-
மாற்கு 2:3-12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 அப்போது, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவனை நான்கு பேர் தூக்கிக்கொண்டு வந்தார்கள்.+ 4 கூட்டம் அதிகமாக இருந்ததால் இயேசுவுக்குப் பக்கத்தில் அவனைக் கொண்டுபோக முடியவில்லை. அதனால், அவர் இருந்த இடத்துக்கு மேலே கூரையில் ஒரு திறப்பு உண்டாக்கி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனைப் படுக்கையோடு கீழே இறக்கினார்கள். 5 அவர்களுடைய விசுவாசத்தை இயேசு பார்த்து,+ பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனிடம், “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன”+ என்று சொன்னார். 6 அங்கே உட்கார்ந்திருந்த வேத அறிஞர்கள் சிலர், 7 “இந்த மனுஷன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் தெய்வ நிந்தனை செய்கிறான். கடவுள் ஒருவரைத் தவிர வேறு யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?”+ என்று தங்கள் இதயங்களில் யோசித்துக்கொண்டிருந்தார்கள்.+ 8 அவர்கள் அப்படி யோசித்துக்கொண்டிருந்ததை இயேசு உடனடியாகப் புரிந்துகொண்டு, “உங்கள் இதயத்தில் ஏன் இப்படி யோசிக்கிறீர்கள்?+ 9 இந்தப் பக்கவாத நோயாளியிடம், ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன’ என்று சொல்வது சுலபமா, அல்லது ‘எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று சொல்வது சுலபமா? 10 ஆனாலும், பூமியில் பாவங்களை மன்னிக்கிற அதிகாரம்+ மனிதகுமாரனுக்கு+ இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்வதற்காக—” என்று சொல்லிவிட்டு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனிடம், 11 “நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போ” என்றார். 12 உடனடியாக அவன் எழுந்து, தன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்கும் முன்னால் வெளியே நடந்துபோனான்; அதைப் பார்த்த எல்லாரும் மிகவும் ஆச்சரியப்பட்டு, “இந்த மாதிரி ஒன்றை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை”+ என்று சொல்லி கடவுளை மகிமைப்படுத்தினார்கள்.
-