-
ஏசாயா 53:1-12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
53 நாங்கள் சொன்ன விஷயத்தைக் கேட்டு அதில்* விசுவாசம் வைத்தது யார்?+
யெகோவா யாருக்குத் தன்னுடைய பலத்தை*+ காட்டியிருக்கிறார்?+
2 அவர் துளிர்போல்+ அவருக்குமுன்* துளிர்ப்பார்; வறண்ட நிலத்திலுள்ள வேர்போல் இருப்பார்.
3 வலிகளையும் வியாதிகளையும் அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார்.
ஆனாலும், ஜனங்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டார்.+
ஒருவிதத்தில், அவருடைய முகம் நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது.*
நாம் அவரை வெறுத்தோம்; அவரைக் கொஞ்சம்கூட மதிக்கவில்லை.+
நாமோ கடவுள்தான் அவருக்குத் தண்டனையையும்,* அடியையும், வேதனையையும் கொடுத்ததாக நினைத்தோம்.
5 ஆனால், நம்முடைய குற்றத்துக்காகத்தான் அவர் குத்தப்பட்டார்.+
நம்முடைய பாவங்களுக்காகத்தான் அவர் கொடுமைப்படுத்தப்பட்டார்.+
நமக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைப்பதற்காகத்தான் அவர் தண்டனையை ஏற்றுக்கொண்டார்.+
அவருடைய காயங்களால்தான் நாம் குணமானோம்.+
6 நாம் எல்லாரும் ஆடுகளைப் போல அலைந்து திரிந்தோம்.+
நமக்கு இஷ்டமான வழியில் போனோம்.
ஆனால், நம் எல்லாருடைய பாவங்களையும் அவர் சுமக்கும்படி யெகோவா செய்தார்.+
வெட்டப்படுவதற்காகக் கொண்டுபோகப்படும் ஆட்டைப் போலவும்,+
மயிர் கத்தரிப்பவர்களின் முன்னால் அமைதியாக இருக்கிற செம்மறியாட்டைப் போலவும்,
அவர் வாயே திறக்கவில்லை.+
8 அவர் அநியாயமாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.*
அவருடைய வம்சத்தின்* விவரங்களைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்?
அவர்தான் இந்த உலகத்திலிருந்து ஒழித்துக்கட்டப்பட்டாரே.+
9 அவருடைய பேச்சில் சூதுவாதே இல்லை.
அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை.*+
ஆனாலும், பொல்லாதவர்கள் நடுவே அவருக்குக் கல்லறை கொடுக்கப்பட்டது.+
அவர் இறந்தபோது பணக்காரரோடு இருந்தார்.+
10 அவரை வேதனைகளால் நொறுக்க யெகோவா முடிவுசெய்தார்.*
அதனால், அவர் பாடுகள் படுவதற்கு விட்டுவிட்டார்.
கடவுளே, நீங்கள் அவருடைய உயிரைக் குற்றநிவாரண பலியாகக் கொடுத்தால்,+
அவர் தன்னுடைய வம்சத்தைப் பார்ப்பார்; காலம்காலமாக வாழ்வார்.+
அவர் மூலமாக யெகோவாவின் விருப்பம் நிறைவேறும்.+
11 தான் பட்ட பாடுகளுக்கான பலனைப் பார்த்து அவர் மனநிறைவு அடைவார்.
-