11 யெகோவா இப்படிச் சொல்கிறார்:
‘ஏதோம் திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.
வாளை எடுத்துக்கொண்டு சொந்த சகோதரனையே அவன் துரத்தினான்.+
இரக்கம் காட்ட மறுத்துவிட்டான்.
இன்னமும் வெறித்தனமாகத் தாக்கிக்கொண்டே இருக்கிறான்.
பயங்கர கோபத்தைக் காட்டிக்கொண்டே இருக்கிறான்.+