-
யாத்திராகமம் 29:13, 14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
13 அதன் குடல்களைச் சுற்றியுள்ள எல்லா கொழுப்பையும்+ கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் இரண்டு சிறுநீரகங்களையும் அவற்றின் மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின் மேல் எரித்துவிடு.+ 14 ஆனால், காளையின் சதையையும் தோலையும் சாணத்தையும் முகாமுக்கு வெளியே கொண்டுபோய்ச் சுட்டெரித்துவிடு. இந்தக் காளைதான் பாவப் பரிகார பலி.
-
-
லேவியராகமம் 4:8, 9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 பின்பு, பாவப் பரிகார பலியாகச் செலுத்தப்படுகிற காளையின் கொழுப்பு முழுவதையும் அவர் எடுக்க வேண்டும். குடல்களின் மேலும் அவற்றைச் சுற்றிலும் உள்ள கொழுப்பையும், 9 இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றின் மேலுள்ள கொழுப்பையும், அதாவது இடுப்புப் பகுதியிலுள்ள கொழுப்பையும், எடுக்க வேண்டும். சிறுநீரகங்களை எடுக்கும்போது கல்லீரலின் மேலுள்ள சவ்வையும் எடுக்க வேண்டும்.+
-
-
லேவியராகமம் 8:20பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
20 அந்தச் செம்மறியாட்டுக் கடாவைத் துண்டு துண்டாக வெட்டி, அதன் தலையையும் துண்டுகளையும் கொழுப்பையும் எரித்தார்.
-