18 அதன் இரத்தம் பரிசுத்த இடத்துக்குள் கொண்டுவரப்படவில்லையே!+ அதனால், கடவுள் எனக்குக் கட்டளை கொடுத்தபடி அதன் இறைச்சியைப் பரிசுத்த இடத்தில் நீங்கள் கண்டிப்பாகச் சாப்பிட்டிருக்க வேண்டும்” என்றார்.
27 பாவப் பரிகார பலியாக வெட்டப்பட்ட காளையையும் வெள்ளாட்டுக் கடாவையும் முகாமுக்கு வெளியே கொண்டுபோக வேண்டும். அவற்றின் இரத்தம்தான் பாவப் பரிகாரம் செய்வதற்காக மகா பரிசுத்த அறைக்குள் கொண்டுவரப்பட்ட இரத்தம். அவற்றின் தோலையும் சதையையும் சாணத்தையும் நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.+
11 ஏனென்றால், பாவப் பரிகார பலியாக எந்த மிருகங்களின் இரத்தத்தைத் தலைமைக் குரு மகா பரிசுத்த அறைக்குள் கொண்டுபோகிறாரோ அந்த மிருகங்களின் உடல்கள் முகாமுக்கு வெளியே சுட்டெரிக்கப்படுகின்றன.+