-
எண்ணாகமம் 14:13-16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 ஆனால் மோசே யெகோவாவிடம், “இவர்களை உங்களுடைய வல்லமையால் எகிப்தியர்களிடமிருந்து விடுவித்துக்கொண்டு வந்தீர்களே. இப்போது இவர்களை நீங்கள் அழித்துவிட்டால் அந்த எகிப்தியர்கள் அதைக் கேள்விப்பட மாட்டார்களா?+ 14 அதைப் பற்றி கானான் தேசத்து ஜனங்களுக்குச் சொல்ல மாட்டார்களா? யெகோவாவாகிய நீங்கள் இஸ்ரவேலர்களோடு இருக்கிறீர்கள், இவர்கள் முன்னால் நேருக்கு நேராகத் தோன்றியிருக்கிறீர்கள்+ என்பதையெல்லாம் அந்தத் தேசத்து ஜனங்களும் கேள்விப்பட்டிருக்கிறார்களே.+ அதுமட்டுமல்ல, நீங்கள் யெகோவா, உங்களுடைய மேகம் இவர்களுக்கு மேலே இருக்கிறது, பகலில் மேகத் தூணிலும் ராத்திரியில் நெருப்புத் தூணிலும் இவர்களுக்கு முன்னால் போகிறீர்கள்+ என்பதையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறார்களே. 15 அப்படியிருக்கும்போது, இஸ்ரவேல் ஜனங்களை நீங்கள் ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டால், உங்களுடைய பெயரையும் புகழையும் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிற தேசத்தாரெல்லாம் என்ன சொல்வார்கள்? 16 ‘இந்த ஜனங்களுக்குக் கொடுப்பதாகச் சொன்ன தேசத்துக்கு யெகோவாவினால் இவர்களைக் கூட்டிக்கொண்டு போக முடியவில்லை, அதனால்தான் இவர்களை வனாந்தரத்தில் அழித்துவிட்டார்’ என்று சொல்ல மாட்டார்களா?+
-
-
உபாகமம் 9:27, 28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 உங்கள் ஊழியர்களாகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் நினைத்துப் பாருங்கள்.+ இந்த ஜனங்களுடைய பிடிவாதத்தையும் அக்கிரமத்தையும் பாவத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.+ 28 இல்லாவிட்டால், “வாக்குக் கொடுத்த தேசத்துக்கு இஸ்ரவேலர்களைக் கூட்டிக்கொண்டு போக யெகோவாவுக்குச் சக்தியில்லை. அவர்களை அவர் வெறுத்துவிட்டார். அதனால்தான் அவர்களை வனாந்தரத்துக்குக் கொண்டுவந்து கொன்றுபோட்டார்” என்று எகிப்தியர்கள் சொல்வார்களே.+
-