந்ததிக்கு+ இந்தத் தேசத்தைக் கொடுப்பேன்”+ என்று சொன்னார். அதனால், ஆபிராம் யெகோவாவுக்காக அங்கே ஒரு பலிபீடம் கட்டினார்.
15அதன்பின் யெகோவா ஒரு தரிசனத்தில், “ஆபிராமே, பயப்படாதே.+ நான் உனக்குக் கேடயமாக இருக்கிறேன்.+ உனக்கு மிகப் பெரிய ஆசீர்வாதத்தைத் தருவேன்”+ என்று சொன்னார்.
23 இப்படி, “ஆபிரகாம் யெகோவாமேல்* விசுவாசம் வைத்தார், அதனால் அவர் நீதிமானாகக் கருதப்பட்டார்” என்ற வேதவசனம் நிறைவேறியது.+ அவர் யெகோவாவின்* நண்பர் என்று அழைக்கப்பட்டார்.+