25 கிறிஸ்துவின் இரத்தத்தில் விசுவாசம் வைப்பதன் மூலம்+ மனிதர்கள் தன்னோடு சமாதானமாவதற்காக அவரைப் பிராயச்சித்த பலியாக* கடவுள் கொடுத்தார்.+ முற்காலத்தில் செய்யப்பட்ட பாவங்களைச் சகித்துக்கொண்டு மன்னித்தது நீதியான செயல் என்பதைக் காட்டுவதற்காக அவர் அப்படிச் செய்தார்.
15 பாவிகளை மீட்பதற்காகக் கிறிஸ்து இயேசு உலகத்துக்கு வந்தார்+ என்ற வார்த்தை உண்மையானது, முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது. அந்தப் பாவிகளில் பெரும் பாவி நான்தான்.+
17 அதனால், எல்லா விதத்திலும் அவர் தன்னுடைய ‘சகோதரர்களை’ போல ஆக வேண்டியிருந்தது.+ இரக்கமும் உண்மையும் உள்ள தலைமைக் குருவாகக் கடவுளுக்குச் சேவை செய்து, மக்களுடைய பாவங்களுக்காகப்+ பிராயச்சித்த பலி+ கொடுப்பதற்காக* அவர்களைப் போலானார்.
10 நாம் கடவுள்மேல் அன்பு காட்டியதால் அல்ல, அவர் நம்மேல் அன்பு காட்டியதால்தான் நம் பாவங்களுக்குப்+ பிராயச்சித்த பலியாக*+ தன்னுடைய மகனை அனுப்பினார், இதுதான் அன்பு.