-
மத்தேயு 26:6-9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 பெத்தானியாவில், முன்பு தொழுநோயாளியாக இருந்த சீமோனின் வீட்டில் இயேசு+ சாப்பிட உட்கார்ந்திருந்தார். 7 அப்போது ஒரு பெண், விலை உயர்ந்த வாசனை எண்ணெயை வெண்சலவைக்கல் குப்பி ஒன்றில் எடுத்துவந்து, அதை அவருடைய தலையில் ஊற்ற ஆரம்பித்தாள். 8 அதைப் பார்த்த சீஷர்கள் கோபப்பட்டு, “ஏன் இதை இப்படி வீணாக்குகிறாள்? 9 இதை நல்ல விலைக்கு விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்று பேசிக்கொண்டார்கள்.
-
-
யோவான் 12:2-5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 அங்கே அவருக்குச் சாயங்கால உணவு பரிமாறப்பட்டது. மார்த்தாள்தான் பரிமாறிக்கொண்டிருந்தாள்,+ அவரோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களில் லாசருவும் ஒருவன். 3 அப்போது மரியாள் சுத்தமான, மிகவும் விலை உயர்ந்த சடாமாஞ்சி என்ற வாசனை எண்ணெயை எடுத்துவந்தாள். ஒரு ராத்தல்* அளவுள்ள அந்த எண்ணெயை இயேசுவின் பாதங்களில் ஊற்றி, தன்னுடைய கூந்தலால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள். வீடு முழுவதும் அந்த எண்ணெய் வாசம் வீசியது.+ 4 ஆனால், அவருடைய சீஷர்களில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாஸ் இஸ்காரியோத்து,+ 5 “இந்த வாசனை எண்ணெயை 300 தினாரியுவுக்கு* விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டான்.
-